உண்மைகளை எதிர்படுதல்: இன்று புகையிலை
சிகரெட்டுகளுக்கான தேவை ஆரம்பத்தில் ஏற்பட்டதைக் குறித்தே வியப்படைந்தவராய், ஹார்வர்ட் மருத்துவப்பள்ளி சுகாதார கடிதத்தின் பதிப்பாசிரியர் பின்வருமாறு கேட்கிறார்: “விக்டோரியா அரசி காலத்தின் மத்திப பகுதியில் இழிவாக கருதப்பட்ட, படிப்படியாக மறைந்து வந்த ஒரு தீயப்பழக்கம் ஏன் சடுதியாக தன்னை மீண்டும் ஸ்திரப்படுத்திக் கொண்டுவிட்டது? ஆம், சமீப காலத்திய ஒரு விளம்பரம் புகைப்பிடிக்கும் பெண்களிடம், “நீண்ட தூரம் நீ பயணம் செய்து வந்திருக்கிறாய் பெண்ணே” என்பதாக பெருமையடித்துக் கொண்டது. கெட்டப் பழக்கத்துக்கு அடிமையாதலும் விளம்பரங்களும் போர்களுமே பொதுமக்களை புகையிலையை ஏற்றுக்கொள்ளச் செய்தன என்பதாக சரித்திராசிரியர்கள் சொல்லுகிறார்கள். “கெட்டப் பழக்கத்துக்கு அடிமையாவதற்கு அடுத்ததாக புகைப்பிடிப்பவர்களின் இருதயங்களையும் மனங்களையும் கவருவதற்கு அதிக சக்திவாய்ந்த உதவி விளம்பரங்களாகும்” என்பதாக அண்மைக் கால ஆய்வாளர் ஒருவர் குறிப்பிடுகிறார். ஆம், கதைக்கு இன்னும் அதிகமிருக்கிறதா?
கதைக்குப் பின்னாலுள்ள கதை
பைளிள் மாணாக்கர்களுக்கு, சிகரெட் சகாப்தத்தின் முக்கியத்துவம் அற்பமாக தள்ளிவிடப்பட முடியாததாக இருக்கிறது. ஏன் அப்படி? ஏனென்றால் விசேஷமாக 1914 முதற்கொண்டு இருந்துவரும் சகாப்தம் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியிருக்கிறது. முதலாவதாக, 1914-ல் உலகப் போரில் ‘ஜனத்துக்கு விரோதமாக ஜனம் எழும்பியது.’ பின்பு, மேலுமாக இயேசு கிறிஸ்து முன்னறிவித்த விதமாகவே, “அக்கிரம மிகுதியினால்” மனித சமுதாயத்தின் அமைதி குலைந்தது. போரின் காரணமாக மக்கள் மனக்கசப்படைந்து, அவர்கள் போற்றிய மதிப்பீடுகள் தகர்ந்துவிட்டபோது, முன்னொருபோதும் இல்லாத விதமாக சிகரெட்டை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு இது வழிவகுத்தது.—மத்தேயு 24:7, 12.
1914-ல் உலகம் கவலை நிறைந்த ஒரு யுகத்தினுள் நுழைந்தது. சிகரெட் தொழில் அமோகமாக வளர்ந்தது. ‘கையாளுவதற்கு கடினமான காலங்கள் என்பதாக பைபிள் அழைக்கும் காலத்தின் அழுத்தங்களை எதிர்த்து போராட அநேகர் இதை பழக்கமாக்கிக் கொண்டார்கள். விளம்பரங்களின் கவர்ச்சியும், நிக்கோடீனை சார்ந்து வாழும் நிலையும் கட்டுப்பாடில்லா சிற்றின்ப வாழ்க்கையை, சமுதாயத்தின் மனநிலையாக்க உதவியது. சரியாகவே கடைசி நாட்களில் ஜனங்கள் “தேவ பிரியராயிராமல் சுகபோக பிரியராக” இருப்பார்கள் என்பதாக பைபிள் முன்னறிவித்திருக்கிறது.—2 தீமோத்தேயு 3:1-5.
