இளைஞர் கேட்கின்றனர் . . .
என் மனச்சாட்சி ஏன் என்னை தொல்லைப்படுத்துகிறது?
பதிமூன்று வயது சோரயா உடல்மெலிந்துகொண்டே போனாள்—ஆனால் போஷாக்கு இல்லாத உணவின் காரணமாக அல்ல. “பள்ளியில் நான் மோசமான ஒரு கும்பலோடு சிக்கிக்கொண்டேன். எனக்கு நல்லது தெரிந்திருந்தது, ஆனால் சமவயது சகாக்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்கள். எனவே விரைவில் நான் போதை பொருட்களை பயன்படுத்தி வந்த ஒரு ஆண் சிநேகிதனை கொண்டிருக்கலானேன்” என்று விளக்கினாள் சோரயா. “இதற்கும் உடல் மெலிவிற்கும் என்ன சம்பந்தம்? என்னுடைய மனசாட்சி என்னை அதிக தொல்லைப்படுத்தினபடியால் என்னால் சாப்பிடமுடியவில்லை.”
ஏழு வயது அலெக்ஸ் என்பவன் தன்னைத்தானே வேதனைப்படுத்திக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவன் தரையில் அரிசி தானியத்தை இறைந்துவிட்டு அதன் மீது வேதனையோடு முழங்காற்படியிட்டிருந்தான். இதற்கு காரணம் என்ன? அலெக்ஸ் தன் பெற்றோருக்கு கீழ்படியாமற்போய்விட்டான். எனவே அவன் தன்னைத்தானே தண்டித்துக்கொள்ளுவதற்கு தீர்மானித்துவிட்டான்.
இந்த இரண்டு இளைஞரும் பைபிள், மனசாட்சி என்றழைக்கக்கூடிய ஒன்றிற்கு ஓர் உட்புற குரலுக்கு—மிகக்கடுமையான விதத்தில்—தங்கள் பிரதிபலிப்பை காண்பித்து கொண்டிருந்தார்கள். கடவுளுடைய ஊழியர்கள் தவறிழைத்தபோது அவர்களையுங்கூட இந்த உட்புறகுரல் வாதித்திருக்கிறது. தாவீது விபச்சார செயலில் ஈடுபட்டபின்பு “என் எலும்புகளில் [சமாதானமில்லை, NW] சவுக்கியமில்லை” என்று எழுதினான். (சங்கீதம் 38:3) யோசேப்பின் சகோதரர்களுங்கூட தங்களுடைய பொறாமையின் எரிச்சலினால் யோசேப்பை அடிமைத்தனத்திற்குள் விற்றுப்போட்ட பின்பு அதே குற்ற உணர்ச்சியினால் வேதனையடைந்தார்கள். 20-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் கழிந்துங்கூட அவர்கள் இன்னும் “அவன் நம்மை கெஞ்சி வேண்டிக் கொண்டான்” என்பதை நினைவுக்கூற முடிந்தது. அது என்னே ஒரு வேதனையூட்டும் நினைப்பூட்டுதலாக இருந்திருக்க வேண்டும்!—ஆதியாகமம் 37:18-36; 42:21.
ஆம், கெட்ட மனசாட்சி வேதனையையும் உணர்ச்சி சார்ந்த துயரத்தையும் ஏற்படுத்துகிறது. அதற்கு நேர்மாறாக, ஒரு நல்ல மனசாட்சி மனநிறைவையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது! இதில் சந்தேகமேயில்லை. இதன் காரணமாகவே, ஆயிரக்கணக்கான இளைஞரிடம் அவர்களுடைய வாழ்க்கையின் மதிப்பீடுகளை குறித்து நடத்தப்பட்ட ஒரு சோவியத் வாக்கெடுப்பில் ஒரு தெளிவான மனசாட்சியே மிக அதிக முக்கியமானதாக கருதப்பட்டது.” (Soviet Monthly Digest, ஜூலை 1983) என்றபோதிலும் கிறிஸ்தவர்களின் பிரதான அக்கறைக்குரிய காரியம் என்னவெனில், “நல் மனசாட்சியுடையவர்களாயிருங்கள்” என்று பைபிள் சொல்லக்கூடிய அந்த உண்மையே. (1 பேதுரு 3:16) ஆனால் நீ அதை எவ்வாறு செய்யலாம்? முதலாவதாக மனசாட்சி என்றாலென்ன, அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும்.
