உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 30
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

நீதிமொழிகள் முக்கியக் குறிப்புகள்

      • 30

        • வறுமையும் வேண்டாம், அதிக செல்வமும் வேண்டாம் (8)

        • ஒருபோதும் திருப்தி அடையாதவை (15, 16)

        • அடையாளத்தை விட்டுச் செல்லாதவை (18, 19)

        • கணவனுக்குத் துரோகம் செய்கிற பெண் (20)

        • இயல்பாகவே ஞானமுள்ள உயிரினங்கள் (24)

நீதிமொழிகள் 30:2

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “புரிந்துகொள்ளுதல்.”

இணைவசனங்கள்

  • +யோபு 42:3

நீதிமொழிகள் 30:4

இணைவசனங்கள்

  • +யோவா 3:13
  • +ஏசா 40:12
  • +யோபு 38:4

நீதிமொழிகள் 30:5

இணைவசனங்கள்

  • +சங் 12:6
  • +ஆதி 15:1; 2சா 22:31; சங் 84:11

நீதிமொழிகள் 30:6

இணைவசனங்கள்

  • +உபா 4:2; வெளி 22:18

நீதிமொழிகள் 30:8

இணைவசனங்கள்

  • +நீதி 12:22
  • +மத் 6:11; 1தீ 6:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/1997, பக். 3

    5/1/1995, பக். 28

    விழித்தெழு!,

    11/8/1997, பக். 19

    6/22/1994, பக். 31

நீதிமொழிகள் 30:9

இணைவசனங்கள்

  • +உபா 6:10-12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/1997, பக். 3

    விழித்தெழு!,

    11/8/1997, பக். 19

நீதிமொழிகள் 30:10

இணைவசனங்கள்

  • +தானி 6:24

நீதிமொழிகள் 30:11

இணைவசனங்கள்

  • +லேவி 20:9; நீதி 19:26; மாற் 7:10, 11

நீதிமொழிகள் 30:12

இணைவசனங்கள்

  • +சங் 36:1, 2; ஏசா 65:5; 1யோ 1:8

நீதிமொழிகள் 30:13

இணைவசனங்கள்

  • +சங் 101:5; நீதி 6:16, 17

நீதிமொழிகள் 30:14

இணைவசனங்கள்

  • +சங் 14:4; நீதி 22:16; ஏசா 32:7

நீதிமொழிகள் 30:15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    10/1/1987, பக். 29

நீதிமொழிகள் 30:16

இணைவசனங்கள்

  • +நீதி 27:20

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    10/1/1987, பக். 29

நீதிமொழிகள் 30:17

இணைவசனங்கள்

  • +நீதி 23:22
  • +லேவி 20:9; உபா 21:18, 21; நீதி 20:20

நீதிமொழிகள் 30:18

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “நான் பார்த்து அதிசயப்படுகிற.”

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    10/1/1992, பக். 31

நீதிமொழிகள் 30:19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    6/15/1996, பக். 9-10

    10/1/1992, பக். 31

நீதிமொழிகள் 30:20

இணைவசனங்கள்

  • +நீதி 7:10, 11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    10/1/1992, பக். 31

நீதிமொழிகள் 30:22

இணைவசனங்கள்

  • +நீதி 19:10; பிர 10:7; ஏசா 3:4

நீதிமொழிகள் 30:23

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “நேசிக்கப்படாத.”

இணைவசனங்கள்

  • +ஆதி 16:5

நீதிமொழிகள் 30:24

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “மிக மிக.”

இணைவசனங்கள்

  • +யோபு 35:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    நெருங்கி வாருங்கள், பக். 173

நீதிமொழிகள் 30:25

இணைவசனங்கள்

  • +நீதி 6:6-8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    4/15/2009, பக். 16-17

    4/1/1996, பக். 12

நீதிமொழிகள் 30:26

அடிக்குறிப்புகள்

  • *

    இவை கற்பாறைகளுக்கு நடுவே வாழ்கிற ஒருவகையான பெரிய முயல்கள்.

இணைவசனங்கள்

  • +லேவி 11:5; சங் 104:18

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    4/15/2009, பக். 17-18

    விழித்தெழு!,

    3/8/1992, பக். 28-29

நீதிமொழிகள் 30:27

இணைவசனங்கள்

  • +யாத் 10:14; யோவே 1:4; 2:7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    4/15/2009, பக். 18-19

நீதிமொழிகள் 30:28

இணைவசனங்கள்

  • +லேவி 11:29, 30

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    4/15/2009, பக். 19

    விழித்தெழு!,

    9/2006, பக். 5-7

    4/8/1990, பக். 31

நீதிமொழிகள் 30:30

இணைவசனங்கள்

  • +எண் 23:24; ஏசா 31:4

நீதிமொழிகள் 30:32

இணைவசனங்கள்

  • +நீதி 26:12
  • +நீதி 27:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    10/1/1987, பக். 29