இவை அனைத்துமே நம்முடைய காலங்களின் அவசரத் தன்மையை உணருவதற்கு நமக்கு உதவி செய்ய வேண்டும். இயேசு குறிப்பிட்ட விதமாகவே, நெருக்கடியான சமயத்தில் “உணராதிருந்த” சில ஆட்களைப் போலிருப்பதற்கு பதிலாக நாம் நம்முடைய பாடத்தை சரித்திரத்திலிருந்து கற்றுக்கொள்ளலாம். உலகத்தை சீர்திருத்த வேண்டும் என்ற வீணான முயற்சியிலோ அல்லது தேசங்கள் தங்களுடைய கெட்ட பழக்கங்களை உதறித்தள்ளிவிடும் என்ற வீணான கற்பனையிலோ நம்பிக்கை வைக்காமல் கடவுளுடைய ராஜ்யத்தில் நம்பிக்கை வைக்கும்படியாக பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது.—மத்தேயு 24:14, 39.
உலகம் பழக்கத்தை உதறித்தள்ள முடியுமா?
உலகம் புகையிலை பழக்கத்தை உதறி விடுவதற்கான எதிர்பார்ப்புகள் நம்பிக்கை தருவதாக இல்லை. 1962-ல் மருத்துவர்களின் பிரிட்டிஷ் ராயல் கல்லூரி, முதல் முதலாக புகைப்பிடிப்பதற்கு எதிராக எச்சரிப்பை அறிவித்தது. ஆனால் 1981-ல் பிரிட்டன் நாட்டினர் 11,000 கோடி சிகரெட்டுகளை வாங்கினார்கள். ஐக்கிய மாகாணங்களின் அறுவை மருத்துவ முதல்வர், உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறித்து 1964-ல் முதல் முதலாக எச்சரித்தார். ஆனால் அடுத்த வருடமே விற்பனை உச்சநிலையை எட்டியது. 1980-க்குள் அமெரிக்க நாட்டவர் 1964-ல் வாங்கினதைவிட வருடந்தோறும் 13,500 கோடி அதிகமாக சிகரெட்டுகளை வாங்கிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பாக்கட்டிலும் உடல்நலத்துக்கு ஏற்படக்கூடிய ஆபத்தைக் குறித்த அறுவை மருத்துவ முதல்வரின் எச்சரிக்கை எழுதப்பட்டிருந்தபோதிலும் இது இவ்வாறாக இருந்தது! உண்மை என்னவென்றால் உலகம் இப்பொழுது 4,00,000 கோடி சிகரெட்டுகளை வாங்கிக் கொண்டிருக்கிறது.
தனிப்பட்டவராக நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தாலுஞ்சரி, இல்லாவிட்டாலுஞ்சரி, இந்நாட்களில் புகையிலை வியாபாரத்தில் கிடைக்கும் பணம், அரசாங்கங்களும் அரசியல்வாதிகளும் புகையிலை தொழிலை தடைசெய்துவிடுவது சாத்தியமில்லை என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டும். உதாரணமாக ஐக்கிய மாகாணங்களில் சிகரெட் பிடிப்பதால் ஒவ்வொரு வருடமும் 3,50,000 பேர் உயிரிழந்தபோதிலும், புகையிலையினால் 25,200 கோடி ரூபாய் வரிபணம் கிடைக்கிறது. நேரடியாகவோ மறைமுகமாகவோ இதனால் 20 லட்சம் ஆட்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. புகையிலை கம்பெனிகள் தாராளமாக பணத்தை செலவழிக்கின்றன. உலகம் முழுவதிலும் அவை விளம்பரங்களுக்காக வருடந்தோறும் 2,400 கோடி ரூபாய் செலவழிக்கின்றன. அமெரிக்க புற்றுநோய் சங்கமும், அமெரிக்க நுரையீரல் சங்கமும் புகைப்பிடித்தலை எதிர்த்து கல்வி புகட்டுவதற்காக செலவழிக்கும் 8 கோடி ரூபாயை இது ஒன்றுமில்லாமலாக்கிவிடுகிறது.
