உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • கொலோசெயர் 1
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

கொலோசெயர் முக்கியக் குறிப்புகள்

      • வாழ்த்துக்கள் (1, 2)

      • கொலோசெயர்களின் விசுவாசத்துக்காக நன்றி (3-8)

      • ஆன்மீக வளர்ச்சிக்காக ஜெபம் (9-12)

      • கிறிஸ்துவின் முக்கியப் பங்கு (13-23)

      • சபைக்காக பவுலின் கடின உழைப்பு (24-29)

கொலோசெயர் 1:1

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “சித்தத்தால்.”

இணைவசனங்கள்

  • +1கொ 4:17

கொலோசெயர் 1:5

இணைவசனங்கள்

  • +2தீ 4:8; 1பே 1:3, 4

கொலோசெயர் 1:6

இணைவசனங்கள்

  • +கொலோ 1:23; 1தீ 3:16

கொலோசெயர் 1:7

இணைவசனங்கள்

  • +கொலோ 4:12, 13; பிலே 23

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/1997, பக். 30-31

கொலோசெயர் 1:9

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “சித்தத்தை.”

இணைவசனங்கள்

  • +எபே 1:15, 16
  • +2தீ 2:7; 1யோ 5:20
  • +பிலி 1:9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 23

    காவற்கோபுரம் (படிப்பு),

    8/2016, பக். 26

    காவற்கோபுரம்,

    11/1/2001, பக். 18

கொலோசெயர் 1:10

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +எபே 1:17; 2பே 1:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 23

    காவற்கோபுரம் (படிப்பு),

    8/2016, பக். 26

    காவற்கோபுரம்,

    12/1/2002, பக். 16

    11/1/2001, பக். 18

    11/1/1999, பக். 17-19

கொலோசெயர் 1:11

இணைவசனங்கள்

  • +எபே 3:14, 16

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/1/2001, பக். 18

கொலோசெயர் 1:12

இணைவசனங்கள்

  • +ரோ 8:17; எபே 1:13, 14

கொலோசெயர் 1:13

இணைவசனங்கள்

  • +எபே 2:1, 2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    1/15/2014, பக். 11

    10/1/2002, பக். 18

    10/15/1995, பக். 20

    4/15/1992, பக். 9-10

    10/1/1990, பக். 15

    என்றும் வாழலாம், பக். 136

    நியாயங்காட்டி, பக். 232

கொலோசெயர் 1:14

இணைவசனங்கள்

  • +எபே 1:7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 120

கொலோசெயர் 1:15

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “பிறப்பாகவும்.”

இணைவசனங்கள்

  • +யோவா 4:24; 10:30; 14:9; 1தீ 1:17
  • +வெளி 3:14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    நெருங்கி வாருங்கள், பக். 55-56, 232

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 15

    பைபிள் சொல்லித் தருகிறது, பக். 45

    பைபிள் கற்பிக்கிறது, பக். 42

    காவற்கோபுரம்,

    7/1/2003, பக். 15

    அறிவு, பக். 39-40

    நியாயங்காட்டி, பக். 408

கொலோசெயர் 1:16

இணைவசனங்கள்

  • +யோவா 1:3
  • +யோவா 1:10; எபி 1:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/1/2001, பக். 31

    என்றும் வாழலாம், பக். 191

    நியாயங்காட்டி, பக். 408

கொலோசெயர் 1:17

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “எல்லாவற்றுக்கும்.”

இணைவசனங்கள்

  • +யோவா 17:5

கொலோசெயர் 1:18

இணைவசனங்கள்

  • +எபே 1:22
  • +1கொ 15:23; வெளி 1:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    4/1/2007, பக். 22

கொலோசெயர் 1:19

இணைவசனங்கள்

  • +கொலோ 2:3, 9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    8/15/2011, பக். 24

கொலோசெயர் 1:20

அடிக்குறிப்புகள்

  • *

    சொல் பட்டியலைப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +லேவி 17:11
  • +2கொ 5:19; எபே 1:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    நெருங்கி வாருங்கள், பக். 146-147

    காவற்கோபுரம்,

    8/15/2011, பக். 24

    1/15/2009, பக். 28-29

    1/15/1997, பக். 11-12

    12/15/1994, பக். 11-13

கொலோசெயர் 1:22

இணைவசனங்கள்

  • +1கொ 1:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    12/15/1994, பக். 12

கொலோசெயர் 1:23

இணைவசனங்கள்

  • +வெளி 2:10
  • +1கொ 3:11
  • +1கொ 15:58; எபி 3:14
  • +1தீ 3:16
  • +எபே 3:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 217