மனசாட்சி—அது என்ன?
நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலிய எழுத்தாளரான கால்லோ கொலோடி என்பவர் பினோக்கியோ என்ற தனது பிரபலமான சிறுவர் கதை ஒன்றை உருவாக்கினார். பினோக்கியோ என்பது கூத்தாட்டு ஆண் பொம்மை. இது தொல்லைகளில் சிக்கிக்கொள்ளும் சாமர்த்தியமுள்ளது. அடிக்கடி பினோக்கியோவை கண்டிக்கவும் சீர்திருத்தவும் ஜிமினி கிரிக்கெட் என்னும் ஒரு பேசும் பூச்சி இருந்தது. அதாவது அதுதான் பினோக்கியோவின் மனசாட்சி. அதேவிதமாகவே நீ உன்னுடைய மனசாட்சியை ஒரு குரலுக்கு அல்லது எச்சரிக்கை ஒலிக்கு ஒப்பிடலாம். நீ தவறானதையோ அல்லது சரியானதையோ செய்வதற்கு முன்பாக அல்லது பின்பாக அது ஒலிக்க தொடங்குகிறது.
ஒரு நூதன கண்டுபிடிப்பாளர், இந்த எண்ணத்தை, திட்ட உணவு மனசாட்சி (diet conscience) என்றழைக்கப்பட்ட ஒரு கருவியாக தயாரித்திருக்கிறார். அது குளிர் சாதன பெட்டியினுள் அல்லது சமயலறையில் உணவு பண்டங்கள் பெட்டியின் கதவினுள் பொருத்தப்படும் ஒரு கருவியாகும். இது மின்கல பொறியினால் இயங்கக்கூடிய, அளவு திட்டம் தீர்மானிக்கும் கருவி. அந்த கதவு திறக்கப்படும் ஒவ்வொரு சமயமும் அதில் பதிவு செய்யப்பட்ட ஒரு வாசகம்: “நீங்கள் மறுபடியும் சாப்பிடப் போகிறீர்களா? உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என்று கேள்வி கேட்கும்.
ஆனால் ஜிமினி கிரிக்கெட் அல்லது ஏதோ ஒரு மனித கருவியை போன்றில்லாமல், உன்னுடைய மனசாட்சி உனக்குள் இருக்கும் ஒன்றாக இருக்கிறது. மனசாட்சியை பைபிள் உள்ளான ‘சாட்சி பகர்பவன்’ அதாவது ஒரு செயலின் சரியான தன்மையை அல்லது தவறான தன்மையை தெரியப்படுத்துபவன் என்று விவரிக்கிறது. (ரோமர் 2:15) ஆனால் இந்த இயல்பு வலிமையான மனசாட்சி எங்கிருந்து வருகிறது?
உடன்பிறந்த இயல்பு வலிமை
எது சரி, எது தவறு என்பதைக் குறித்து நாம் நமது பெற்றோரிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் அதிகத்தைக் கற்றுக் கொள்ளுகிறோம் என்பது உண்மையே. என்றபோதிலும் மனசாட்சி என்பது உடன்பிறந்த ஒன்றென பைபிள் சுட்டிக் காட்டுகிறது. ரோமர் 2:14-ல் அது எப்படி “புறஜாதிகள் [தேசத்து மக்கள், NW] சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறார்கள்” என்று பேசுகிறது.
ஆகையால் அடிப்படையான ஒழுக்கதராதரங்கள் மனிதனின் சிந்தனைகளுக்குள் உருவமைக்கப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. மனிதன் “தேவ சாயலாக” தெய்வீக ஞானத்தையும் மற்றும் நீதியையும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பிரதிபலிக்கும்படியாக உண்டாக்கப்பட்டிருக்கிறான் என்பதை நினைவிற் கொள்ளுங்கள். (ஆதியாகமம் 1:27) இதன் காரணமாகவே உலக முழுவதிலுமுள்ள தேசங்கள் கொலை, திருடு, மற்றும் முறைத்தகாத புணர்ச்சி போன்ற இப்படிப்பட்ட காரியங்களுக்கெதிராக சட்டங்களைக் கொண்டிருக்கிறார்கள்.