அல்லது ஐக்கிய நாடுகளின் இரண்டு ஏஜென்ஸிகளையும், புகையிலை கொள்கையின் சம்பந்தமாக அவைகளின் கருத்து வேற்றுமையையும் சிந்தித்துப் பாருங்கள்: மூன்றாவது உலக தேசங்களின், தடுப்பு மருத்துவ துறை முழுவதிலும் வேறு எந்த ஒரு தனி நடவடிக்கையையும்விட . . . உடல் நலத்தை மேம்படுத்தவும் வாழ்நாளை நீடிக்கவும் புகைப்பிடித்தல் தொற்றுநோயை ஒழிப்பது அதிகத்தைச் செய்யக்கூடும்” என்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) அண்மையில் அறிவித்தது. ஆனால் உணவு மற்றும் வேளாண்மை அமைப்போ (FAO) “புகையிலை பயிர் செய்வது முன்றாவது உலகின் நாட்டுப்புற பகுதிகளில் பிரமாண்டமான அளவில் வேலை வாய்ப்புக்கு இடமளிக்கிறது” என்பதாக உறுகியாகச் சொல்லுகிறது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு புகையிலையை “அதிமுக்கியமான மற்றும் சுலபமான வரிவருவாயின் ஊற்று மூலம்” என்பதாக விவரிக்கிறது. இது “புகையிலையை பயிர் செய்ய குடியானவர்களுக்கும்” அதன் “வேளாண்மையையும் உற்பத்தியையும் ஊக்குவிக்க அரசாங்கங்களுக்கும் பலமான தூண்டுதலை அளிக்கிறது.
உண்மைகளை எதிர்படுதல்
ஆம், விசேஷமாக 1914 முதற்கொண்டு இருந்துவரும் சிகரெட் அனுபவம் சில கசப்பான உண்மைகளை எதிர்படுவதை தேவைப்படுத்துகிறது. “அது இன்பமாயிருந்தால் அதைச் செய்” என்பதாக சிலர் சொல்லுகிறார்கள். ஆனால் புகைப்பிடிப்பதோடு சம்பந்தப்பட்டிருக்கும் நுரையீரல் மற்றும் இருதய நோய், இதுபோன்ற ஒரு குறுகிய நோக்கமுள்ள கருத்தை மனதிலிருந்து அகற்றிவிடுகிறது. இங்கிலாந்தில் வாகன விபத்துக்களோடு ஒப்பிடுகையில், சிகரெட் புகைப்பதால் ஏற்படும் உயிரிழப்பு எட்டு மடங்கு அதிகமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உலகம் முழுவதிலும், இந்த பழக்கம் “இந்த நூற்றாண்டின் எல்லா யுத்தங்களையும்விட அதிகமான ஆட்களை துடைத்தழித்துவிட்டிருக்கிறது” என்பதாக மான்செஸ்டர் கார்டியன் வீக்லியின் அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.
இந்த பழக்கத்துக்கு அடிமையாகிவிடுதலைப் பற்றி என்ன? நிக்கோடீன், போதை பொருளின் மீது சார்ந்து வாழும் ஒரு நிலையை ஏற்படுத்திவிடுவதே கசப்பான உண்மையாக இருக்கிறது. சிந்திக்கும் ஆட்கள் அநேகர் அதோடு சம்பந்தப்பட்டிருக்கும் தார்மீக மற்றும் ஆவிக்குரிய சேதத்தை அசட்டை செய்ய முடியாது என்பதாக நினைக்கிறார்கள்.
