உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 21
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

1 நாளாகமம் முக்கியக் குறிப்புகள்

      • மக்களை தாவீது கணக்கெடுக்கிறார் (1-6)

      • யெகோவாவிடமிருந்து தண்டனை (7-17)

      • தாவீது ஒரு பலிபீடம் கட்டுகிறார் (18-30)

1 நாளாகமம் 21:1

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “எதிர்ப்பவன்.”

இணைவசனங்கள்

  • +2சா 24:1-3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    10/15/1992, பக். 5

1 நாளாகமம் 21:2

இணைவசனங்கள்

  • +2சா 8:16
  • +நியா 18:29; 2சா 17:11

1 நாளாகமம் 21:4

இணைவசனங்கள்

  • +2சா 24:4, 8

1 நாளாகமம் 21:5

இணைவசனங்கள்

  • +2சா 24:9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    10/15/1992, பக். 5

1 நாளாகமம் 21:6

இணைவசனங்கள்

  • +1நா 27:23, 24
  • +எண் 1:47

1 நாளாகமம் 21:8

இணைவசனங்கள்

  • +2சா 12:13
  • +சங் 25:11; 51:1
  • +2சா 24:10-14

1 நாளாகமம் 21:9

இணைவசனங்கள்

  • +1நா 29:29

1 நாளாகமம் 21:11

இணைவசனங்கள்

  • +லேவி 26:26

1 நாளாகமம் 21:12

இணைவசனங்கள்

  • +லேவி 26:14, 17
  • +லேவி 26:25
  • +2ரா 19:35

1 நாளாகமம் 21:13

இணைவசனங்கள்

  • +யாத் 34:6; சங் 51:1; ஏசா 55:7; புல 3:22
  • +2நா 28:9

1 நாளாகமம் 21:14

இணைவசனங்கள்

  • +எண் 16:46
  • +2சா 24:15, 16

1 நாளாகமம் 21:15

இணைவசனங்கள்

  • +யாத் 32:14; உபா 32:36
  • +சங் 90:13
  • +2சா 5:6
  • +2நா 3:1

1 நாளாகமம் 21:16

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “மூப்பர்களும்.”

இணைவசனங்கள்

  • +எண் 22:31; யோசு 5:13
  • +2ரா 19:1
  • +2சா 24:17

1 நாளாகமம் 21:17

இணைவசனங்கள்

  • +சங் 51:4
  • +யாத் 32:12; எண் 16:22

1 நாளாகமம் 21:18

இணைவசனங்கள்

  • +2சா 24:11
  • +2சா 24:18-23; 2நா 3:1

1 நாளாகமம் 21:22

இணைவசனங்கள்

  • +எண் 25:8

1 நாளாகமம் 21:23

இணைவசனங்கள்

  • +ஏசா 28:27

1 நாளாகமம் 21:24

இணைவசனங்கள்

  • +2சா 24:24, 25

1 நாளாகமம் 21:25

அடிக்குறிப்புகள்

  • *

    ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

1 நாளாகமம் 21:26

இணைவசனங்கள்

  • +யாத் 20:25
  • +லேவி 9:23, 24; 1ரா 18:38; 2நா 7:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    “வேதாகமம் முழுவதும்”, பக். 77-78

