தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஆகஸ்ட் 31, 2015-ல் ஆரம்பிக்கும் வாரத்தில், இந்தக் கேள்விகளை ஊழியப் பள்ளியில் கலந்து பேசுவார்கள்.
சாலொமோன் செய்த ஜெபத்திலிருந்து யெகோவாவுடைய என்ன குணங்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். அதனால் நமக்கு என்ன நன்மை? (1 இரா. 8:22-24, 28) [ஜூலை 6, w05 7/1 பக். 30 பாரா. 3]
நாம் எப்படி தாவீதைப்போல் ‘உத்தமராய்’ நடந்துகொள்ளலாம்? (1 இரா. 9:4) [ஜூலை 13, w12 11/15 பக். 7 பாரா. 18-19]
எலியாவை சாறிபாத் விதவையிடம் யெகோவா ஏன் அனுப்பினார். அந்தப் பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (1 இரா 17:8-14) [ஜூலை 27, w14 2/15 பக். 14]
1 இராஜாக்கள் 17:10-16-ல் உள்ள பதிவு யெகோவாமீது நாம் முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதை எப்படி காட்டுகிறது? [ஜூலை 27, w14 2/15 பக். 13-15]
நம்மால் தாங்க முடியாத சோதனைகள் வந்தாலும் நம்பிக்கையோடு இருப்பதற்கு எலியாவின் உதாரணம் எப்படி உதவி செய்கிறது? (1 இரா. 19:4) [ஆகஸ்ட் 3, ia பக். 102-103 பாரா. 10-12; w14 3/15 பக். 15 பாரா. 15-16]
நம்பிக்கை இழந்த எலியாவிடம் யெகோவா எப்படி நடந்துகொண்டார். நாம் எப்படி யெகோவாவை போல் நடந்துகொள்ளலாம்? (1 இரா. 19:7, 8) [ஆகஸ்ட் 3, w14 6/15 பக். 27 பாரா. 15-16]
என்ன தவறான எண்ணம் ஆகாப் ராஜாவுக்கு இருந்தது? அதை நாம் எப்படி தவிர்க்கலாம்? [ஆகஸ்ட் 10, lv பக். 164-165, பெட்டி; w14-E 2/1 பக். 14 பாரா. 3-4]
யெகோவாவுடைய சேவையில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்போது, எலிசாவைப் போல் நாம் எப்படி நடந்துகொள்ளலாம்? (2 இரா. 2:9, 10) [ஆகஸ்ட் 17, w03 11/1 பக். 31 பாரா. 5-6]
இஸ்ரவேலில் இருந்த சிறுமி காட்டின தைரியத்தையும் விசுவாசத்தையும் பற்றி 2 இராஜாக்கள் 5:1-3 ல் இருக்கும் பதிவு இன்றுள்ள இளைஞர்களுக்கு எப்படி உதவுகிறது? [ஆகஸ்ட் 24, w12 2/15 பக். 12-13 பாரா. 11]
யெகூ காட்டிய என்ன குணங்களை இன்று நாம் எல்லாரும் காட்ட வேண்டும்? (2 இரா. 10:16) [ஆகஸ்ட் 31, w11 11/15 பக். 5 பாரா. 4]