நம் படைப்பாளரை கனப்படுத்த மற்றவர்களுக்கு உதவுதல்
1 “கர்த்தாவே, . . . ஜீவஊற்று உம்மிடத்தில் இருக்கிறது,” என்று சொன்னபோது சங்கீதக்காரன் உணர்ந்ததைப்போல் நீங்கள் உணருகிறீர்களா? (சங். 36:5, 9) யெகோவாவைப் போற்றி கனப்படுத்த நாம் மற்றவர்களுக்கு எவ்வாறு உதவலாம்? ஜூன் மாதத்தின்போது எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகத்தையோ உயிர்—அது எவ்வாறு இங்கு வந்தது? பரிணாமத்தின் மூலமா படைப்பின் மூலமா? என்ற புத்தகத்தையோ அளிப்பதன்மூலம் உதவலாம். இந்தப் புத்தகங்கள் உண்மையிலேயே மிகச் சிறந்தவையாக இருக்கின்றன. காரணம், ஒரு புத்தகம் கடவுளும் கிறிஸ்துவும் நமக்கு செய்தவற்றுக்காக ஏற்கெனவே அவர்களை நம்புபவர்களின் போற்றுதலை அதிகரிக்கிறது. மற்ற புத்தகமோ கடவுள் இருக்கிறார் என்பதற்கு அசைக்கமுடியாத சான்றளித்து, பரிணாமம் ஏன் உண்மையாக இருக்க முடியாது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறு இவையிரண்டுமே கடவுளுடைய வார்த்தையென பைபிளில் நம்பிக்கையூட்டுகின்றன. இயேசுவின் வாழ்க்கை மற்றும் ஊழியத்தின் மூலமாக கடவுள் வெளிப்படுத்தப்படுகிறார் என்றும், பரிணாமம் அல்ல, ஆனால் படைப்பு எவ்வாறு யெகோவா தேவனுக்கு கனத்தைக் கொண்டுவருகிறது என்றும் ஒவ்வொருவரும் அறிந்திருக்கவேண்டும் என்று நாம் நிச்சயமாகவே விரும்புகிறோம்.
2 மிகப் பெரிய மனிதர் புத்தகத்திற்கான எளிய நேரடியான ஒரு பிரசங்கம் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.
வீட்டுக்காரருக்கு வாழ்த்துக்கூறிய பின் நீங்கள் இவ்வாறு கேட்கலாம்:
◼ “அநேகர் நம்புவதுபோல, இயேசு கிறிஸ்து ஒரு வரலாற்றுப்பூர்வமான மனிதராகவும் நல்ல மனிதராகவும் இருந்தார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அப்படியானால், அவருடைய வாழ்க்கையைப் பற்றியும் போதனைகளைப் பற்றியும் அதிகத்தைக் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? இந்தப் புத்தகம் இயேசு போதித்ததாகவும் செய்ததாகவும் பைபிள் சொல்பவற்றை தெளிவாக புரிந்துகொள்ளும் விதத்தில் அளிக்கிறது. 40.00 ரூபாய் நன்கொடைக்கு இதை நாங்கள் ஆட்களுக்குக் கொடுக்கிறோம்.”
3 அல்லது, உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டபின், இவ்வாறு சொல்லலாம்:
◼ “இயேசு கிறிஸ்து என்ன போதித்தார் என்பதைப்பற்றி உங்களுக்கு ஒருவேளை கொஞ்சம் தெரிந்திருக்கலாம். ஆனால் இயேசுவின் வாழ்க்கையையும் அவருடைய ஊழியத்தையும் உற்றுநோக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? [எபிரெயர் 12:2, NW வாசிக்கவும்.] அது ஏனென்றால் பிதாவை அடைவதற்கான ஒரே வழி அவர் மட்டுமே என்றும், தம்மைப்பற்றியும் தம்முடைய பிதாவைப்பற்றியும் திருத்தமான அறிவைக் கொண்டிருப்பதால் மட்டுமே ஒரு நபர் நித்திய ஜீவனை அடையமுடியும் என்றும் இயேசுதாமே சொன்னார். [யோவான் 14:6 அல்லது 17:3-ஐ எடுத்துக்காட்டுங்கள்.] ஜீவனைக் கொடுக்கும் அத்தகைய அறிவைப் பெற இந்தப் புத்தகம் உங்களுக்கு உதவிசெய்யும்.”