1 நாளாகமம் 21:27

இணைவசனங்கள்

  • +2சா 24:16; சங் 103:20

1 நாளாகமம் 21:29

இணைவசனங்கள்

  • +1ரா 3:4; 1நா 16:39; 2நா 1:3

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

1 நா. 21:12சா 24:1-3
1 நா. 21:22சா 8:16
1 நா. 21:2நியா 18:29; 2சா 17:11
1 நா. 21:42சா 24:4, 8
1 நா. 21:52சா 24:9
1 நா. 21:61நா 27:23, 24
1 நா. 21:6எண் 1:47
1 நா. 21:82சா 12:13
1 நா. 21:8சங் 25:11; 51:1
1 நா. 21:82சா 24:10-14
1 நா. 21:91நா 29:29
1 நா. 21:11லேவி 26:26
1 நா. 21:12லேவி 26:14, 17
1 நா. 21:12லேவி 26:25
1 நா. 21:122ரா 19:35
1 நா. 21:13யாத் 34:6; சங் 51:1; ஏசா 55:7; புல 3:22
1 நா. 21:132நா 28:9
1 நா. 21:14எண் 16:46
1 நா. 21:142சா 24:15, 16
1 நா. 21:15யாத் 32:14; உபா 32:36
1 நா. 21:15சங் 90:13
1 நா. 21:152சா 5:6
1 நா. 21:152நா 3:1
1 நா. 21:16எண் 22:31; யோசு 5:13
1 நா. 21:162ரா 19:1
1 நா. 21:162சா 24:17
1 நா. 21:17சங் 51:4
1 நா. 21:17யாத் 32:12; எண் 16:22
1 நா. 21:182சா 24:11
1 நா. 21:182சா 24:18-23; 2நா 3:1
1 நா. 21:22எண் 25:8
1 நா. 21:23ஏசா 28:27
1 நா. 21:242சா 24:24, 25
1 நா. 21:26யாத் 20:25
1 நா. 21:26லேவி 9:23, 24; 1ரா 18:38; 2நா 7:1
1 நா. 21:272சா 24:16; சங் 103:20
1 நா. 21:291ரா 3:4; 1நா 16:39; 2நா 1:3
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
1 நாளாகமம் 21:1-30

1 நாளாகமம்

21 பின்பு, இஸ்ரவேலர்களைத் தாக்க சாத்தான்* தீர்மானித்ததால் அவர்களைக் கணக்கெடுக்க தாவீதைத் தூண்டினான்.+ 2 அதனால் தாவீது யோவாபையும்+ மற்ற தலைவர்களையும் கூப்பிட்டு, “நீங்கள் போய் பெயெர்-செபாமுதல் தாண்வரை+ குடியிருக்கிற இஸ்ரவேலர்களைக் கணக்கெடுத்து வந்து சொல்லுங்கள்; மொத்தம் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என்று சொன்னார். 3 ஆனால் யோவாப், “ராஜாவே, என் எஜமானே, யெகோவா தன்னுடைய மக்களை இன்னும் நூறு மடங்கு பெருகச் செய்வார்! ஏற்கெனவே இவர்கள் எல்லாரும் உங்களுடைய ஊழியர்கள்தானே? என் எஜமானே, பிறகு ஏன் இப்படியொரு காரியத்தைச் செய்ய விரும்புகிறீர்கள்? இஸ்ரவேலர்கள்மீது பழிபாவம் வருவதற்கு நீங்கள் ஏன் காரணமாக வேண்டும்?” என்று கேட்டார்.

4 ஆனால், யோவாபின் வார்த்தை எடுபடவில்லை, ராஜாவின் வார்த்தைதான் ஜெயித்தது. அதனால் யோவாப் இஸ்ரவேல் முழுவதும் பயணம் செய்துவிட்டு, எருசலேமுக்குத் திரும்பி வந்தார்.+ 5 பெயர்ப்பதிவு செய்யப்பட்ட மக்கள் மொத்தம் எத்தனை பேர் என்பதை தாவீதிடம் யோவாப் தெரிவித்தார். இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்களிலும் வாளேந்திய வீரர்கள் மொத்தம் 11,00,000 பேர் இருந்தார்கள்; யூதாவில் வாளேந்திய வீரர்கள் 4,70,000 பேர் இருந்தார்கள்.+ 6 ராஜாவின் கட்டளையைக் கேட்டு யோவாப்+ வெறுப்படைந்ததால் லேவி கோத்திரத்தாரையும் பென்யமீன் கோத்திரத்தாரையும் கணக்கெடுக்கவில்லை.+

