உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 23
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

2 நாளாகமம் முக்கியக் குறிப்புகள்

      • யோய்தா தலையிடுகிறார்; யோவாசை ராஜாவாக்குகிறார் (1-11)

      • அத்தாலியாள் கொல்லப்படுகிறாள் (12-15)

      • யோய்தா செய்த சீர்திருத்தங்கள் (16-21)

2 நாளாகமம் 23:1

இணைவசனங்கள்

  • +2ரா 11:4

2 நாளாகமம் 23:2

இணைவசனங்கள்

  • +2நா 8:14

2 நாளாகமம் 23:3

இணைவசனங்கள்

  • +2சா 5:3
  • +2சா 7:8, 12; 1ரா 2:4; 9:5; சங் 89:20, 29

2 நாளாகமம் 23:4

இணைவசனங்கள்

  • +1நா 24:3
  • +2ரா 11:5-8; 1நா 9:22-25; 26:1

2 நாளாகமம் 23:5

இணைவசனங்கள்

  • +1ரா 7:1
  • +1ரா 7:12

2 நாளாகமம் 23:6

இணைவசனங்கள்

  • +1நா 23:28, 32

2 நாளாகமம் 23:8

இணைவசனங்கள்

  • +2ரா 11:9-12
  • +1நா 24:1; 26:1

2 நாளாகமம் 23:9

அடிக்குறிப்புகள்

  • *

    பொதுவாக, வில்வீரர்கள் இவற்றை வைத்திருப்பார்கள்.

இணைவசனங்கள்

  • +1நா 26:26, 27; 2நா 5:1
  • +2சா 8:7
  • +2ரா 11:4

2 நாளாகமம் 23:11

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “மகுடத்தையும்.”

இணைவசனங்கள்

  • +2ரா 11:2
  • +உபா 17:18
  • +1சா 10:1, 24

2 நாளாகமம் 23:12

இணைவசனங்கள்

  • +2ரா 11:13-16

2 நாளாகமம் 23:13

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “அவருடைய தூண்.”

இணைவசனங்கள்

  • +2நா 23:1
  • +1ரா 1:39, 40

2 நாளாகமம் 23:16

இணைவசனங்கள்

  • +2ரா 11:17, 18; 2நா 34:1, 31

2 நாளாகமம் 23:17

இணைவசனங்கள்

  • +2ரா 10:27, 28
  • +உபா 12:3; 2நா 34:1, 4
  • +உபா 13:5; 1ரா 18:40

2 நாளாகமம் 23:18

இணைவசனங்கள்

  • +யாத் 29:38; எண் 28:2
  • +1நா 23:6, 30, 31

2 நாளாகமம் 23:19

இணைவசனங்கள்

  • +1நா 9:26; 26:1, 13

2 நாளாகமம் 23:20

இணைவசனங்கள்

  • +2ரா 11:9
  • +1ரா 7:7; 2ரா 11:19, 20

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

2 நா. 23:12ரா 11:4
2 நா. 23:22நா 8:14
2 நா. 23:32சா 5:3
2 நா. 23:32சா 7:8, 12; 1ரா 2:4; 9:5; சங் 89:20, 29
2 நா. 23:41நா 24:3
2 நா. 23:42ரா 11:5-8; 1நா 9:22-25; 26:1
2 நா. 23:51ரா 7:1
2 நா. 23:51ரா 7:12
2 நா. 23:61நா 23:28, 32
2 நா. 23:82ரா 11:9-12
2 நா. 23:81நா 24:1; 26:1
2 நா. 23:91நா 26:26, 27; 2நா 5:1
2 நா. 23:92சா 8:7
2 நா. 23:92ரா 11:4
2 நா. 23:112ரா 11:2
2 நா. 23:11உபா 17:18
2 நா. 23:111சா 10:1, 24
2 நா. 23:122ரா 11:13-16
2 நா. 23:132நா 23:1
2 நா. 23:131ரா 1:39, 40
2 நா. 23:162ரா 11:17, 18; 2நா 34:1, 31
2 நா. 23:172ரா 10:27, 28
2 நா. 23:17உபா 12:3; 2நா 34:1, 4
2 நா. 23:17உபா 13:5; 1ரா 18:40
2 நா. 23:18யாத் 29:38; எண் 28:2
2 நா. 23:181நா 23:6, 30, 31
2 நா. 23:191நா 9:26; 26:1, 13
2 நா. 23:202ரா 11:9
2 நா. 23:201ரா 7:7; 2ரா 11:19, 20
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
2 நாளாகமம் 23:1-21

