உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 22
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

2 நாளாகமம் முக்கியக் குறிப்புகள்

      • அகசியா யூதாவின் ராஜாவாகிறார் (1-9)

      • அத்தாலியாள் ஆட்சியைப் பிடிக்கிறாள் (10-12)

2 நாளாகமம் 22:1

இணைவசனங்கள்

  • +2நா 21:16, 17
  • +2ரா 8:24-26

2 நாளாகமம் 22:2

இணைவசனங்கள்

  • +2ரா 11:1, 13, 16; 2நா 24:7
  • +1ரா 16:28

2 நாளாகமம் 22:3

இணைவசனங்கள்

  • +1ரா 16:33; 2ரா 8:27, 28; மீ 6:16

2 நாளாகமம் 22:5

இணைவசனங்கள்

  • +2ரா 8:15; 10:32
  • +1ரா 22:3; 2நா 18:14

2 நாளாகமம் 22:6

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “வியாதிப்பட்டதால்.”

  • *

    எபிரெய கையெழுத்து பிரதிகள் சிலவற்றில் “அசரியா” என்று இருக்கிறது.

இணைவசனங்கள்

  • +யோசு 19:18, 23
  • +2ரா 9:15
  • +2ரா 3:1
  • +2ரா 9:16
  • +2ரா 8:16

2 நாளாகமம் 22:7

இணைவசனங்கள்

  • +1ரா 19:16; 2ரா 9:20, 21
  • +2ரா 9:6, 7

2 நாளாகமம் 22:8

இணைவசனங்கள்

  • +2ரா 10:10-14

2 நாளாகமம் 22:9

இணைவசனங்கள்

  • +2நா 17:3, 4
  • +2ரா 9:27, 28

2 நாளாகமம் 22:10

இணைவசனங்கள்

  • +2நா 22:2
  • +2ரா 11:1-3

2 நாளாகமம் 22:11

அடிக்குறிப்புகள்

  • *

    தாதி என்பவர் குழந்தைகளைக் கவனித்துக்கொள்பவர்.

இணைவசனங்கள்

  • +2ரா 8:16
  • +2ரா 11:21
  • +2நா 23:1
  • +2சா 7:12, 13; 1ரா 15:4; 2நா 21:7

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

2 நா. 22:12நா 21:16, 17
2 நா. 22:12ரா 8:24-26
2 நா. 22:22ரா 11:1, 13, 16; 2நா 24:7
2 நா. 22:21ரா 16:28
2 நா. 22:31ரா 16:33; 2ரா 8:27, 28; மீ 6:16
2 நா. 22:52ரா 8:15; 10:32
2 நா. 22:51ரா 22:3; 2நா 18:14
2 நா. 22:6யோசு 19:18, 23
2 நா. 22:62ரா 9:15
2 நா. 22:62ரா 3:1
2 நா. 22:62ரா 9:16
2 நா. 22:62ரா 8:16
2 நா. 22:71ரா 19:16; 2ரா 9:20, 21
2 நா. 22:72ரா 9:6, 7
2 நா. 22:82ரா 10:10-14
2 நா. 22:92நா 17:3, 4
2 நா. 22:92ரா 9:27, 28
2 நா. 22:102நா 22:2
2 நா. 22:102ரா 11:1-3
2 நா. 22:112ரா 8:16
2 நா. 22:112ரா 11:21
2 நா. 22:112நா 23:1
2 நா. 22:112சா 7:12, 13; 1ரா 15:4; 2நா 21:7
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
2 நாளாகமம் 22:1-12

2 நாளாகமம்

22 பின்பு, எருசலேம் மக்கள் யோராமின் கடைசி மகனான அகசியாவை அடுத்த ராஜாவாக்கினார்கள். ஏனென்றால், அரேபியர்களுடன் வந்த கொள்ளைக்கூட்டத்தார் யூதாவின் முகாமைத் தாக்கி, அவருடைய மூத்த மகன்கள் எல்லாரையும் கொன்றுபோட்டிருந்தார்கள்.+ அதனால், யோராமின் கடைசி மகனான அகசியா யூதாவை ஆட்சி செய்ய ஆரம்பித்தார்.+ 2 ராஜாவானபோது அவருக்கு 22 வயது. அவர் எருசலேமில் ஒரு வருஷம் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அத்தாலியாள்,+ இவள் உம்ரியின்+ பேத்தி.

