உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 தீமோத்தேயு 1
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

1 தீமோத்தேயு முக்கியக் குறிப்புகள்

      • வாழ்த்துக்கள் (1, 2)

      • பொய்ப் போதகர்களுக்கு எதிரான எச்சரிக்கை (3-11)

      • பவுலுக்குக் காட்டப்பட்ட அளவற்ற கருணை (12-16)

      • என்றென்றுமுள்ள ராஜா (17)

      • ‘சிறந்த போராட்டத்தைப் போராடு’ (18-20)

1 தீமோத்தேயு 1:1

இணைவசனங்கள்

  • +1பே 1:3, 4

1 தீமோத்தேயு 1:2

அடிக்குறிப்புகள்

  • *

    அர்த்தம், “கடவுளுக்கு மரியாதை கொடுப்பவன்.”

இணைவசனங்கள்

  • +1கொ 4:17
  • +அப் 16:1, 2; பிலி 2:19, 20

1 தீமோத்தேயு 1:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    “வேதாகமம் முழுவதும்”, பக். 237

1 தீமோத்தேயு 1:4

இணைவசனங்கள்

  • +1தீ 4:7; 2தீ 4:3, 4; தீத் 1:13, 14
  • +1தீ 6:20; 2தீ 2:14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2011, பக். 16-18

    4/1/1994, பக். 30

1 தீமோத்தேயு 1:5

இணைவசனங்கள்

  • +ரோ 13:8; கலா 5:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2015, பக். 9

1 தீமோத்தேயு 1:6

இணைவசனங்கள்

  • +1தீ 6:20; 2தீ 2:16-18

1 தீமோத்தேயு 1:7

இணைவசனங்கள்

  • +யாக் 3:1

1 தீமோத்தேயு 1:9

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “மாறாத அன்பு இல்லாதவர்கள்.”

இணைவசனங்கள்

  • +கலா 3:19

1 தீமோத்தேயு 1:10

அடிக்குறிப்புகள்

  • *

    சொல் பட்டியலைப் பாருங்கள்.

  • *

    வே.வா., “பொய் சத்தியம் செய்கிறவர்கள்.”

  • *

    வே.வா., “ஆரோக்கியமான.”

இணைவசனங்கள்

  • +2தீ 1:13; தீத் 1:7, 9

1 தீமோத்தேயு 1:11

இணைவசனங்கள்

  • +கலா 2:7, 8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 125

    காவற்கோபுரம்,

    12/15/2009, பக். 16-17

    3/1/2007, பக். 17

1 தீமோத்தேயு 1:12

இணைவசனங்கள்

  • +அப் 9:15; 2கொ 3:5, 6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    7/2019, பக். 31

    காவற்கோபுரம் (படிப்பு),

    7/2016, பக். 26-27

    காவற்கோபுரம்,

    8/1/1991, பக். 25-26

1 தீமோத்தேயு 1:13

இணைவசனங்கள்

  • +அப் 8:3; 9:1, 2; கலா 1:13; பிலி 3:5, 6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2005, பக். 26-27

1 தீமோத்தேயு 1:15

இணைவசனங்கள்

  • +லூ 5:32; 2கொ 5:19; 1யோ 2:1, 2
  • +அப் 9:1, 2; 1கொ 15:9

1 தீமோத்தேயு 1:16

இணைவசனங்கள்

  • +யோவா 6:40; 20:31

1 தீமோத்தேயு 1:17

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “அப்படியே ஆகட்டும்.”

இணைவசனங்கள்

  • +சங் 10:16; 90:2; தானி 6:26; வெளி 15:3
  • +ரோ 1:23
  • +கொலோ 1:15
  • +ஏசா 43:10; 1கொ 8:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    நெருங்கி வாருங்கள், பக். 12

1 தீமோத்தேயு 1:18

இணைவசனங்கள்

  • +2தீ 2:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 121

    காவற்கோபுரம் (படிப்பு),

    9/2020, பக். 28-30

    காவற்கோபுரம்,

    9/15/2008, பக். 30

    9/15/1999, பக். 29

1 தீமோத்தேயு 1:19

இணைவசனங்கள்

  • +1தீ 1:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    10/15/2007, பக். 12-15