    காவற்கோபுரம் (படிப்பு),

    4/2020, பக். 7

    காவற்கோபுரம்,

    4/1/2001, பக். 11

கொலோசெயர் 1:24

இணைவசனங்கள்

  • +எபே 3:1
  • +எபே 1:22, 23
  • +அப் 9:16; பிலி 3:10

கொலோசெயர் 1:25

இணைவசனங்கள்

  • +1கொ 9:16, 17

கொலோசெயர் 1:26

அடிக்குறிப்புகள்

  • *

    சொல் பட்டியலைப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +எபே 3:5-7; 5:32
  • +லூ 8:10; 1கொ 2:7
  • +ரோ 16:25, 26

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    12/15/1994, பக். 12-13

கொலோசெயர் 1:27

இணைவசனங்கள்

  • +எபே 3:8, 9
  • +ரோ 8:18

கொலோசெயர் 1:28

இணைவசனங்கள்

  • +எபே 4:13

கொலோசெயர் 1:29

இணைவசனங்கள்

  • +பிலி 4:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    12/15/1994, பக். 13

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

கொலோ. 1:11கொ 4:17
கொலோ. 1:52தீ 4:8; 1பே 1:3, 4
கொலோ. 1:6கொலோ 1:23; 1தீ 3:16
கொலோ. 1:7கொலோ 4:12, 13; பிலே 23
கொலோ. 1:9எபே 1:15, 16
கொலோ. 1:92தீ 2:7; 1யோ 5:20
கொலோ. 1:9பிலி 1:9
கொலோ. 1:10எபே 1:17; 2பே 1:2
கொலோ. 1:11எபே 3:14, 16
கொலோ. 1:12ரோ 8:17; எபே 1:13, 14
கொலோ. 1:13எபே 2:1, 2
கொலோ. 1:14எபே 1:7
கொலோ. 1:15யோவா 4:24; 10:30; 14:9; 1தீ 1:17
கொலோ. 1:15வெளி 3:14
கொலோ. 1:16யோவா 1:3
கொலோ. 1:16யோவா 1:10; எபி 1:2
கொலோ. 1:17யோவா 17:5
கொலோ. 1:18எபே 1:22
கொலோ. 1:181கொ 15:23; வெளி 1:5
கொலோ. 1:19கொலோ 2:3, 9
கொலோ. 1:20லேவி 17:11
கொலோ. 1:202கொ 5:19; எபே 1:10
கொலோ. 1:221கொ 1:8
கொலோ. 1:23வெளி 2:10
கொலோ. 1:231கொ 3:11
கொலோ. 1:231கொ 15:58; எபி 3:14
கொலோ. 1:231தீ 3:16
கொலோ. 1:23எபே 3:8
கொலோ. 1:24எபே 3:1
கொலோ. 1:24எபே 1:22, 23
கொலோ. 1:24அப் 9:16; பிலி 3:10
கொலோ. 1:251கொ 9:16, 17
கொலோ. 1:26எபே 3:5-7; 5:32
கொலோ. 1:26லூ 8:10; 1கொ 2:7
கொலோ. 1:26ரோ 16:25, 26
கொலோ. 1:27எபே 3:8, 9
கொலோ. 1:27ரோ 8:18
கொலோ. 1:28எபே 4:13
கொலோ. 1:29பிலி 4:13
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
கொலோசெயர் 1:1-29

கொலோசெயருக்குக் கடிதம்

1 கடவுளுடைய விருப்பத்தால்* கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாக இருக்கும் பவுல் நம் சகோதரராகிய தீமோத்தேயுவோடு+ சேர்ந்து, 2 கொலோசெ நகரத்தில் கிறிஸ்துவுடன் ஒன்றுபட்டிருக்கிற பரிசுத்தவான்களும் உண்மையுள்ளவர்களுமான சகோதரர்களுக்கு எழுதுவது:

நம் பரலோகத் தகப்பனாகிய கடவுளிடமிருந்து உங்களுக்கு அளவற்ற கருணையும் சமாதானமும் கிடைக்கட்டும்.