தார்மீக ஆட்சேபனைகள்
கிறிஸ்தவர்கள், மருத்துவ அல்லது சுகாதார எச்சரிப்புகளைவிட, புகையிலை உபயோகத்துக்கு தார்மீக மற்றும் வேதப்பூர்வமான ஆட்சேபனைகள் அதிக முக்கியமாக இருப்பதாக காண்கிறார்கள். சிருஷ்டிகரிடமிருந்து ஒருவரை தூர விலகிப்போய்விடச் செய்யும் என்பதாக பைபிளில் கண்டனம் செய்யப்பட்டுள்ள ஆன்மவாதம், ஆவிக்கொள்கை, மனிதனால் உண்டுபண்ணப்பட்ட கடவுட்களின் வணக்கம் ஆகியவற்றிலிருந்து புகையிலை உபயோகம் ஆரம்பமானது. (பக்கம் 4-ல் “தீப் பற்றிக்கொண்ட அந்த புனித இலை” பெட்டியைப் பார்க்கவும்) (ரோமர் 1:23-25) புகைப்பிடித்தல் அசுத்தமானதாக, ஆபத்தானதாக கிறிஸ்தவ தராதரங்களுக்கு முரணானதாக இருக்கிறது. (2 கொரிந்தியர் 7:1) அதிக முக்கியமாக, இந்த பழக்கத்துக்கு அடிமையாதல், “druggery” என்ற ஆங்கில வார்த்தையின் பொருளில் உள்ளடங்கியதாக இருக்கிறது. ஆவிக்குரிய விதத்தில் சேதத்தை உண்டுபண்ணும் பழக்கவழக்கங்களுக்கும், மூடநம்பிக்கையான பழக்க வழக்கங்களுக்கும் பயன்படுத்தப்படும் ஒரு கண்டனச் சொல்லாக இது பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.—ரெஃபரென்ஸ் பைபிளில் (Reference Bible) வெளிப்படுத்தின விசேஷம் 21:8; 22:15-ன் கீழ்க்குறிப்பை பார்க்கவும்.
ஆகவே, ஒருவருடைய புலன்களுக்கு இன்பமளித்து உடல்நலத்தைக் கெடுத்து, ஒருவருடைய அயலான் சுவாசிக்க வேண்டிய காற்றை அசுத்தப்படுத்தி இளவயதிலுள்ள வாலிபர்களையும் அதையே செய்ய தூண்டும் அந்த பழக்கத்தில் அதிக கவலைக்குரிய தார்மீக மறைபொருள்கள் இருக்கின்றன. சற்று சிந்தித்து, ஒருவேளை கவலையுடன் மறுமதிப்பீடு செய்த பிறகு, புகை பிடிக்கும் அநேகர் அவர்களுக்காகவும் அவர்களுடைய அன்பானவர்களுக்காகவும் இந்த பழக்கத்தை விட்டுவிட தீர்மானிக்க வேண்டும்.
போக்கை மாற்றுவது
புகையிலை பழக்கத்தை கைவிடுகையில் நீங்கள் உங்கள் சொந்த சரீரத்திலிருந்தும் உங்கள் சுற்றுப்புற சூழலிலிருந்தும் அழுத்தங்களை எதிர்படுகிறீர்கள். புகைபிடிக்கும் ஒரு நபராக, உங்கள் சரீரம் நிக்கோடீனின் மீது சார்ந்து வாழும் நிலைக்கு வந்துவிட்டது. சிகரெட் புகை உள்ளிழுக்கக்கூடியதாக ஆனது முதற்கொண்டு, புகைப்பவர்கள் உணரும் விதமாக அதே அவாவை நீங்கள் உணருகிறீர்கள். விளம்பரப் பலகைகளும் பத்திரிக்கைகளும் பழக்கத்தை உங்களுடைய மனக் கண் முன்னால் ஊசலாடச்செய்து, எப்பொழுதும் அதை இன்பத்தோடும் சுயாதீனத்தோடும், வீரச்செயலோடும் அழகோடும் ஆடம்பரத்தோடும் சம்பந்தப்படுத்திப் பார்க்கிறது. உங்களோடு புகைப்பவர்கள், புகைப்பிடிப்பதை சாதாரணமான பாதுகாப்பான, அப்பாவித் தனமான, இன்பம் தருவதான, நாகரீகமானதாக, ஆரவாரமானதாக கருதக்கூடும். புகைப்பிடிக்கும் எண்ணத்துக்கு நீங்கள் இடங்கொடுத்துவிட்டீர்கள்.
