உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 19
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

1 நாளாகமம் முக்கியக் குறிப்புகள்

      • தாவீதின் தூதுவர்களை அம்மோனியர்கள் அவமானப்படுத்துகிறார்கள் (1-5)

      • அம்மோனியர்களையும் சீரியர்களையும் தோற்கடிக்கிறார் (6-19)

1 நாளாகமம் 19:1

இணைவசனங்கள்

  • +2சா 10:1-5

1 நாளாகமம் 19:2

இணைவசனங்கள்

  • +2சா 9:7
  • +ஆதி 19:36, 38

1 நாளாகமம் 19:4

இணைவசனங்கள்

  • +லேவி 19:27

1 நாளாகமம் 19:5

இணைவசனங்கள்

  • +1ரா 16:34

1 நாளாகமம் 19:6

அடிக்குறிப்புகள்

  • *

    ஒரு தாலந்து என்பது 34.2 கிலோ. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

  • *

    நே.மொ., “அராம்-நகராயிம்.”

இணைவசனங்கள்

  • +1சா 14:47; 2சா 8:3; 10:6

1 நாளாகமம் 19:7

இணைவசனங்கள்

  • +யோசு 13:8, 9

1 நாளாகமம் 19:8

இணைவசனங்கள்

  • +2சா 8:16
  • +2சா 10:7, 8; 23:8

1 நாளாகமம் 19:10

இணைவசனங்கள்

  • +2சா 10:9-12

1 நாளாகமம் 19:11

இணைவசனங்கள்

  • +1நா 11:20, 21

1 நாளாகமம் 19:12

இணைவசனங்கள்

  • +2சா 8:5

1 நாளாகமம் 19:13

இணைவசனங்கள்

  • +உபா 31:6; யோசு 1:9

1 நாளாகமம் 19:14

இணைவசனங்கள்

  • +லேவி 26:7, 8; உபா 28:7; 2சா 10:13, 14

1 நாளாகமம் 19:16

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “யூப்ரடிஸ் ஆற்றுப்பகுதிக்கு.”

இணைவசனங்கள்

  • +2சா 8:3
  • +2சா 10:15, 16

1 நாளாகமம் 19:17

இணைவசனங்கள்

  • +2சா 10:17-19

1 நாளாகமம் 19:19

இணைவசனங்கள்

  • +சங் 18:39
  • +1நா 14:17; சங் 18:44

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

1 நா. 19:12சா 10:1-5
1 நா. 19:22சா 9:7
1 நா. 19:2ஆதி 19:36, 38
1 நா. 19:4லேவி 19:27
1 நா. 19:51ரா 16:34
1 நா. 19:61சா 14:47; 2சா 8:3; 10:6
1 நா. 19:7யோசு 13:8, 9
1 நா. 19:82சா 8:16
1 நா. 19:82சா 10:7, 8; 23:8
1 நா. 19:102சா 10:9-12
1 நா. 19:111நா 11:20, 21
1 நா. 19:122சா 8:5
1 நா. 19:13உபா 31:6; யோசு 1:9
1 நா. 19:14லேவி 26:7, 8; உபா 28:7; 2சா 10:13, 14
1 நா. 19:162சா 8:3
1 நா. 19:162சா 10:15, 16
1 நா. 19:172சா 10:17-19
1 நா. 19:19சங் 18:39
1 நா. 19:191நா 14:17; சங் 18:44
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
1 நாளாகமம் 19:1-19

1 நாளாகமம்

19 பின்பு, அம்மோனியர்களின் ராஜா நாகாஸ் இறந்துபோனார்; அடுத்ததாக, அவருடைய மகன் ராஜாவானான்.+ 2 அப்போது தாவீது, “நாகாஸ் எனக்கு மாறாத அன்பு காட்டியதால் நானும் அவருடைய மகன் ஆனூனுக்கு மாறாத அன்பு காட்டுவேன்”+ என்று சொன்னார். அதனால், அவனுக்கு ஆறுதல் சொல்ல தூதுவர்களை அனுப்பிவைத்தார். அதன்படியே, ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல தாவீதின் ஊழியர்கள் அம்மோனியர்களின்+ தேசத்துக்குப் போனார்கள். 3 அப்போது அந்தத் தேசத்தின் தலைவர்கள் ஆனூனிடம், “தாவீது ஆறுதல் சொல்வதற்காக ஆட்களை அனுப்பியிருக்கிறானே, அது உங்கள் அப்பா மீதிருக்கிற மரியாதையால் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். தேசத்தை நன்றாக ஆராய்ந்து உளவு பார்ப்பதற்காகவும், பின்பு அதை அழிப்பதற்காகவும்தான் அவனுடைய ஊழியர்கள் வந்திருக்கிறார்கள்” என்று சொன்னார்கள். 4 அதனால், ஆனூன் தாவீதுடைய ஊழியர்களைப் பிடித்து அவர்களுடைய தாடியைச் சிரைத்தான்,+ அவர்களுடைய அங்கிகளை இடுப்புக்குக் கீழே வெட்டிவிட்டு அவர்களைத் துரத்தியடித்தான். 5 இந்த விஷயம் தாவீதுக்குத் தெரிவிக்கப்பட்டவுடனே, அவர்களைச் சந்திக்க ஆட்களை அனுப்பினார். ஏனென்றால், அவர்கள் மிகவும் அவமானப்படுத்தப்பட்டிருந்தார்கள். “தாடி வளரும்வரை எரிகோவில்+ தங்கிவிட்டு, பின்பு திரும்பி வாருங்கள்” என்று ராஜா அவர்களிடம் சொல்லச் சொன்னார்.