3 உங்களுக்காக நாங்கள் ஜெபம் செய்யும்போதெல்லாம் நம் எஜமான் இயேசு கிறிஸ்துவின் தகப்பனாகிய கடவுளுக்கு நன்றி சொல்கிறோம்; 4 ஏனென்றால், கிறிஸ்து இயேசுமீது நீங்கள் வைத்திருக்கிற விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லார்மீதும் நீங்கள் காட்டுகிற அன்பையும் பற்றிக் கேள்விப்பட்டோம். 5 உங்களுடைய பரலோக நம்பிக்கை நிறைவேறப்போவதைப்+ பற்றி நீங்கள் தெரிந்திருப்பதால் அப்படிப்பட்ட நல்ல மனப்பான்மையைக் காட்டுகிறீர்கள். சத்தியத்தின் செய்தியாகிய நல்ல செய்தி உங்களுக்கு அறிவிக்கப்பட்ட சமயத்தில் இந்த நம்பிக்கையைப் பற்றித் தெரிந்துகொண்டீர்கள். 6 உலகம் முழுவதும் பரவி ஏராளமாகப் பலன் தந்து வருகிற அந்த நல்ல செய்தி+ உங்களிடமும் வந்து சேர்ந்தது; கடவுளுடைய அளவற்ற கருணையைப் பற்றிய உண்மையை நீங்கள் திருத்தமாகக் கேட்டுத் தெரிந்துகொண்ட நாள்முதல் உங்கள் மத்தியிலும் பலன் தந்து வருகிறது. 7 அதைத்தான் நம் அன்பான சக அடிமையாகிய எப்பாப்பிராவிடமிருந்து+ நீங்கள் தெரிந்துகொண்டீர்கள். அவர் கிறிஸ்துவின் உண்மையுள்ள ஊழியராக எங்கள் சார்பில் சேவை செய்கிறார். 8 கடவுளுடைய சக்தியால் நிறைந்து நீங்கள் காட்டுகிற அன்பைப் பற்றியும் அவர்தான் எங்களிடம் சொன்னார்.

9 அதனால், உங்களுடைய அன்பையும் விசுவாசத்தையும் நாங்கள் கேள்விப்பட்ட நாள்முதல் உங்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்கிறோம்.+ எல்லா ஞானத்தையும் ஆன்மீக விஷயங்களைப் பற்றிய புரிந்துகொள்ளுதலையும்+ நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், கடவுளுடைய விருப்பத்தை* பற்றிய திருத்தமான அறிவால் நிரப்பப்பட வேண்டும்+ என்றும் ஜெபம் செய்கிறோம். 10 அப்போதுதான், கடவுளாகிய யெகோவாவுக்கு* ஏற்ற விதத்தில் நடந்து அவரை முழுமையாகப் பிரியப்படுத்துவீர்கள்; நீங்கள் செய்கிற எல்லா நல்ல செயல்களும் பலன் தரும், அவரைப் பற்றிய திருத்தமான அறிவில்+ மேலும் மேலும் வளருவீர்கள். 11 அதுமட்டுமல்ல, நீங்கள் பொறுமையோடும் சந்தோஷத்தோடும் எல்லாவற்றையும் சகித்துக்கொள்வதற்காக, கடவுளுடைய மகா வல்லமையால் நீங்கள் எல்லா வல்லமையையும் பெற்று பலப்படுத்தப்படுவீர்கள்.+ 12 அறிவொளி பெற்ற பரிசுத்தவான்களுடைய ஆஸ்தியில்+ பங்கு பெறுவதற்கு உங்களைத் தகுதியுள்ளவர்களாக்கிய பரலோகத் தகப்பனுக்கு நன்றி சொல்வீர்கள்.

13 அவர் நம்மை இருளின் அதிகாரத்திலிருந்து காப்பாற்றி,+ தன்னுடைய அன்பான மகனின் அரசாங்கத்துக்குக் கொண்டுவந்தார். 14 அந்த மகனுடைய மீட்புவிலையால் நமக்கு விடுதலை, அதாவது பாவ மன்னிப்பு, கிடைத்திருக்கிறது.+ 15 அவர் பார்க்க முடியாத கடவுளுடைய சாயலாகவும்+ படைப்புகளிலேயே முதல் படைப்பாகவும்*+ இருக்கிறார். 16 ஏனென்றால், பரலோகத்தில் இருப்பவை, பூமியில் இருப்பவை, பார்க்க முடிந்தவை, பார்க்க முடியாதவை ஆகிய எல்லாம்+—அவை சிம்மாசனங்களோ தலைமை ஸ்தானங்களோ அரசாங்கங்களோ அதிகாரங்களோ எதுவாக இருந்தாலும்—அவர் மூலம்தான் படைக்கப்பட்டன. எல்லாமே அவர் வழியாகவும் அவருக்காகவும் படைக்கப்பட்டன.+ 17 அவர் எல்லா படைப்புகளுக்கும்* முன்பே இருக்கிறார்;+ அவர் மூலமாகத்தான் எல்லாம் உண்டாக்கப்பட்டன. 18 அவர்தான் சபையாகிய உடலுக்குத் தலையாக இருக்கிறார்,+ அவர்தான் முதலானவராக இருக்கிறார், முதன்முதலில் உயிரோடு எழுப்பப்பட்டவராக இருக்கிறார்;+ இப்படி, எல்லாவற்றிலும் முதன்மையானவராக இருக்கிறார். 19 ஏனென்றால், எல்லாம் அவருக்குள் நிறைவாகக் குடியிருக்க வேண்டும்+ என்று கடவுள் விரும்பினார். 20 அதோடு, சித்திரவதைக் கம்பத்தில்* சிந்தப்பட்ட இரத்தத்தால்+ சமாதானத்தை ஏற்படுத்தி, பூமியிலும் பரலோகத்திலும் இருக்கிற எல்லாவற்றையும் அவர் மூலமாகத் தன்னோடு சமரசமாக்க வேண்டுமென்றும் கடவுள் விரும்பினார்.+