நீதிமொழிகள் 30:33

இணைவசனங்கள்

  • +நீதி 26:21

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    4/1/2008, பக். 15

    10/1/1987, பக். 29

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

நீதி. 30:2யோபு 42:3
நீதி. 30:4யோவா 3:13
நீதி. 30:4ஏசா 40:12
நீதி. 30:4யோபு 38:4
நீதி. 30:5சங் 12:6
நீதி. 30:5ஆதி 15:1; 2சா 22:31; சங் 84:11
நீதி. 30:6உபா 4:2; வெளி 22:18
நீதி. 30:8நீதி 12:22
நீதி. 30:8மத் 6:11; 1தீ 6:8
நீதி. 30:9உபா 6:10-12
நீதி. 30:10தானி 6:24
நீதி. 30:11லேவி 20:9; நீதி 19:26; மாற் 7:10, 11
நீதி. 30:12சங் 36:1, 2; ஏசா 65:5; 1யோ 1:8
நீதி. 30:13சங் 101:5; நீதி 6:16, 17
நீதி. 30:14சங் 14:4; நீதி 22:16; ஏசா 32:7
நீதி. 30:16நீதி 27:20
நீதி. 30:17நீதி 23:22
நீதி. 30:17லேவி 20:9; உபா 21:18, 21; நீதி 20:20
நீதி. 30:20நீதி 7:10, 11
நீதி. 30:22நீதி 19:10; பிர 10:7; ஏசா 3:4
நீதி. 30:23ஆதி 16:5
நீதி. 30:24யோபு 35:11
நீதி. 30:25நீதி 6:6-8
நீதி. 30:26லேவி 11:5; சங் 104:18
நீதி. 30:27யாத் 10:14; யோவே 1:4; 2:7
நீதி. 30:28லேவி 11:29, 30
நீதி. 30:30எண் 23:24; ஏசா 31:4
நீதி. 30:32நீதி 26:12
நீதி. 30:32நீதி 27:2
நீதி. 30:33நீதி 26:21
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
நீதிமொழிகள் 30:1-33

நீதிமொழிகள்

30 யாக்கே என்பவரின் மகன் ஆகூர், இத்தியேலுக்கும் ஊகாலுக்கும் சொன்ன முக்கியமான விஷயங்கள்.

 2 மற்ற யாரையும்விட நான்தான் எதுவும் தெரியாதவனாக இருக்கிறேன்.+

மனிதர்களுக்கு இருக்க வேண்டிய புத்தி* எனக்கு இல்லை.

 3 நான் ஞானத்தைக் கற்றுக்கொள்ளவில்லை.

மகா பரிசுத்தமானவரைப் பற்றிய அறிவு எனக்கு இல்லை.

 4 வானத்துக்கு ஏறி இறங்கியவர் யார்?+

காற்றைத் தன் இரண்டு கைகளிலும் பிடித்தவர் யார்?

தண்ணீரைத் தன் உடையில் கட்டிவைத்தவர் யார்?+

பூமியின் எல்லைகளையெல்லாம் குறித்தவர் யார்?+

அவருடைய பெயர் என்ன? அவருடைய மகனின் பெயர் என்ன? உனக்குத் தெரியுமா?

 5 கடவுளுடைய ஒவ்வொரு வார்த்தையும் புடமிடப்பட்டது.+

அவரிடம் தஞ்சம் புகுந்தவர்களுக்கு அவர் ஒரு கேடயம்.+

 6 அவருடைய வார்த்தைகளோடு ஒன்றையும் சேர்க்காதே.+

அப்படிச் சேர்த்தால் அவர் உன்னைக் கண்டிப்பார்.

நீ ஒரு பொய்யன் என்பது நிரூபணமாகும்.

 7 கடவுளே, நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம்

எனக்காக இரண்டு காரியங்களை நீங்கள் செய்ய வேண்டும்.

 8 பொய் புரட்டை என்னைவிட்டுத் தூரமாக நீக்கிவிடுங்கள்.+

எனக்கு வறுமையையோ அதிக செல்வத்தையோ கொடுக்காமல்,

தேவையான அளவு உணவு மட்டும் கொடுங்கள்.+

 9 ஏனென்றால், எல்லா வசதிகளும் கிடைத்த திருப்தியில், “யார் அந்த யெகோவா?” என்று நான் கேட்டுவிடக் கூடாது.+

அதேபோல், வறுமையால் திருடனாக மாறி, உங்களுடைய பெயரைக் களங்கப்படுத்திவிடக் கூடாது.

10 வேலைக்காரனைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் எஜமானிடம் சொல்லாதே.

அப்படிச் சொன்னால், அவன் உன்னைச் சபிப்பான், நீ குற்றவாளியாக ஆகிவிடுவாய்.+

11 அப்பாவைச் சபிக்கிற தலைமுறையும்

அம்மாவைப் பாராட்டாத தலைமுறையும் உண்டு.+

12 அசுத்தமானவர்களாக இருந்தாலும்கூட

சுத்தமாக இருப்பதாக நினைத்துக்கொள்கிற தலைமுறையும் உண்டு.+

13 கண்களில் அளவுக்கு மீறிய ஆணவமும்+

பார்வையில் அளவுக்கு மீறிய அகம்பாவமும் உள்ள தலைமுறையும் உண்டு.