சுருக்கமாக, பழக்கத்தை உதறித்தள்ள உலகத்தை அடிமையாக்கின அந்த போக்கை நீங்கள் தனிப்பட்ட வகையில் மாற்ற வேண்டும். இந்த பக்கத்தில் காணப்படுவது போன்ற நடைமுறைக்கு உதவுகிற ஆலோசனைகள் உலகின் போக்கை எதிர்க்க உங்களுக்கு உதவக்கூடும். ஆனால் முதல்படி கடுஞ்சோதனையானதாக இருக்கிறது: நீங்கள் அதை ஏன் விட்டுவிட விரும்புகிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அமெரிக்க மருத்துவச் செய்தியில், “தீர்மானம் ஆழமாக உள்ளிருந்து செய்யப்பட வேண்டும்” என்பதாக டாக்டர் C.F. டாட்டி குறிப்பிடுகிறார். “இந்த தீர்மானம் செய்யப்பட்டு விட்டதேயானால் போராட்டத்தின் மிகப் பெரிய கட்டம் முடிந்துவிட்டது.”
நீங்கள் தனிப்பட்ட நபராக செய்யக்கூடிய மாற்றங்களை செய்யக்கூடாததாகவும், செய்ய மனதில்லாததாகவும் இருக்கும் உலகத்தைப்பற்றி என்ன? சிகரெட்டோடு அதன் காதல் விவகாரத்தைப் போன்று சுய அழிவுக்கு ஏதுவான அதன் பழக்கங்களை எந்த மனித சமுதாயமும் தன்னுடைய சொந்த முயற்சியால் விட்டுவிடும் சாத்தியம் இல்லை. ஆனால் கடவுள் “பூமியைக் கெடுத்தவர்களை கெடு”ப்பதாக வாக்களித்திருப்பதை குறித்து நிச்சயமாயிருங்கள். (வெளிப்படுத்தின விசேஷம் 11:18) இதை நிறைவேற்றுவதற்கு கடவுளின் வழி, அவருடைய பரலோக ராஜ்ய அரசாங்கமாக இருக்கிறது. இதுவே இந்த பூமி முழுவதிலும் எல்லா இடங்களிலும், ஆவிக்குரிய, தார்மீக மற்றும் சரீர உடல் ஆரோக்கியம் ஒருநாள் நிலைநாட்டப்படுவதை நீங்கள் பார்ப்பதற்கு உங்கள் உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது.—ஏசாயா 33:24. (g86 4/8)
[பக்கம் 9-ன் பெட்டி/படம்]
(For fully formatted text, see publication.)
சிகரெட் விளம்பரங்களுக்காக வருடந்தோறும் 2,400 கோடி ரூபாய் செலவழிக்கின்றன. புகைப்பிடித்தலை எதிர்த்து கல்வி புகட்டுவதற்காக செலவழிக்கும் 8 கோடி ரூபாயை இது ஒன்றுமில்லாமலாக்கிவிடுகிறது.
சிகரெட் விளம்பரம்
ரூ.8 கோடி
புகைபிடித்தலை எதிர்த்து கல்வி
ரூ.2400 கோடி
(ஒவ்வொரு சதுரமும் 1 கோடி 20 லட்சம் ரூபாய்க்கு சமம்)