3 ஆகாபின் வீட்டாரைப் போலவே+ அகசியா நடந்துகொண்டார்; மோசமான வழியில் நடப்பதற்கு அவருடைய அம்மா அவருக்கு ஆலோசனை கொடுத்தாள்; 4 அவருடைய அப்பா இறந்த பின்பு ஆகாபின் வீட்டார் அவருக்கு ஆலோசகர்களாக ஆனார்கள். அதனால், அவர்களைப் போலவே யெகோவாவுக்குப் பிடிக்காத காரியங்களை அகசியா செய்துவந்தார். அவருடைய அழிவுக்கு இதுதான் காரணம். 5 அவர்களுடைய பேச்சைக் கேட்டு, இஸ்ரவேலின் ராஜாவான ஆகாபின் மகன் யோராமுடன் சேர்ந்து இவரும் போருக்குப் போனார். சீரியாவின் ராஜாவான அசகேலை+ எதிர்த்துப் போர் செய்ய ராமோத்-கீலேயாத்துக்கு+ யோராமுடன் போனார். அந்தப் போரில் வில்வீரர்கள் அம்பு எறிந்து யோராமைத் தாக்கிக் காயப்படுத்தினார்கள். 6 சீரியாவின் ராஜாவான அசகேலை எதிர்த்து ராமாவில் போர் செய்தபோது யோராம் காயமடைந்ததால், குணமாவதற்காக யெஸ்ரயேலுக்குத்+ திரும்பிப் போனார்.+

ஆகாபின் மகனான யோராம்+ காயமடைந்ததால்*+ அவரைப் பார்க்க யூதாவின் ராஜாவும் யோராமின்+ மகனுமான அகசியா* யெஸ்ரயேலுக்குப் போனார். 7 யோராமைப் பார்க்க அகசியா போயிருந்த சமயத்தில் கடவுள் அவருக்கு அழிவைக் கொண்டுவந்தார். அகசியா அங்கே போயிருந்தபோது, நிம்சியின் பேரனான யெகூவைப்+ பார்ப்பதற்காக யோராமுடன் போனார். யெகோவா ஆகாபின் வீட்டாரை அழிப்பதற்காக யெகூவை அபிஷேகம் செய்திருந்தார்.+ 8 ஆகாபின் வீட்டாரை யெகூ ஒழித்துக்கட்ட ஆரம்பித்தபோது, யூதாவிலிருந்த அதிகாரிகளையும் அகசியாவின் சகோதரர்களின் மகன்களையும் பார்த்து அவர்களைக் கொன்றுபோட்டார்.+ இவர்கள் அகசியாவின் அமைச்சர்களாக இருந்தார்கள். 9 பின்பு, அவர் அகசியாவைத் தேடினார். சமாரியாவில் ஒளிந்துகொண்டிருந்த அகசியாவைப் பிடித்து யெகூவிடம் கொண்டுவந்தார்கள். பின்பு, அவரைக் கொன்றுபோட்டார்கள். “என்ன இருந்தாலும், இவர் யெகோவாவை முழு இதயத்தோடு வணங்கிய யோசபாத்தின் பேரன், இல்லையா?”+ என்று சொல்லி அவரை அடக்கம் செய்தார்கள்.+ அகசியாவுக்கு அடுத்தபடியாகத் தேசத்தை ஆட்சி செய்யும் அளவுக்கு அவருடைய குடும்பத்தில் வேறு யாருமே இருக்கவில்லை.

10 அகசியாவின் அம்மா அத்தாலியாள்,+ தன்னுடைய மகன் அகசியா இறந்த விஷயத்தைத் தெரிந்துகொண்டதும், யூதாவின் ராஜ வம்சத்தைச் சேர்ந்த வாரிசுகள் எல்லாரையும் கொன்றுபோட்டாள்.+ 11 ஆனால், யோராம் ராஜாவின்+ மகளான யோசேபியாத் அகசியாவின் மகன் யோவாசைக்+ காப்பாற்றினாள்; (அவள் குருவாகிய யோய்தாவின்+ மனைவி, அகசியாவின் சகோதரி.) மற்ற இளவரசர்கள் கொல்லப்படவிருந்த சமயத்தில், யாருக்கும் தெரியாமல் யோவாசை மட்டும் அங்கிருந்து தூக்கிக்கொண்டு போனாள்; பின்பு, அவனையும் அவனுடைய தாதியையும்* உட்புற படுக்கையறையில் ஒளித்து வைத்தாள். அவனை எப்படியோ அத்தாலியாளின் கண்ணில் படாமல் மறைத்து வைத்தார்கள்; அதனால், யோவாசின் உயிர் தப்பியது.+ 12 உண்மைக் கடவுளின் ஆலயத்தில் அவனை ஒளித்து வைத்திருந்தார்கள். அவன் ஆறு வருஷங்களுக்கு அவர்களோடு இருந்தான். அந்தச் சமயத்தில் அத்தாலியாள் அந்தத் தேசத்தை ஆட்சி செய்துவந்தாள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்