அக்டோபர் 13-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
அக்டோபர் 13-ல் துவங்கும் வாரம்
பாட்டு 33; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதைகள் கதை 11 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: உபாகமம் 4-6 (10 நிமி.)
எண் 1: உபாகமம் 4:29–43 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: கடவுளைப் பிரியப்படுத்த செய்ய வேண்டிய மாற்றங்கள்—நியாயங்காட்டி பக். 369 பாரா 2-பக். 370 பாரா 1 (5 நிமி.)
எண் 3: ஓரினச்சேர்க்கையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?—நியாயங்காட்டி பக். 367 பாரா 1-பக். 368 பாரா 2 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்தின் வசனம்: “கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கி; அவசர உணர்வுடன் பிரசங்கி.”—2 தீ. 4:2.
5 நிமி: எப்படி அவசர உணர்வோடு பிரசங்கிக்கலாம்? பேச்சு. 2 தீமோத்தேயு 4:2-ஐ விளக்கி சொல்லுங்கள். மார்ச் 15, 2012 காவற்கோபுரம் பக்கம் 16-17, பாரா 7-9-ஐ பயன்படுத்துங்கள்.
10 நிமி: ஏன் அவசர உணர்வோடு பிரசங்கிக்க வேண்டும்? மார்ச் 15, 2012 காவற்கோபுரம் பக்கம் 15-16, பாரா 3-6, பக்கம் 18, பாரா 14-18 அடிப்படையில் ஒரு மூப்பர் பேச்சு கொடுப்பார். “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...” என்ற தொடர் கட்டுரை அவசர உணர்வோடு ஊழியம் செய்ய எப்படி உதவும் என்று விளக்குங்கள்.
15 நிமி: எல்லா வாய்ப்பையும் பயன்படுத்துங்கள்! கேள்வி-பதில். பாரா 3-ற்கு பிறகு சந்தர்ப்ப சாட்சி கொடுத்த அனுபவத்தை பற்றி கேளுங்கள். கடைசியாக, இந்த மாதத்திற்கான முக்கிய வசனத்தை பற்றி சொல்லுங்கள்.
பாட்டு 97; ஜெபம்