சிறய காரியங்களிலுங்கூட மனசாட்சியின் எச்சரிக்கை ஒலியை கேட்கலாம். ஒரு பணியரங்கு அங்காடி இவ்வாறாக பூட்டப்படாத பொருள் வழங்கீடு பகுதியிலே கடை பைகளை விற்பனை செய்வதன் மூலம் மக்களின் மனசாட்சிக்கு ஒரு வேண்டுகோள் விடுகிறது. நாணயம் போடப்படும் அந்த இயந்தரத்துக்கு மேலே ஒரு வாசகம் தொங்குகிறது. அது வாசிப்பதாவது: “என்னுடைய ஒரே பாதுகாப்பு உங்களுடைய மனசாட்சியே!” ஆம், பெரும்பாலான ஆட்களுக்கு ஓர் கிரியை செய்யும் மனசாட்சி இருப்பதானது நமது நன்மைக்கேதுவாய் செயற்படுகிறது. அப்படியில்லாவிடில் நமது உயிரும் உடமைகளும் படுமோசமான ஆபத்திலிருக்கும்!
அதை பயிற்றுவி!
உடன்பிறந்த ஒன்றாக இருந்தபோதிலும் மனசாட்சி பிழையே இல்லாத ஒன்றல்ல. உதாரணமாக, பைபிள் “பலவீனமான” மனசாட்சியுடையவர்களைப்பற்றி பேசுகிறது. (1 கொரிந்தியர் 8:7) தவறான தகவலின் காரணமாக, ஒருசில சூழ்நிலைமைகளுக்கு இப்படிப்பட்ட ஆட்கள் மட்டுக்கு மீறி பிரதிபலிக்கக்கூடிய மனசாய்வுள்ளவர்களாகிவிடக்கூடும். இதனால் அநாவசியமான உறுத்தலினால் அவதியுறக்கூடும். மறுபட்சத்தில் சிலர், “மனச்சாட்சியில் சூடுண்ட”வர்களாயிருக்கிறார்கள். (1 தீமோத்தேயு 4:1) சூடாக்கப்பட்ட இரும்பு கம்பியினால் சூடு போடப்பட்டு வடுப்பட்ட சதையை போன்று அவர்களுடைய மனசாட்சி உணர்ச்சியற்றதாக ஆகிவிடுகிறது.
அடால்ஃப் ஐக்மன் என்பவரைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். இவர் நாஸி போர் குற்றவாளி. அவருடைய பங்கில் அவர் அறுபது இலட்சம் யூதர்களை கொன்றதற்காக குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அவருக்கு என்றாவது குற்ற உணர்ச்சிகள் இருந்ததா? உளநோய் மருத்துவரான ஐ.எஸ். குல்ஸ்கார் அவரிடம் இதே கேள்வியை கேட்டார். அதற்கு ஐக்மன் பதிலுரைத்தாவது: “ஆம், ஓரிரண்டு முறை நான் பள்ளிக்கு செல்லாமலிருந்தபோது ஏற்பட்டது.” இப்போது அவரில் என்னே ஒரு மாற்றம்! தெளிவாகவே ஐக்மன் அவருடைய மனசாட்சியை துண்டித்துவிட கற்றுக்கொண்டார். உளநிலை மருத்துவ ஆய்வாளர் வில்லார் கேலின் சொல்வதாவது: “குற்ற உணர்ச்சியை உணர தவறுவது உளநோயாளி அல்லது சமுதாயத்துக்கு மாறான ஆளினுடைய அடிப்படையான குறைபாடாக இருக்கிறது.”
