பழக்கத்தை எவ்விதமாக கைவிடுவது
படிப்படியாக குறைக்க முயற்சி செய்யாதீர்கள்: அது பழக்கத்தை கைவிடுவதால் ஏற்படும் வேதனையை நீடிக்கிறது.
விலையுயர்ந்த புகைத்தடை நிவாரணங்களில் உங்கள் பணத்தை விரயம் செய்ய வேண்டாம்: “விதிவிலக்கில்லாமல், தற்போது சந்தையிலுள்ள எந்த உதவியும், புகைப்பிடிப்பவருக்கு உண்மையில் உதவியாக இல்லை,” என்பதாக புதிய விஞ்ஞானி தெரிவிக்கிறது. உலக ஆரோக்கியம் இவ்விதமாகச் சொல்லுகிறது: “வெற்றியில் . . . முக்கிய அம்சம் எப்பொழுதும் புகைப்பிடிப்பவரின் மனோபலமாகவே இருக்கும். மற்றவை வெறும் ஒப்பனையாகவே இருக்கிறது.”
உங்கள் உத்தரவாதத்தை ஏற்றுக்கொள்ளவும், ஆனால் உதவியையும் ஏற்றுக்கொள்ளவும்: புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டிருக்கும் ஆதரவாயுள்ள நண்பர்கள் விலைமதிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். ஜெபம் செய்யுங்கள். கடவுளைப் பிரியப்படுத்தி அவருடைய சித்தத்தைச் செய்ய வேண்டும் என்ற உண்மையான ஆசை அற்புதங்களைச் செய்யக்கூடும்.—பிலிப்பியர் 2:4; 4:6, 13.
புகைப்பிடிக்காதிருப்பதால் கிடைக்கும் நன்மைகளை அறிந்து கொள்ளவும்: (இருதய நோய், நோயின் பலமான தாக்குதல், மார்பு சளி நோய், கீழ்கட்டி அல்லது புற்றுயோய்) ஆகியவற்றினால் உயிருக்கு ஏற்படக்கூடிய ஆபத்து குறைக்கப்படுதல், நல்ல முன்மாதிரியை வைத்தல், பணத்தை சேமித்தல், பழக்கத்தினால் ஏற்படும் குளறுபடி, நாற்றம், அசெளகரியம், அடிமையாகிவிடுதல் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கப்படுதல்.
பழக்கத்தை கைவிடுவதால் ஏற்படும் சோதனைகளை புரிந்துகொள்ளவும்: கடைசி சிகரெட்டை பிடித்து 12 மணி நேரங்களுக்குள் உங்கள் இருதயமும் நுரையீரலும் தங்களைத் தாங்களே பழுதுபார்க்க ஆரம்பிக்கின்றன. கார்பன் மோனாக்ஸைட் மற்றும் நிக்கோடீனின் அளவு வேகமாக குறைந்துவிடுகிறது. ஆனால் உங்கள் உடல் குணமாகும்போது, உங்களை அது புண்படுத்தவும்கூடும். எப்படியெனில், உங்களுக்கு எரிச்சலாக இருக்கலாம் அல்லது எளிதில் கோபமும் வரலாம். ஆனால் உங்களுடைய நரம்புகளை ஒருநிலைப்படுத்த உங்களுக்கு ஒரு சிகரெட்டு தேவையில்லை. தற்காலிகமான இந்த அசெளகரியம், ஆரோக்கியமான வாழ்க்கையின் ஆரம்பமாக இருக்கிறது.
சவாலை புரிந்துகொள்ளவும்: பிரச்னைகள் எதிர்பார்த்திருங்கள். சுய பரிதாப உணர்வையும் ஒத்திணங்கிப் போவதையும் தவிர்த்திடுங்கள். ஆனால் பழக்கத்தை உதறித் தள்ளமுடியும் என்பதில் சந்தேகம் இருக்க வேண்டாம்.