21 ஒருகாலத்தில் நீங்கள் கெட்ட விஷயங்களையே நினைத்துக்கொண்டிருந்ததால் கடவுளுக்கு அன்னியர்களாகவும் எதிரிகளாகவும் இருந்தீர்கள். 22 ஆனால், இப்போது கடவுள் உங்களைப் பரிசுத்தமுள்ளவர்களாகவும் களங்கமில்லாதவர்களாகவும் குற்றமில்லாதவர்களாகவும் தனக்கு முன்னால் நிறுத்துவதற்காக,+ மனித உடலில் இருந்தவருடைய மரணத்தின் மூலம் உங்களைத் தன்னோடு சமரசமாக்கியிருக்கிறார். 23 ஆனால், நீங்கள் விசுவாசத்தை விட்டுவிடாதவர்களாகவும்,+ அதன் அஸ்திவாரத்தின்மேல்+ நிலையாய் நிற்கிறவர்களாகவும்,+ உறுதியானவர்களாகவும், நல்ல செய்தியால் பெற்ற நம்பிக்கையைவிட்டு விலகாதவர்களாகவும் இருக்க வேண்டும். அந்த நல்ல செய்தி வானத்தின் கீழ் இருக்கிற எல்லா மக்களுக்கும் பிரசங்கிக்கப்பட்டது;+ அந்த நல்ல செய்தியை அறிவிப்பதற்காகத்தான் பவுலாகிய நான் ஊழியனானேன்.+

24 இப்போது உங்களுக்காகத் துன்பப்படுவதில்+ சந்தோஷப்படுகிறேன்; கிறிஸ்துவின் உடலாகிய சபையைச்+ சேர்ந்த நான் இன்னும் முழுமையாக உபத்திரவங்களை அனுபவிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன்.+ 25 கடவுளுடைய வார்த்தையை உங்களுக்கு முழுமையாய்ப் பிரசங்கிப்பதற்காக அவர் எனக்குக் கொடுத்த நிர்வாகப் பொறுப்பின்படி,+ அந்தச் சபைக்கு நான் ஊழியனானேன். 26 கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற பரிசுத்த ரகசியம்+ கடந்த சகாப்தங்களுக்கும்* கடந்த தலைமுறைகளுக்கும் மறைக்கப்பட்டிருந்தது.+ ஆனால், இப்போது கடவுளுடைய பரிசுத்தவான்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.+ 27 மகத்தான ஆசீர்வாதங்கள் நிறைந்த அந்தப் பரிசுத்த ரகசியத்தை+ மற்ற தேசத்து மக்களுக்குச் சொல்வதில் கடவுள் சந்தோஷம் அடைந்திருக்கிறார். கிறிஸ்து உங்களோடு ஒன்றுபட்டிருப்பதால் அவரோடு மகிமைப்படுவதற்கான+ நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது என்பதுதான் அந்தப் பரிசுத்த ரகசியம். 28 அவரைப் பற்றித்தான் நாங்கள் அறிவித்து வருகிறோம். ஒவ்வொருவரையும் கிறிஸ்துவின் முதிர்ச்சியுள்ள சீஷராகக்+ கடவுள் முன்னால் நிறுத்துவதற்காக ஒவ்வொருவருக்கும் புத்திசொல்லி, எல்லா ஞானத்தோடும் கற்றுக்கொடுத்து வருகிறோம். 29 எனக்குள் வல்லமையோடு செயல்படுகிற அவருடைய பலத்தின் உதவியால்+ கடினமாகவும் தீவிரமாகவும் இதற்காக உழைத்து வருகிறேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்