14 வாள் போன்ற பற்களையும்

வெட்டுக்கத்தி போன்ற தாடைகளையும் கொண்ட தலைமுறையும் உண்டு.

அது உலகத்திலுள்ள ஏழை எளியவர்களை விழுங்குகிறது.+

15 “கொடு! கொடு!” என்று கத்துகிற இரண்டு மகள்கள் அட்டைப்பூச்சிகளுக்கு உண்டு.

திருப்தியே அடையாத மூன்று காரியங்கள் உண்டு.

“போதும்!” என்று ஒருபோதும் சொல்லாத நான்கு காரியங்கள் உண்டு.

16 அவை: கல்லறை,+ மலடியின் கர்ப்பப்பை,

தண்ணீர் இல்லாத நிலம்,

“போதும்!” என்று சொல்லாத நெருப்பு.

17 ஒருவன் தன் அப்பாவை ஏளனம் செய்து, அம்மாவின் பேச்சை மதிக்காமல் போனால்,+

அவனுடைய கண்களைப் பள்ளத்தாக்கில் திரிகிற அண்டங்காக்கைகள் கொத்தி எடுக்கும்,

இளம் கழுகுகள் அவற்றைத் தின்றுவிடும்.+

18 என்னுடைய அறிவுக்கு எட்டாத* மூன்று விஷயங்கள் இருக்கின்றன.

எனக்குப் புரியாத நான்கு விஷயங்கள் இருக்கின்றன.

19 அவை: வானத்தில் பறக்கிற கழுகின் வழி,

பாறையில் ஊர்ந்துபோகிற பாம்பின் வழி,

கடலில் மிதந்துசெல்கிற கப்பலின் வழி,

இளம் பெண்ணோடு பழகுகிற ஆணின் வழி.

20 கணவனுக்குத் துரோகம் செய்கிற பெண்ணின் வழி இதுதான்:

அவள் சாப்பிட்டுவிட்டு, வாயைத் துடைத்துக்கொள்கிறாள்.

பின்பு, “நான் எந்தத் தப்பும் செய்யவில்லை” என்று சொல்கிறாள்.+

21 இந்தப் பூமியையே அதிர வைக்கிற மூன்று விஷயங்கள் இருக்கின்றன.

இந்தப் பூமியால் தாங்க முடியாத நான்கு விஷயங்கள் இருக்கின்றன.

22 அவை: ஓர் அடிமை அரசனாக ஆட்சி செய்வது,+

ஒரு முட்டாள் வயிறுமுட்ட சாப்பிடுவது,

23 வெறுக்கப்பட்ட* பெண் ஒருவனுக்கு மனைவியாவது,

எஜமானியின் இடத்தை வேலைக்காரி பிடித்துக்கொள்வது.+

24 இந்தப் பூமியிலுள்ள மிகச் சிறிய உயிரினங்களில் நான்கு உண்டு.

ஆனால், அவை இயல்பாகவே* ஞானமுள்ளவை.+

25 அவை: அற்பமான ஜீவன்களாக இருந்தும்

கோடைக் காலத்தில் உணவைச் சேர்த்து வைக்கிற எறும்புகள்.+

26 பலம் இல்லாத ஜீவன்களாக இருந்தும்

பாறைகளில் பொந்துகளை அமைக்கிற கற்பாறை முயல்கள்.*+

27 அரசன் இல்லாமலேயே,

அணி அணியாக முன்னேறிப் போகிற வெட்டுக்கிளிகள்.+

28 கால்களால் சுவரைப் பற்றிக்கொண்டு,

ராஜாவின் அரண்மனைக்குள் போகிற வீட்டுப் பல்லி.+

29 கம்பீரமாய் நடக்கிற மூன்று உண்டு.

வீறுநடை போடுகிற நான்கு உண்டு.

30 அவை: விலங்குகளிலேயே மகா பலம்படைத்ததும்,

யாரைக் கண்டும் பயந்து ஓடாததுமான சிங்கம்;+

31 வேட்டை நாய்; வெள்ளாட்டுக் கடா;

ராஜாவின் தலைமையில் போகும் படை.

32 உன்னை நீயே முட்டாள்தனமாக உயர்த்தியிருந்தால்,+

அல்லது அப்படிச் செய்யத் திட்டம் போட்டிருந்தால்,

உன் கையால் வாயை மூடிக்கொள்.+

33 பாலைக் கடைந்தால் வெண்ணெய் வருவது போலவும்,

மூக்கைப் பிசைந்தால் இரத்தம் வருவது போலவும்,

கோபத்தைக் கிளறினால் சண்டைகள் வரும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்