அப்படியானால் உன்னுடைய மனசாட்சி சீராக வேலை செய்கிறதா என்பதைக் குறித்து நீ எவ்வாறு நிச்சயமாக இருக்கலாம்? முதலில் அதற்கு சரியாக கல்வி புகட்ட வேண்டும். எப்படி? கடவுளுடைய வார்த்தையை படிப்பதும் மற்றும் அதை தியானிப்பதன் மூலமே. கடவுளுடைய தராதரங்களைக் கற்றுக்கொள்வதன் மூலமும் “உன் மனதை மறுரூபமாக்குவதன் மூலமும் நீ உன் மனசாட்சியை சரியான நிலையில் வைப்பதற்கு இது துணைபுரியும் சரியாக பயிற்சியளிக்கப்படுகையில், உன் மனசாட்சி, நீ குற்றம் செய்த பின்பாக கொடுக்கும் அந்த திருத்தும் தண்டனையை காட்டிலும் அதிகத்தை செய்கிறது. முதலிடத்தில் அந்த தவறையே நீ தவிர்க்கும்படி உனக்கு அது உதவி செய்கிறது—உன்னுடைய செயலை அங்கீகரிக்கவோ அல்லது கண்டனஞ் செய்யவோ உனக்கு அருகில் யாரும் இல்லாதபோதிலும் அது அப்படி செய்கிறது.
அதற்கு செவி கொடு!
எது சரி எது தவறு? என்பதை வெறுமென அறிந்து வைத்திருப்பது மட்டுமே போதுமானதல்ல. மனசாட்சி உனக்கு உதவ வேண்டுமானால் அதற்கு செவிகொடுக்க நீ கற்றுக்கொள்ள வேண்டும்! அப்படியானால் எப்பொழுதுமே குற்ற உணர்ச்சியோடு நடந்து கொண்டிருக்க வேண்டும். அல்லது நம்மை நாமே தண்டித்துக்கொள்வதற்கு மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை இது குறிக்கிறதில்லை. ஒப்புக்கொள்ள வேண்டிய ஒரு உண்மை, நாம் அபூரணர். ஆனால் பைபிள் சங்கீதம் 103:13-ல் “தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் [யெகோவா, NW] தமக்கு பயந்தவர்களுக்கு இரங்குகிறார்,” என்று சொல்லுகிறது. கடவுளுடைய இரக்கமும் மன்னிப்பும் நம்முடைய அபூரணங்களினூடே நாம் வாழ்வதற்கு உதவி செய்யும்.
என்றபோதிலும் சில வேளைகளில் நம்முடைய மனசாட்சியின் கூக்குரல் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நம்மை உந்துவிக்க வேண்டும். சீனியர் ஸ்கூலஸ்டிக் என்பதில் லெஸ்டெர் டேவிட் எழுதுவதாவது: “நீ ஒரு வாக்குறுதியை நிறைவேற்ற தவறினாயா, ஒரு சட்டத்தை மீறினாயா, சமூக கட்டுப்பாட்டை மீறினாயா, யாரையாகிலும் புண்படுத்தினாயா, பொய் சொன்னாயா, ஏமாற்றினாயா? . . . முடியுமானால் மன்னிப்புகேள். எதுவெல்லாம் சரியானதோர் முறையோ அம்முறையில் அந்த தவறான செயலை சரிசெய். யாரிடமாவது அதை குறித்து பேசு” இதைத்தான் கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட சோரயா செய்தாள். வெறுமென குற்ற உணர்ச்சியால் உறுத்தப்பட்ட நிலையிலேயே இருந்துவிடாமல் அவள் பெற்றோரிடம் காரியங்களை பேசினாள். அவள் “இப்பொழுது தன்னுடைய பெற்றோரின் ஆலோசனைகளை பொருத்தி பிரயோகித்த பின்பு முன்பைவிட “பொருமளவிற்கு நல்ல உணர்ச்சியை கொண்டிருக்க ஆரம்பித்திருக்கிறேன்” என்று அவள் அறிக்கை செய்கிறாள்.