6 அதன் பின்பு, தாங்கள் தாவீதின் வெறுப்புக்கு ஆளாகிவிட்டதை அம்மோனியர்கள் புரிந்துகொண்டார்கள். அதனால், ஆனூனும் அம்மோனியர்களும் 1,000 வெள்ளி தாலந்தை* கூலியாகக் கொடுத்து மெசொப்பொத்தாமியா,* அராம்-மாக்கா, சோபா ஆகிய இடங்களிலிருந்து ரதங்களையும் குதிரைவீரர்களையும் வரவழைத்தார்கள்.+ 7 இப்படி அவர்கள் 32,000 ரதங்களை வரவழைத்தார்கள். அதோடு, மாக்காவின் ராஜாவையும் அவருடைய வீரர்களையும் கூலி கொடுத்து வரவழைத்தார்கள்; இவர்கள் எல்லாரும் வந்து மேதேபாவுக்கு+ முன்னால் முகாம்போட்டார்கள். போர் செய்ய அம்மோனியர்கள் தங்களுடைய நகரங்களிலிருந்து திரண்டு வந்தார்கள்.

8 தாவீது இதைக் கேள்விப்பட்டபோது, யோவாபின்+ தலைமையில் முழு படையையும் தலைசிறந்த வீரர்களையும் அனுப்பினார்.+ 9 அம்மோனியர்கள் வெளியே வந்து தங்களுடைய நகரத்தின் நுழைவாசலில் அணிவகுத்து நின்றார்கள்; மற்ற தேசத்து ராஜாக்கள் இன்னொரு அணியாக வெட்டவெளியில் நின்றார்கள்.

10 முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் எதிரிகள் தன்னைத் தாக்க வருவதை யோவாப் பார்த்தார், அதனால் இஸ்ரவேலர்களில் மிகச் சிறந்த வீரர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து சீரியர்களோடு போர் செய்வதற்காக அவர்களை அணிவகுத்து நிற்க வைத்தார்.+ 11 அம்மோனியர்களோடு போர் செய்வதற்காக மற்ற வீரர்களைத் தன்னுடைய சகோதரன் அபிசாயின்+ தலைமையில் அணிவகுத்து நிற்க வைத்தார். 12 யோவாப் அபிசாயிடம், “சீரியர்களை+ என்னால் சமாளிக்க முடியவில்லை என்றால், நீ வந்து எனக்கு உதவி செய். அம்மோனியர்களை உன்னால் சமாளிக்க முடியவில்லை என்றால், நான் வந்து உனக்கு உதவி செய்கிறேன். 13 நம்முடைய மக்களையும் நம்முடைய கடவுளின் நகரங்களையும் பாதுகாப்பதற்காகத் தைரியத்தோடும் உறுதியோடும்+ போர் செய்வோம். யெகோவா தன்னுடைய பங்கில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வார்” என்று சொன்னார்.

14 யோவாபும் அவரோடு இருந்த வீரர்களும் சீரியர்களோடு போர் செய்ய முன்னேறிப் போனார்கள், அப்போது சீரியர்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினார்கள்.+ 15 சீரியர்கள் தப்பித்து ஓடியதை அம்மோனியர்கள் பார்த்ததும், அவருடைய சகோதரன் அபிசாயிடமிருந்து பின்வாங்கி நகரத்துக்குள் ஓடிப்போனார்கள். இதற்குப் பின்பு, யோவாப் எருசலேமுக்குத் திரும்பினார்.

16 இஸ்ரவேலர்களிடம் தோற்றுப்போன சீரியர்கள், ஆற்றுப்பகுதிக்கு* பக்கத்தில்+ குடியிருந்த மற்ற சீரியர்களை வரச் சொல்லி தூதுவர்களை அனுப்பினார்கள். ஆதாதேசரின் படைத் தளபதியான சோப்பாக்கின் தலைமையில் அவர்கள் வந்தார்கள்.+

17 தாவீதுக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது, உடனே அவர் இஸ்ரவேல் வீரர்கள் எல்லாரையும் ஒன்றுதிரட்டி, யோர்தானைக் கடந்து அவர்களிடம் வந்தார். தன்னுடைய வீரர்களை சீரியர்களுக்கு எதிராக அணிவகுத்து நிற்க வைத்தார். அப்படி அவர்கள் அணிவகுத்து நின்றபோது, சீரியர்கள் தாவீதை எதிர்த்துப் போர் செய்தார்கள்.+ 18 ஆனால், சீரியர்கள் இஸ்ரவேலர்களிடம் தோற்றுப்போய் ஓடினார்கள். சீரியர்களுடைய 7,000 ரதவீரர்களையும் 40,000 காலாட்படை வீரர்களையும் தாவீது கொன்றுபோட்டார். அவர்களுடைய படைத் தளபதியான சோப்பாக்கையும் கொன்றுபோட்டார். 19 இஸ்ரவேலர்களிடம் தோற்றுப்போனதால்+ ஆதாதேசரின் ஊழியர்கள் உடனடியாக தாவீதுடன் சமாதான ஒப்பந்தம் செய்து அவருக்கு அடிபணிந்தார்கள்.+ அதன் பின்பு, அம்மோனியர்களுக்கு உதவி செய்ய சீரியர்கள் விரும்பவில்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்