உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g87 9/8 பக். 17
  • மனநோய்—அந்த மர்ம வியாதி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மனநோய்—அந்த மர்ம வியாதி
  • விழித்தெழு!—1987
  • இதே தகவல்
  • மனநோய் பற்றிய உண்மைகள்
    விழித்தெழு!—2015
  • ஈடிணையற்ற ஆனந்தம்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • மனநோய்—ஒரு பரிகாரம் இருக்கிறதா?
    விழித்தெழு!—1987
  • மனநோய்—உலக பிரச்சினை
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2023
மேலும் பார்க்க
விழித்தெழு!—1987
g87 9/8 பக். 17

மனநோய்—அந்த மர்ம வியாதி

எது தவறாகப்போனது என்று ஐரீனுக்கு ஒன்றும் தெரியவில்லை. “நான் முப்பது வயதுள்ளவளாக இருந்தேன்” என்று அவள் நினைவுகூறுகிறாள், “நான் இரண்டு குழந்தைகளைப் பராமரித்துவரும். வேலைசெய்யும் ஒரு தாய். நான் சில பிரச்னைகளைக் கொண்டிருந்தேன். உண்மைதான். ஆனால் அவை அசாதாரணமானவையாகத்தோன்றவில்லை.” அதாவது, அவளுடைய நோயின் முதல் அடையாளங்கள் தோன்றும் வரையாக.

ஒருநாள் முற்றிலுமாக முன்பின் தெரியாதவர் ஒருவரை அணுகி, அவள்தான் உன்னுடைய மாண்டுபோன சகோதரி என்று வற்புறுத்தினேன். அவளுடைய தோற்றமும் பேச்சும் என்னுடைய சகோதரியைப் போலவே இருந்தது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அதுதான் உண்மையிலிருந்து விலகிப்போகும் என்னுடைய முதலாவது சந்தர்ப்பம்.”

“சில கலத்திற்குப் பின்பு, நான் அழகுசாதன கடையிலிருந்து வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும்போது அழ ஆரம்பித்தேன். என்னுடைய கணவர் என்னைவிட்டுப் பிரிந்துவிட்டார் என்றும் குழந்தைகளை என்னிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டார் என்றும் அப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன்! ஆனால் நான் வீடுவந்துசேர்ந்தேன். அவர்கள் இன்னும் அங்கேயே இருந்தார்கள். ஏதோ, தவறு இருக்கிறது என்று என்னுடைய கணவர் உணர்ந்தார், என்னுடைய சகோதரிகளில் ஒருவரின் வீட்டுக்குக் கூட்டிச்சென்றார். இருப்பினும், அவள் என்னைக் கொல்ல விரும்பினாள் என்பதைப் புரிந்துகொண்டேன்! என்னை மருத்துவமனையில் சேர்க்க என்னுடைய கணவர் தீர்மானித்தார்.”

மருத்துவமனையில் சேர்க்கப்படுதல், மனநோய்க்கான காரணங்களைக் காணும் மனதைப் பற்றிய ஆராய்ச்சி (pacho analysis) அதிர்ச்சி மருத்துவம், (shock therapy) மருந்து உட்கொள்ளுதல், (medication) ஆகியவை உள்ளடங்கிய ஐரீனின் நீண்டபயணம்—அவளுடைய வாழ்க்கையைத் தலைகீழாக்கிவிட்ட மர்ம நோய்க்கான பரிகாரத்தைத் தேடும் முயற்சி இவ்வாறு ஆரம்பித்தது.

மனநோய், மனிதவர்க்கத்தின் துயரத்தில் பெரும்பகுதிக்குக் காரணமாக இருக்கிறது என்பது திகைப்பூட்டுகிறது. இளம் அமெரிக்கர்களில் சுமார் ஐந்துபேருக்கு ஒருவர் ஒரு மனநோய் கோளாறினால் பாதிக்கப்படுகிறார் என்று அமெரிக்க தேசீய மனநலக் கழகம் (The U.S. National Institute of Mental Health) உரிமை பாராட்டுகிறது. உலகத்தின் முன்னேறும் பகுதிகளில் சிகிச்சை பெறாத சுமார் 4 கோடி பேர் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO 1975a) அறிக்கையிடுகிறது; 20 கோடிபேர் தீவிரம் குறைந்த கோளாறுகளினால் அவதிப்படுகிறார்கள்.”—The World Challenge to Psychiatry.

வெறுமெனே எண்களால் மட்டுமே மனநோயின் வேதனையை அளவிடமுடியாது. மற்றவர்களுக்காக தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை அர்ப்பணித்திருக்கும், ஆனால் இப்பொழுது இனிமேலும் அதே ஆளாக இல்லாத ஒரு மகனோடு மருத்துவரின் அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பது எப்படிப்பட்ட உணர்வைக் கொண்டுவரும் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?” என்று மனநோயுள்ள ஒரு நபரின் தாய் கேட்கிறாள். மேலும், மனநோய் என்பது அநேக சமயங்களில் நிந்தையைக் கொண்டுவரும் சின்னமாகவும், நிந்தனை வார்த்தைகளினால் (கிழக்கு, பைத்தியம்) அடையாளம் காட்டப்படும் ஒரு நோயாகவும் இருக்கிறது. மனித நாகரீகத்தின் இடைக்காலப் பகுதியில் இத்தகைய புத்தி கோளாறு உள்ளவர்களை ‘பிசாசு பிடித்தவர்கள்’ என்று அறிவித்தார்கள், ஆனால், இன்றைக்கும் அநேக சமயங்களில் நண்பர்களாலும் குடும்பத்தாராலும் இதைக்காட்டிலும் அதிகம் புரிந்து கொள்ளமுடியவில்லை.

இருப்பினும் மனநோய் தன்னுடைய மர்மத்திரையைக் கீழே இறக்க ஆரம்பித்துள்ளது. சமீப காலக்கண்டுபிடிப்புகள் இந்த நோயின் புதிய புரிந்துகொள்ளுதலைக் கொண்டிருந்திருக்கின்றன. புதிய மருத்துவ முறைகள் முந்திய மனநோயாளிகளை-ஐரீனைப் போன்றவர்களை-வழக்கமான உபயோகமுள்ள வாழ்க்கையை நடத்திட உதவி செய்கின்றன. பின்னால் தொடர்கிற கட்டுரைகள் இந்த ஊக்கமளிக்கிற முன்னேற்றங்களின் மீதும் சமீப எதிர்காலத்திலிருக்கும் நிரந்தரமான பரிகாரத்தில் ஐரீனின் நம்பிக்கைகளின் மீதும் கவனம் செலுத்துகின்றன.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்