ஆம், பைபிள் போதனைகளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியினுடைய உறுத்தலின் பேரில் நீ செயற்படும் போதுதானே நீ அதிலிருந்து நன்மையடைவாய். உதாரணமாக, பில் என்ற பெயருள்ள ஒரு இளம் மனிதன் ஒரு தீய இளைஞர் கும்பலில் சிக்கிக்கொண்டான். ஆனால் அதன் பின்பு பில் சொல்வதாவது: “கொலை குற்றத்துக்காக என் நண்பர்களில் ஒருவன் சிறைக்கு செல்வதை நான் கண்டேன். அப்பொழுது என் மனசாட்சி அவை அனைத்தும் முட்டாள் தனமானது—உனக்கு அடுத்ததல்ல! என்று எனக்கு சொல்லிற்று.” ஆனால் அந்த குற்ற உணர்ச்சியை அடைந்த பில் என்ற இந்த இளைஞன் அதை பொருட்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டானா? இல்லை என்று அவன் பதிலளிக்கிறான்: “நான் அந்த தீய கும்பலை விட்டு விலகினேன்.”
டோனி என்ற பெயருள்ள மற்றொரு இளைஞன் இன்னொரு வழியில் மனசாட்சி தனக்கு உதவும்படி அனுமதித்தான். டோனி என்பவன் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவன். ஜனங்களை அவர்களுடைய வீடுகளில் சந்தித்து அவர்களுக்கு பைபிளை கற்றுக்கொடுப்பதில் ஒரு மாதத்துக்கு 90 மணிநேரங்களை செலவிடுவதில் மனமுவந்து தொண்டாற்றுவதற்கு அவனுடைய மனசாட்சி அவனை உந்துவித்தது. (மத்தேயு 24:14; 28:19, 20) “ஜனங்களை சந்திப்பதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியை கண்டடைந்தேன்” என்று தெரிவிக்கிறான் டோனி. “அதோடுகூட எனக்கு நல்ல பகுதிநேர வேலையும் எனக்கு ஒரு சொந்த காரும் இருந்தது. நான் வசித்துவந்த இடத்தை விரும்பினேன். என்றபோதிலும் நான் இன்னும் அதிகத்தை செய்யவில்லையே—அதாவது என்னைப்போன்ற இளைஞர்களுக்காக எங்கே மிக அதிகமான தேவை இருக்கிறதோ அங்கே நான் சேவை செய்து கொண்டில்லையே என்ற குற்ற உணர்வை நான் உணர ஆரம்பித்தேன்” என்று சொன்னான்.
அந்த மனசாட்சியின் என்னே ஒரு பெருந்தன்மையான குரல்! அதற்கு செவி கொடுப்பவனாய் டோனி யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமை அலுவலகத்தில் சேவை செய்வதற்கு விண்ணப்பித்தான். அங்கே பைபிள்களும் பைபிளை படிக்க உதவி புத்தகங்களும்—அதாவது இந்த இதழை போன்றவைகள்—அச்சடிக்கப்படுகின்றன. அவன் அங்கே கடந்த ஒன்பது ஆண்டுகளாக சேவை செய்திருக்கிறான்.
நீ உன் மனச்சாட்சிக்கு செவி கொடுக்கிறாயா? “உன்னை திருத்துவதற்கு நேரத்தையும் முயற்சியையும் செலவழிக்கக்கூடிய ஒரு உண்மையான நண்பனை போன்று அது இருக்கக்கூடும்,” என்று ஒரு வாலிபன் குறிப்பிட்டான். அது தனிப்பட்ட மற்றும் கிறிஸ்தவ உத்தரவாதங்களை நிறைவேற்றுவதற்குங்கூட உன்னை தூண்டியெழுப்பக்கூடும். ஆனால் நீ அதற்கு சரியான கல்வி புகட்ட வேண்டும். மற்றும் அதற்கு செவி கொடுக்க வேண்டும். உண்மையிலேயே மனசாட்சி ஒரு மகத்தான வெகுமதி. அதற்கு மரியாதை கொடு. அதை நன்கு பயன்படுத்து. (g86 4/8)
[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]
உடன்பிறந்த ஒன்றாக இருந்தபோதிலும் மனசாட்சி பிழையே இல்லாத ஒன்றல்ல. அதற்கு சரியாக கல்வி புகட்ட வேண்டும்.
[பக்கம் 12-ன் படம்]
குற்றப்படுத்தும் மனசாட்சி உணர்ச்சி சார்ந்த துயரத்தை ஏற்படுத்துகிறது