2 நாளாகமம்

23 ஏழாம் வருஷத்தில், யோய்தா தைரியமாக ஒரு காரியத்தைச் செய்தார். அதாவது, நூறு வீரர்களுக்குத் தலைவர்களாக இருந்த எரோகாமின் மகன் அசரியா, யெகோனானின் மகன் இஸ்மவேல், ஓபேதின் மகன் அசரியா, அதாயாவின் மகன் மாசெயா, சிக்ரியின் மகன் எலிஷாபாத் ஆகியோருடன் ஓர் ஒப்பந்தம் செய்தார்.+ 2 அவர்கள் யூதாவிலிருந்த எல்லா நகரங்களுக்கும் போய், அங்கிருந்த லேவியர்களையும்+ இஸ்ரவேலின் தந்தைவழிக் குடும்பத் தலைவர்களையும் ஒன்றுகூட்டினார்கள். அவர்கள் எல்லாரும் எருசலேமுக்கு வந்ததும், 3 சபையார் எல்லாரும் உண்மைக் கடவுளின் ஆலயத்தில் ராஜாவுடன் ஒப்பந்தம் செய்தார்கள்.+ பின்பு, யோய்தா அவர்களிடம்,

“தாவீதின் வாரிசுகள் ஆட்சி செய்வார்கள் என்று யெகோவா வாக்குக் கொடுத்தபடியே, ராஜாவின் மகன் ஆட்சி செய்வான்.+ 4 நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், ஓய்வுநாளில் வேலைக்கு வருகிற குருமார்களையும் லேவியர்களையும் மூன்று குழுக்களாகப் பிரித்துக்கொள்ளுங்கள்.+ ஒரு குழுவினர், வாசலைக் காவல்காக்க வேண்டும்.+ 5 இன்னொரு குழுவினர், அரண்மனையைக் காவல்காக்க வேண்டும்.+ மற்றொரு குழுவினர், ‘அஸ்திவார நுழைவாசலில்’ நிற்க வேண்டும். மக்கள் எல்லாரும் யெகோவாவுடைய ஆலயத்தின் பிரகாரங்களில் நிற்க வேண்டும்.+ 6 வேலைக்கு வருகிற குருமார்களையும் லேவியர்களையும் தவிர வேறு யாரையும் யெகோவாவின் ஆலயத்துக்குள்ளே அனுமதிக்காதீர்கள்.+ பரிசுத்த வேலைக்காக அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் அவர்கள் மட்டும் நுழையலாம். மற்ற எல்லாரும் ஆலயத்துக்கு வெளியே நின்றுகொண்டு, யெகோவாவுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்ய வேண்டும். 7 லேவியர்கள் தங்களுடைய கைகளில் ஆயுதங்களோடு ராஜாவைச் சுற்றி நின்று பாதுகாக்க வேண்டும். உங்களை மீறி ஆலயத்துக்குள் நுழைகிற யாரையும் உயிரோடு விடக்கூடாது. ராஜா எங்கே போனாலும் நீங்களும் அவர் கூடவே போக வேண்டும்” என்று சொன்னார்.

8 குருவாகிய யோய்தா சொன்னபடியே லேவியர்களும் யூதா மக்கள் எல்லாரும் செய்தார்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய பிரிவிலிருந்த ஆட்கள் எல்லாரையும், அதாவது ஓய்வுநாளில் வேலைக்கு வந்தவர்கள், அன்றைக்கு விடுப்பு எடுக்க வேண்டியவர்கள் என எல்லாரையும், கூட்டிக்கொண்டு குருவாகிய யோய்தாவிடம் வந்தார்கள்.+ ஏனென்றால், விடுப்பு எடுக்க வேண்டிய பிரிவினர்களையும் அன்றைக்கு யோய்தா வேலைக்கு வரச் சொல்லியிருந்தார்.+ 9 உண்மைக் கடவுளின் ஆலயத்திலிருந்த+ தாவீது ராஜாவின் ஈட்டிகளையும் சிறிய கேடயங்களையும்* வட்டவடிவ கேடயங்களையும்+ எடுத்து நூறு வீரர்களுக்குத் தலைவர்களிடம்+ குருவாகிய யோய்தா கொடுத்தார். 10 ஆலயத்தின் வலது பக்கம் தொடங்கி இடது பக்கம் வரையிலும், பலிபீடத்தின் பக்கத்திலும் ஆலயத்தின் பக்கத்திலும் எல்லா ஆட்களையும் ஆயுதம் ஏந்திக்கொண்டு நிற்க வைத்தார். இப்படி, ராஜாவைச் சுற்றிலும் நிற்க வைத்தார். 11 பின்பு, அவர்கள் ராஜாவின் மகனை வெளியே கூட்டிக்கொண்டு வந்து,+ அவனுடைய தலையில் கிரீடத்தையும்* திருச்சட்ட சுருளையும்+ வைத்து அவனை ராஜாவாக்கினார்கள். யோய்தாவும் அவருடைய மகன்களும் அவனை அபிஷேகம் செய்தார்கள். “ராஜா பல்லாண்டு வாழ்க!”+ என்று சொன்னார்கள்.