    7/15/1999, பக். 15, 17-18

1 தீமோத்தேயு 1:20

இணைவசனங்கள்

  • +2தீ 2:16-18
  • +1கொ 5:5, 11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 3/2019, பக். 6

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

1 தீ. 1:11பே 1:3, 4
1 தீ. 1:21கொ 4:17
1 தீ. 1:2அப் 16:1, 2; பிலி 2:19, 20
1 தீ. 1:41தீ 4:7; 2தீ 4:3, 4; தீத் 1:13, 14
1 தீ. 1:41தீ 6:20; 2தீ 2:14
1 தீ. 1:5ரோ 13:8; கலா 5:6
1 தீ. 1:61தீ 6:20; 2தீ 2:16-18
1 தீ. 1:7யாக் 3:1
1 தீ. 1:9கலா 3:19
1 தீ. 1:102தீ 1:13; தீத் 1:7, 9
1 தீ. 1:11கலா 2:7, 8
1 தீ. 1:12அப் 9:15; 2கொ 3:5, 6
1 தீ. 1:13அப் 8:3; 9:1, 2; கலா 1:13; பிலி 3:5, 6
1 தீ. 1:15லூ 5:32; 2கொ 5:19; 1யோ 2:1, 2
1 தீ. 1:15அப் 9:1, 2; 1கொ 15:9
1 தீ. 1:16யோவா 6:40; 20:31
1 தீ. 1:17சங் 10:16; 90:2; தானி 6:26; வெளி 15:3
1 தீ. 1:17ரோ 1:23
1 தீ. 1:17கொலோ 1:15
1 தீ. 1:17ஏசா 43:10; 1கொ 8:4
1 தீ. 1:182தீ 2:3
1 தீ. 1:191தீ 1:5
1 தீ. 1:202தீ 2:16-18
1 தீ. 1:201கொ 5:5, 11
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
1 தீமோத்தேயு 1:1-20

தீமோத்தேயுவுக்கு முதலாம் கடிதம்

1 நம்முடைய மீட்பராயிருக்கிற கடவுளும் நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற கிறிஸ்து இயேசுவும்+ கட்டளை கொடுத்தபடி, கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாக இருக்கிற பவுல், 2 உண்மையான மகனாகவும் சக விசுவாசியாகவும் இருக்கிற+ தீமோத்தேயுவுக்கு*+ எழுதுவது:

பரலோகத் தகப்பனாகிய கடவுளிடமிருந்தும் நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் உனக்கு அளவற்ற கருணையும் இரக்கமும் சமாதானமும் கிடைக்கட்டும்.

3 நான் மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டபோது எபேசுவில் தங்கியிருக்கச் சொல்லி உன்னை உற்சாகப்படுத்தியது போலவே இப்போதும் உற்சாகப்படுத்துகிறேன். ஏனென்றால், அங்கே இருக்கிற சிலர் பொய்க் கோட்பாடுகளைக் கற்றுக்கொடுக்கிறார்கள். 4 அதோடு, கட்டுக்கதைகளுக்கும்+ வம்சாவளிப் பட்டியல்களுக்கும் கவனம் செலுத்துகிறார்கள். இவையெல்லாம் கடவுளுடைய விஷயங்களைப் போதித்து விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக வீண் கேள்விகளைத்தான் எழுப்புகின்றன.+ அதனால், இப்படிச் செய்யக் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிடு. 5 இந்தக் கட்டளையின் நோக்கம், சுத்தமான இதயத்தோடும் நல்ல மனசாட்சியோடும் வெளிவேஷமில்லாத விசுவாசத்தோடும் நாம் அன்பு காட்ட வேண்டும் என்பதுதான்.+ 6 சிலர் இவற்றைவிட்டு விலகி, வீண்பேச்சு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.+ 7 அவர்கள் திருச்சட்டப் போதகர்களாக+ இருப்பதற்கு விரும்புகிறார்கள். ஆனால், தாங்கள் எவற்றைச் சொல்கிறார்கள் என்பதையும், எவற்றைச் செய்ய வற்புறுத்துகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்.

