எல்லா வாய்ப்பையும் பயன்படுத்துங்கள்!
1. நாம் எப்படி தாவீதை போல நடந்துகொள்ளலாம்?
1 தாவீது ராஜா, தன்னால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் யெகோவாவுக்கு செய்தார். உதாரணத்திற்கு, யெகோவாவுக்காக ஒரு ஆலயம் கட்ட ஆசைப்பட்டார். ஆனால், யெகோவா அந்த வாய்ப்பை சாலொமோனுக்குத்தான் கொடுத்தார். அதற்காக, தாவீது சோர்ந்துபோகவில்லை. ஆலயம் கட்டுவதற்கு தேவையான எல்லா பொருள்களையும் சாலொமோனுக்குக் கொடுத்தார். (1 இரா. 8:17-19; 1 நா. 29:3-9) தன்னால் செய்ய முடியாததை நினைத்து கவலைப்படாமல், செய்ய முடிந்ததை நினைத்து சந்தோஷப்பட்டார். பிரசங்க வேலையில் நாம் எப்படி தாவீதை போல நடந்துகொள்ளலாம்?
2. நாம் எதை பற்றி யோசித்து பார்க்க வேண்டும்?
2 உங்களால் முடிந்ததை செய்யுங்கள்: துணை பயனியராக அல்லது ஒழுங்கான பயனியராக சேவை செய்ய, நிறைய பேர் வாழ்க்கையில் மாற்றம் செய்திருக்கிறார்கள். (மத். 6:22) நீங்களும் அப்படி செய்ய முடியுமா? ஜெபம் செய்துவிட்டு, நன்றாக யோசித்து பாருங்கள். ஒருவேளை, “ஊழியம் செய்வதற்கான வாய்ப்பு என்ற பெரிய கதவு” உங்களுக்கும் திறந்திருக்கலாம். அந்த வாய்ப்பை உடனே பயன்படுத்துங்கள்!—1 கொ. 16:8, 9.
3. சாட்சி கொடுக்க நமக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன?
3 பயனியர் செய்ய முடியாமல் போனால் என்ன செய்யலாம்? உங்களுக்கு இருக்கிற மற்ற வாய்ப்புகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள். உதாரணத்திற்கு, கூட வேலை செய்யும் ஆட்களிடம் பேசலாம். உடம்பு சரியில்லாமல் இருந்தால் டாக்டரிடம் அல்லது உங்களைக் கவனித்துக்கொள்பவர்களிடம் பேசலாம். ஊழியத்துக்குப் போக முடியாதவர்களுக்கும், வயதானவர்களுக்கும்கூட ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் மாதத்திற்கு 15 நிமிடம் போட்டால்கூட போதும். உங்கள் ஊழிய மணி நேரத்தில், சந்தர்ப்ப சாட்சி கொடுத்த நேரத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பத்திரிகை, துண்டுப்பிரதி, நினைவுநாள் அழைப்பிதழ், மாநாட்டு அழைப்பிதழ் கொடுத்ததையும் சேர்த்துக்கொள்ளுங்கள். சிறுதுளி பெருவெள்ளம் ஆவதுபோல், மாத கடைசியில் உங்கள் மணிநேரமும் நீங்கள் நினைத்ததைவிட அதிகமாக இருக்கும்!
4. நீங்கள் என்ன செய்ய முடிவு எடுத்திருக்கிறீர்கள்?
4 உங்களுடைய சூழ்நிலை எப்படியிருந்தாலும், நற்செய்தியைப் பற்றி சொல்வதற்குக் கிடைக்கிற எல்லா வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அப்போதுதான், ஊழியத்தில் நம்மால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் செய்கிறோம் என்ற சந்தோஷமும் திருப்தியும் கிடைக்கும்.—மாற். 14:8; லூக். 21:2-4.