காவற்கோபுரம்—ஏற்றவேளையில் ஆவிக்குரிய உணவு
1 கிட்டத்தட்ட 114 வருடங்கள், காவற்கோபுரம், ஆவிக்குரிய பிரகாரமாகத் தொடர்ந்து விழிப்பாயிருக்கும்படி அதன் வாசகரை அறிவுறுத்தி வந்திருக்கிறது. அதன் துணைப் பத்திரிகை, விழித்தெழு! நம்முடைய சந்ததிக்குள்ளாக வரும் சமாதானமான, பாதுகாப்பான புதிய உலகத்தைப்பற்றிய படைப்பாளருடைய வாக்கின்பேரில் நம்பிக்கையை வளர்க்கிறது. இவ்விரண்டு பிரசுரங்களும் சேர்ந்து இருள்நிறைந்த உலகிலே நம்முடைய பாதையைப் பிரகாசிக்கச் செய்யும் உண்மையுள்ள கருவிகளாக இருந்துவந்திருக்கின்றன. (ஏசா. 60:2) கடவுளுடைய வார்த்தையின் சத்தியம் ஒருக்காலும் மாறுவது கிடையாது, ஆனால் யெகோவா இவற்றையும் மற்ற கருவிகளையும் பயன்படுத்தி நமக்கு ஆவிக்குரிய ‘உணவை ஏற்றவேளையில்’ கொடுக்கும்போது அதன் புரிந்துகொள்ளுதல் தெளிவுபடுகிறது.—மத். 24:45; நீதி. 4:18.
2 பத்திரிகைகளை நன்கு பயன்படுத்துங்கள்: காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரண்டையும் மக்கள் வாசிக்கும்படி ஆர்வத்தோடு ஊக்குவிப்பதன் மூலம் நாம் பெற்றிருக்கிற ஆவிக்குரிய பிரகாசத்துக்கான நன்றியறிதலை நாம் காட்டலாம். ஏப்ரலிலும் மே-யிலும் மக்கள் காவற்கோபுரம் பத்திரிகைக்குச் சந்தா எடுக்க நாம் வீட்டுக்கு-வீடு ஊழியத்தில் விசேஷ முயற்சியெடுப்போம். கூடுதலாக, ஓரளவு ஒழுங்காக அந்தப் பத்திரிகைகளின் தனிப்பட்ட பிரதிகளை நம்மிடமிருந்து பெற்று, அவற்றை வாசித்து அனுபவிக்கக்கூடிய அநேக ஆட்களை நாம் ஒருவேளை அறிந்திருப்போம். ஏப்ரல் மே-யின்போது இப்பேர்ப்பட்ட ஆட்களைத் திரும்பவும் நாம் சந்தித்து ஒரு சந்தாவை அவர்களுக்கு அளிக்கலாம், அவர்கள் சந்தா எடுத்தால் இந்தப் பத்திரிகைகள் எவ்வாறு ஒழுங்காக அவர்களுக்கு வரும் என்பதைக் காட்டுங்கள்.
3 நம்முடைய செய்தியின்பேரில் அக்கறையைக் காட்டக்கூடிய ஆட்கள் சந்தாவை எடுத்தாலுஞ்சரி எடுக்காவிட்டாலுஞ்சரி, திரும்பவும் சென்று நாம் அவர்களைச் சந்திக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது. உண்மையான அக்கறை இருக்கிறது என்பதை எப்படி நீங்கள் பகுத்துணருவீர்கள்? ஒரு பத்திரிகையிலிருந்தோ ஒரு துண்டுப்பிரதியிலிருந்தோ ஒரு சிற்றேட்டிலிருந்தோ ஓரிரண்டு குறிப்புகளை எடுத்துக்காட்டுகையில், வீட்டுக்காரருடைய பிரதிபலிப்பைக் கவனியுங்கள். அவர் கவனமாகக் கேட்கிறாரா? அவர் பைபிளை மதித்து, பைபிள் வசனங்கள் வாசிக்கப்படுகையில் பின்பற்றுகிறாரா? அவர் நோக்குநிலை கேள்விகளுக்குப் பதிலளிக்கிறாரா? அவ்வாறெனில், நீங்கள் ஒரு வாரத்துக்குள்ளாகவோ அதற்கு சீக்கிரமாகவோ மறுசந்திப்பிற்கு ஏற்பாடு செய்து அந்தச் சமயத்தில் மேலுமான கலந்தாலோசிப்பை அனுபவித்து மகிழலாம். இவ்வாறு வீட்டுக்காரரோடு ஓர் ஒழுங்கான பைபிள் படிப்பைத் துவங்கலாம்.
4 முடிந்தவரை உங்களோடு பத்திரிகைகளை எடுத்துச்செல்லுங்கள். உடன் வேலையாட்கள், வியாபாரத்தில் தெரிந்திருக்கிற ஆட்கள், பள்ளித்தோழர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் பத்திரிகைகளையும் சந்தாவையுங்கூட அளிக்க விழிப்புள்ளவர்களாயிருங்கள். தெரு ஊழியத்திலோ பயணஞ்செய்கையிலோகூட பத்திரிகைகளை ஒழுங்காக ஒருவேளை அளிக்கலாம்.
5 சபை, புதிய பத்திரிகைகளைப் பெற்றவுடனேயே பிரஸ்தாபிகளுக்குக் கிடைக்கும்படி செய்யவேண்டும். ஒரு புதிய இதழைப் பெற்றவுடன், நீங்கள் அதிலுள்ளவற்றை முழுக்க அறிந்திருங்கள். உங்களுடைய பகுதியில் உள்ள மக்களுக்கு எந்தப் பொருட்கள் மிகுந்த அக்கறையுள்ளவையாயிருக்கின்றன? உலகச் சமாதானமும் பாதுகாப்புமா? பொருளாதாரமா? நல்ல அரசாங்கமா? சுற்றுச்சூழலா? குறிப்பிடத்தக்க விதமாக, காவற்கோபுரம், ஒரே நிரந்தர பரிகாரமாயிருக்கும் கடவுளுடைய ராஜ்யத்திடம் மக்களுடைய கவனத்தைத் திருப்புகிறது. (தானி. 2:44; மத். 6:10) இது உண்மையிலேயே நம்முடைய “மகத்தான போதக”ரிடமிருந்து வரும் ஒரு விலைமதியா பரிசாக இருக்கிறது.—ஏசா. 30:20, NW.
6 ஏப்ரலும் மே-யும் வெளி ஊழியத்தில் அதிக நேரம் அர்ப்பணிப்பதற்கு சிறந்த வாய்ப்புகளை அளிக்கின்றன. மே, ஐந்து வார இறுதி நாட்களை உடையதாயிருப்பதன் காரணமாக, அநேகர் துணைப் பயனியர்களாக சேர்ந்துகொள்வார்கள். இவ்விரண்டு மாதங்களின்போது நாம் எல்லாருமே வெளி ஊழியத்தை அதிகரிக்கவும் ஆர்வத்தோடு சந்தாக்களை அளிக்கவும் இப்போதே தனிப்பட்ட இலக்குகளை வைப்போமாக, இவ்வாறு, காவற்கோபுரம், விழித்தெழு! வாசிப்பதற்கு நாம் சந்திக்கக்கூடிய எல்லா ஆட்களையுமே உற்சாகப்படுத்துவோமாக.