4 “படைப்பு” புத்தகத்தை அளிப்பீர்களானால், நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “நம்முடைய முதல் மூதாதையர்கள் எப்படி இருந்தார்கள் என்பதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? [பதிலளிக்க அனுமதியுங்கள்.] அவர்கள் இந்தக் ‘குரங்கு-மனிதனை’ போலவா இருந்தனர்? [ஆங்கில படைப்பு புத்தகத்தில் பக்கம் 83-ஐ திறவுங்கள்.] அப்போஸ்தலர் 17:26-ல் பைபிள் என்ன சொல்கிறது என்பதை கவனியுங்கள். [வாசியுங்கள்.] ஆகவே, ‘குரங்கு-மனிதர்களின்’ வரைபடங்கள் எதை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன?” பக்கம் 89-ல் படத்திற்குக் கீழுள்ள குறிப்புரைக்குக் கவனத்தைத் திருப்புங்கள். இந்தப் புத்தகத்தைப் படித்து, இந்தக் கேள்விக்குப் பதிலை அறிந்துகொள்வதால் பயனடையலாம் என்று வீட்டுக்காரருக்கு சொல்லுங்கள்.
5 மற்றொரு அணுகுமுறை, “படைப்பு” புத்தகத்தின் அட்டையைக் காண்பித்து கீழ்க்கண்டவாறு சொல்வதாக இருக்கலாம்:
◼ “மனிதன் தோன்றியது பரிணாமத்தினாலா படைப்பினாலா? என்று நாங்கள் இன்று இப்பகுதியில் உள்ளவர்களைக் கேட்கிறோம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? [பதிலளிக்க அனுமதியுங்கள்.] நன்கு கற்றறிந்த அநேகர் பரிணாமத்தை ஓர் உண்மை என்று ஒப்புக்கொள்கின்றனர். ஆனாலும் நன்கு கற்றறிந்த மற்றவர்கள் அதை நம்புவதில்லை. முன்னாள் விண்வெளி வீரர் ஒருவர் என்ன முடிவுக்கு வந்தார் என்பதைக் கவனியுங்கள். [பக்கங்கள் 122-3-ல் உள்ள குறிப்புகளை சிறப்பித்துக் காண்பியுங்கள்.] பரிணாமமா படைப்பா—நாம் எதை நம்பவேண்டும் என்பதை அறிவதற்கு நாம் தனிப்பட்டவகையில் சான்றை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.” வீட்டுக்காரர் புத்தகத்தை ஏற்றுக்கொள்வாராகில், உங்களுடைய அடுத்த சந்திப்பின்போது பதிலளிக்கப்படக்கூடிய ஒரு கேள்வியை எழுப்புங்கள்.
6 நம்முடைய சிருஷ்டிகரைப் பற்றியும் அவருடைய படைப்புகளுக்காக அவர் வைத்திருக்கும் அன்பான நோக்கத்தைப் பற்றியும் மற்றவர்கள் கற்றுக்கொள்ளுவதற்கு உதவ நீங்கள் வாஞ்சையாய் இருக்கிறீர்களா? அதைச் செய்வதில் மிகப் பெரிய மனிதர் மற்றும் படைப்பு புத்தகங்கள் உங்களுக்கு உதவலாம். அவை நம் மகத்தான சிருஷ்டிகரும், பேரரசருமாய் இருக்கிற யெகோவாவை கனப்படுத்துகின்றன. அவருடைய கிரியைகளைப் போற்றி புகழ்வதன்மூலமும், கிறிஸ்துவின் ராஜ்யத்தின்மூலம் அவருடைய நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவதற்கும் மனிதவர்க்கத்தை ஆசீர்வதிப்பதற்குமான அவருடைய அற்புதமான நோக்கத்தைப் பற்றி தெரியப்படுத்துவதன்மூலமும் இதைச் செய்கின்றன.