7 தாவீது செய்த காரியம் உண்மைக் கடவுளுக்குக் கொஞ்சம்கூட பிடிக்கவில்லை, அதனால் அவர் இஸ்ரவேலர்களைத் தண்டித்தார். 8 அப்போது தாவீது உண்மைக் கடவுளிடம், “இந்தக் காரியத்தைச் செய்ததன் மூலம் நான் பெரிய பாவம் செய்துவிட்டேன்.+ தயவுசெய்து அடியேனின் தவறை மன்னித்துவிடுங்கள்;+ நான் ரொம்ப முட்டாள்தனமாக நடந்துகொண்டேன்”+ என்று சொன்னார். 9 பின்பு, தாவீதின் தரிசனக்காரரான காத்திடம் யெகோவா பேசினார். அவரிடம்,+ 10 “நீ தாவீதிடம் போய், ‘உனக்கு முன்னால் மூன்று தண்டனைகளை வைக்கிறேன். எது வேண்டும் என்பதை நீயே தீர்மானித்துக்கொள்’ என்று யெகோவா சொல்கிறார் என்று சொல்” என்றார். 11 அதனால் அவர் தாவீதிடம் வந்து, “‘உன்னுடைய தேசத்தில் ஏழு வருஷங்கள் பஞ்சம் வர வேண்டுமா?+ 12 அல்லது மூன்று மாதங்களுக்கு உன் எதிரிகளுடைய வாள் உன்னைத் தாக்கி அழிக்க வேண்டுமா?+ அல்லது உன்னுடைய தேசத்தில் மூன்று நாட்களுக்கு யெகோவா அனுப்புகிற வாள் வர வேண்டுமா, அதாவது கொள்ளைநோய் வர வேண்டுமா?+ அப்படி வந்தால் யெகோவாவின் தூதர் இஸ்ரவேல் முழுவதும் போய் மக்களை அழிப்பார்’+ என்று யெகோவா சொல்கிறார். என்னை அனுப்பியவருக்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதை நீங்களே யோசித்துச் சொல்லுங்கள்” என்றார். 13 அப்போது தாவீது காத் தீர்க்கதரிசியிடம், “நான் ரொம்ப நொந்துபோயிருக்கிறேன். யெகோவா மகா இரக்கமுள்ளவர்,+ அதனால், தயவுசெய்து அவரே என்னைத் தண்டிக்கட்டும்; மனிதர்களின் கையில் என்னை விட்டுவிட வேண்டாம்”+ என்று சொன்னார்.

14 அப்போது, இஸ்ரவேலர்களை யெகோவா கொள்ளைநோயால் தாக்கினார்;+ அதனால், அவர்களில் 70,000 பேர் செத்தார்கள்.+ 15 அதோடு, எருசலேமை அழிக்க உண்மைக் கடவுள் ஒரு தேவதூதரை அனுப்பினார்; ஆனால், அவர் எருசலேமை அழிக்கப்போகிற நேரத்தில் யெகோவா அதை நினைத்து வருத்தப்பட்டார்;+ அதனால் அழிவைக் கொண்டுவந்த அந்தத் தேவதூதரிடம், “போதும்,+ உன் கையைக் கீழே போடு!” என்று சொன்னார். அப்போது, எபூசியனான+ ஒர்னானுடைய களத்துமேட்டுக்குப்+ பக்கத்தில் யெகோவாவின் தூதர் நின்றுகொண்டிருந்தார்.

16 வானத்துக்கும் பூமிக்கும் நடுவே யெகோவாவின் தூதர் ஒரு வாளைப் பிடித்துக்கொண்டு நிற்பதை தாவீது பார்த்தார்;+ அந்த வாளை அவர் எருசலேமுக்கு நேராக நீட்டியிருந்தார். துக்கத் துணியைப்+ போட்டிருந்த தாவீதும் மற்ற பெரியோர்களும்* உடனே சாஷ்டாங்கமாக விழுந்தார்கள்.+ 17 அப்போது தாவீது உண்மைக் கடவுளிடம், “நான்தானே மக்களைக் கணக்கெடுக்கச் சொன்னேன். நான்தானே பாவம் செய்தேன், நான்தானே தவறு செய்தேன்;+ இந்த ஆடுகள் என்ன தவறு செய்தன? யெகோவா தேவனே, தயவுசெய்து என்னையும் என் தகப்பன் குடும்பத்தையும் தண்டியுங்கள்; உங்களுடைய மக்களுக்கு இந்தத் தண்டனையைக் கொடுக்காதீர்கள்”+ என்று சொன்னார்.