12 மக்கள் ஓடுகிற சத்தத்தையும் ராஜாவைப் புகழ்கிற சத்தத்தையும் அத்தாலியாள் கேட்டவுடனே, யெகோவாவின் ஆலயத்தில் அவர்கள் கூடியிருந்த இடத்துக்கு வந்தாள்.+ 13 வாசலில் இருந்த தூண்* பக்கத்தில் ராஜா நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தாள். தலைவர்களும்+ எக்காளம் ஊதுகிறவர்களும் ராஜாவோடு இருந்தார்கள். மக்கள் எல்லாரும் சந்தோஷமாக இருந்தார்கள்,+ எக்காளங்களை ஊதிக்கொண்டிருந்தார்கள். இசைக் கருவிகளை வைத்திருந்த பாடகர்கள் அந்தக் கொண்டாட்டத்தை முன்நின்று நடத்தினார்கள். அதைப் பார்த்ததும் அத்தாலியாள் தன் உடையைக் கிழித்துக்கொண்டு, “சதி! சதி!” என்று கூச்சல் போட்டாள். 14 அப்போது நூறு வீரர்களுக்குத் தலைவர்களை, அதாவது படைக்குத் தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களை, குருவாகிய யோய்தா வெளியே கூப்பிட்டு, “அவளை வீரர்கள் நடுவிலிருந்து வெளியே கொண்டுபோங்கள். எவனாவது அவள் பின்னால் போனால் அவனையும் வாளால் வெட்டிக் கொல்லுங்கள்!” என்று கட்டளையிட்டார். ஏனென்றால், “அவளை யெகோவாவின் ஆலயத்தில் கொல்ல வேண்டாம்” என்று அவர் சொல்லியிருந்தார். 15 அதனால் அவர்கள் அத்தாலியாளைப் பிடித்து, அரண்மனையிலிருந்த ‘குதிரை நுழைவாசலுக்கு’ கொண்டுபோய் உடனடியாகக் கொன்றுபோட்டார்கள்.

16 பின்பு, என்றென்றும் யெகோவாவின் மக்களாக இருக்க வேண்டும் என்பதற்காக தனக்கும், மக்கள் எல்லாருக்கும் ராஜாவுக்கும் இடையே யோய்தா ஓர் ஒப்பந்தம் செய்தார்.+ 17 அதன் பின்பு, மக்கள் எல்லாரும் பாகால் கோயிலுக்குப் போய் அதை இடித்துப்போட்டார்கள்.+ பாகாலின் பலிபீடங்களையும் சிலைகளையும் தூள்தூளாக்கினார்கள்.+ பாகாலின் பூசாரியான மாத்தானை அந்தப் பலிபீடங்களுக்கு முன்னால் கொன்றுபோட்டார்கள்.+ 18 பின்பு, யெகோவாவின் ஆலயத்தை மேற்பார்வை செய்கிற பொறுப்பை குருமார்களுக்கும் லேவியர்களுக்கும் யோய்தா கொடுத்தார். யெகோவாவின் ஆலயத்தைக் கவனித்துக்கொள்வதற்காக தாவீது அவர்களைப் பல பிரிவுகளாகப் பிரித்திருந்தபடியே யோய்தாவும் அவர்களைப் பிரித்து, மோசேயின் திருச்சட்டத்தில் எழுதியிருந்தபடி+ யெகோவாவுக்குத் தகன பலிகளைச் செலுத்துவதற்காகவும்+ தாவீது சொல்லியிருந்தபடி சந்தோஷமாகப் பாடல்கள் பாடுவதற்காகவும் அவர்களை நியமித்தார். 19 எந்த விதத்திலாவது தீட்டுப்பட்ட ஆட்கள் உள்ளே நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக யெகோவாவின் ஆலயக் கதவுகளுக்குப் பக்கத்தில் வாயிற்காவலர்களை நிறுத்தினார்.+ 20 நூறு வீரர்களுக்குத் தலைவர்களையும்,+ முக்கியப் பிரமுகர்களையும், மக்களை ஆளுகிறவர்களையும், தேசத்து மக்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு, ராஜாவை யெகோவாவின் ஆலயத்திலிருந்து அரண்மனைக்குப் பாதுகாப்பாகக் கொண்டுவந்தார். அவர்கள் எல்லாரும் ‘உயர்ந்த நுழைவாசல்’ வழியாக அரண்மனைக்கு வந்து, யோவாசை சிம்மாசனத்தில் உட்கார வைத்தார்கள்.+ 21 அத்தாலியாளை வாளால் வெட்டிக் கொன்றதால், மக்கள் எல்லாரும் சந்தோஷப்பட்டார்கள், நகரத்தில் நிம்மதி நிலவியது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்