8 திருச்சட்டம் நல்லது என்பது நமக்குத் தெரியும். ஆனால், ஒருவர் அதைச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். 9 நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நீதிமான்களுக்காகச் சட்டம் இயற்றப்படுவதில்லை; அதற்குப் பதிலாக, அக்கிரமக்காரர்கள்,+ அடங்காதவர்கள், கடவுள்பக்தி இல்லாதவர்கள், பாவிகள், உண்மையில்லாதவர்கள்,* பரிசுத்தமானவற்றை அவமதிக்கிறவர்கள், அப்பா அம்மாவையோ மற்றவர்களையோ கொலை செய்கிறவர்கள், 10 பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவர்கள், ஆண்களோடு உறவுகொள்ளும் ஆண்கள், ஆட்களைக் கடத்துகிறவர்கள், பொய் சொல்கிறவர்கள், கொடுத்த வாக்கை மீறுகிறவர்கள்* ஆகியோருக்காகவும், பயனுள்ள* போதனைகளுக்கு+ எதிரான எல்லா செயல்களையும் செய்கிறவர்களுக்காகவும்தான் சட்டம் இயற்றப்படுகிறது. 11 பயனுள்ள இந்தப் போதனைகள், சந்தோஷமுள்ள கடவுள் என்னிடம் ஒப்படைத்திருக்கிற மகத்தான நல்ல செய்திக்கு இசைவாக இருக்கின்றன.+

12 என்னைப் பலப்படுத்திய நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவுக்கு நன்றியோடு இருக்கிறேன். ஏனென்றால், அவர் என்னை உண்மையுள்ளவன் என்று கருதி, அவருடைய ஊழியத்தைச் செய்வதற்கு என்னை நியமித்தார்.+ 13 முன்பு நான் துன்புறுத்துகிறவனாகவும், கடவுளை நிந்திக்கிறவனாகவும், திமிர்பிடித்தவனாகவும் இருந்தேன்.+ ஆனாலும், அறியாமையின் காரணமாக நான் விசுவாசமில்லாமல் நடந்துகொண்டதால் அவர் என்மேல் இரக்கம் காட்டினார். 14 நம் எஜமானுடைய அளவற்ற கருணை எனக்குத் தாராளமாகக் கிடைத்தது; அதோடு, விசுவாசமும் கிறிஸ்து இயேசுவின் மீதுள்ள அன்பும் எனக்குள் அதிகமானது. 15 பாவிகளை மீட்பதற்காகக் கிறிஸ்து இயேசு உலகத்துக்கு வந்தார்+ என்ற வார்த்தை உண்மையானது, முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது. அந்தப் பாவிகளில் பெரும் பாவி நான்தான்.+ 16 ஆனாலும், கிறிஸ்து இயேசுமேல் விசுவாசம் வைத்து முடிவில்லாத வாழ்வைப்+ பெறப்போகிறவர்களுக்கு நான் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும்படி, அவர் என்மேல் பொறுமையை முழுமையாகக் காட்டினார், பெரும் பாவியாகிய என்மேல் இரக்கத்தைக் காட்டினார்.

17 என்றென்றுமுள்ள ராஜாவாகவும்,+ அழிவில்லாதவராகவும்,+ பார்க்க முடியாதவராகவும்+ இருக்கிற ஒரே கடவுளுக்கே+ என்றென்றும் மாண்பும் மகிமையும் சேருவதாக. ஆமென்.*

18 தீமோத்தேயு, என் பிள்ளையே, உன்னைப் பற்றிச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களுக்கு ஏற்ப நான் உனக்கு இவற்றைக் கட்டளையிடுகிறேன். அந்தத் தீர்க்கதரிசனங்களை நீ மனதில் வைத்து, சிறந்த போராட்டத்தைப் போராடிக்கொண்டே+ இருக்க வேண்டும் என்பதற்காகவும், 19 விசுவாசத்தையும் நல்ல மனசாட்சியையும் நீ காத்துக்கொள்ள வேண்டும்+ என்பதற்காகவும் இவற்றைக் கட்டளையிடுகிறேன்; இவற்றைச் சிலர் ஒதுக்கிவிட்டு தங்களுடைய விசுவாசக் கப்பலை மூழ்கடித்திருக்கிறார்கள். 20 இமெனேயுவும்+ அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்தான். அவர்களை நான் சாத்தானிடம் ஒப்படைத்துவிட்டேன்.+ கடவுளை நிந்திக்கக் கூடாது என்ற பாடத்தை அவர்களுக்குக் கொடுக்கப்படும் கண்டிப்பிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்