18 அப்போது, யெகோவாவின் தூதர் காத் தீர்க்கதரிசியிடம்,+ “நீ தாவீதிடம் போய், எபூசியனான ஒர்னானின் களத்துமேட்டில் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டச் சொல்”+ என்றார். 19 யெகோவாவின் பெயரில் காத் தீர்க்கதரிசி சொன்ன வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து தாவீது அங்கே போனார். 20 இதற்கிடையே, ஒர்னான் தன்னுடைய களத்துமேட்டில் கோதுமையைப் போரடித்துக்கொண்டிருந்தார். அவர் திரும்பியபோது அந்தத் தேவதூதரைப் பார்த்தார்; அப்போது, அவருடன் இருந்த நான்கு மகன்களும் ஓடி ஒளிந்துகொண்டார்கள். 21 தாவீது தன்னிடம் வருவதை ஒர்னான் பார்த்தார். உடனே களத்துமேட்டிலிருந்து வெளியே வந்து அவர் முன்னால் மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து வணங்கினார். 22 அப்போது தாவீது ஒர்னானிடம், “இந்தக் களத்துமேட்டில் யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்ட வேண்டும். அப்போதுதான் மக்களைத் தாக்குகிற கொள்ளைநோயைக் கடவுள் நிறுத்துவார்.+ அதனால் இதை எனக்கு விற்றுவிடு, இந்த இடத்துக்கு என்ன விலையோ அதை உனக்குத் தந்துவிடுகிறேன்” என்று சொன்னார். 23 அப்போது ஒர்னான், “ராஜாவே, என் எஜமானே, இந்த இடத்தை நீங்கள் சும்மாவே எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் விருப்பப்படியே இங்கே பலிபீடம் கட்டுங்கள். இதோ, இந்த மாடுகளைத் தகன பலி கொடுங்கள், போரடிக்கும் பலகையை+ விறகாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். கோதுமையை உணவுக் காணிக்கையாகக் கொடுங்கள். இவை எல்லாவற்றையும் உங்களுக்குத் தருகிறேன்” என்று சொன்னார்.

24 ஆனால் ராஜா, “இல்லை, இதற்குரிய முழு விலையையும் கொடுத்துதான் வாங்குவேன். உனக்குச் சொந்தமானதை எடுத்து யெகோவாவுக்குக் காணிக்கை கொடுக்க மாட்டேன், உன்னிடமிருந்து இலவசமாக வாங்கி என் கடவுளுக்குத் தகன பலிகளைக் கொடுக்க மாட்டேன்”+ என்று ஒர்னானிடம் சொன்னார். 25 அதனால், தாவீது 600 சேக்கல்* தங்கத்தை நிறுத்துக் கொடுத்து அந்த இடத்தை வாங்கினார். 26 அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி,+ தகன பலிகளையும் சமாதான பலிகளையும் தாவீது கொடுத்தார்; அவர் யெகோவாவிடம் வேண்டிக்கொண்டபோது, வானத்திலிருந்து நெருப்பு வந்து தகன பலிக்கான பலிபீடத்தின் மேலிருந்த பலிகளைச் சுட்டெரித்தது;+ இப்படி, கடவுள் அவருக்குப் பதில் கொடுத்தார். 27 பின்பு, வாளைத் திரும்பவும் உறையில் போடச் சொல்லி யெகோவா தன்னுடைய தூதரிடம் கட்டளையிட்டார்.+ 28 எபூசியனான ஒர்னானின் களத்துமேட்டில் தாவீது தொடர்ந்து பலி கொடுத்துவந்தார். ஏனென்றால், யெகோவா அவருக்கு அங்குதான் பதில் கொடுத்திருந்தார். 29 வனாந்தரத்தில் மோசே செய்த யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரம் கிபியோனில் உள்ள ஆராதனை மேட்டில்+ இருந்தது, தகன பலிக்கான பலிபீடமும் அங்குதான் இருந்தது. 30 ஆனால், கடவுளிடம் ஆலோசனை கேட்க தாவீது அங்கே போகவில்லை. ஏனென்றால், யெகோவாவின் தூதருடைய வாளுக்குப் பயந்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்