புதியவர்கள் முன்னேற்றம் செய்ய உதவுங்கள்
1 ஏப்ரல் 17, 1992 அன்று கிட்டத்தட்ட 1 கோடியே 15 லட்சம் ஆட்கள் உலகமுழுவதும் கிறிஸ்துவுடைய இறப்பின் நினைவு ஆசரிப்பை அனுசரிக்கக் கூடிவந்தனர். இது யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் கூட்டுறவுகொண்டிருக்கும் பிரஸ்தாபிகளின் மொத்த எண்ணிக்கையைவிட இரண்டரை மடங்குக்கும் அதிகமாயிருந்தது. இத்தகைய ஜனத்திரள் “கர்த்தரின் பர்வதத்”துக்குத் திரண்டுவருவதைப் பார்ப்பது எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறது! (மீ. 4:2) தற்போது சுமார் எழுபது லட்சம் மக்கள் மெய் வணக்கத்திடம் ஓரளவு அக்கறை காட்டினாலும் யெகோவாவை வெளியரங்கமாய் இன்னும் துதிப்பவர்களாயில்லை. உண்மையிலேயே “அறுப்பு மிகுதி” என்ற இயேசுவின் வார்த்தைகள் அந்தளவுக்கு அர்த்தம்வாய்ந்தவையாக ஒருபோதும் இருந்ததில்லை!—மத். 9:37, 38.
2 ஏப்ரல் மாதத்தின்போது, வெளி ஊழியத்தில் பங்குகொள்வதற்கு தகுதிபெறக்கூடிய எல்லாருக்கும் உதவிபுரிய நாம் விசேஷ முயற்சியெடுக்கவேண்டும். இதைச் செய்ய சபை புத்தகப் படிப்பு நடத்துபவரும் தனக்கு உதவிசெய்வதற்கு அவருடைய தொகுதியிலுள்ள மற்ற திறமைவாய்ந்த பிரஸ்தாபிகளும் பயனியர்களும் ஒரு முக்கிய பாகத்தை வகிப்பர். நம்முடைய மும்மடங்கு நோக்கம் (1) இந்த வருடம் நடக்கக்கூடிய விசேஷ பொதுப் பேச்சுக்கும் நினைவு ஆசரிப்புத் தினத்துக்கும் ஆஜராகும் புதியவர்களோடு ஒரு வீட்டு பைபிள் படிப்பை ஏற்பாடு செய்வது; (2) படித்துக்கொண்டிருக்கிற ஆட்கள் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாகத் தகுதியாவதற்கு உற்சாகப்படுத்துவது; மேலும் (3) வெளி ஊழியத்தில் நம்முடைய தனிப்பட்ட பங்கை அதிகரிப்பதாய் இருக்கிறது.
3 நாம் எல்லாருமே நம்முடைய எந்தவொரு கூட்டத்துக்கும் ஆஜராகக்கூடிய புதியவர்களை வரவழைக்கவும் அவர்களோடு பழகவும் ஒரு விசேஷ முயற்சியெடுக்கவேண்டும். இத்தகைய அக்கறையுள்ள ஆட்களில் பெரும்பான்மையர் ஓர் ஒழுங்கான வீட்டுப் பைபிள் படிப்பைக் கொண்டிருக்க உற்சாகப்படுத்துவதற்கு நாம் என்ன செய்யலாம்?
4 ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் 1992 ஊழிய ஆண்டில் சராசரியாக 9,594 பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டன. பிரஸ்தாபிகள் மாணாக்கர்களோடு புத்தகப் படிப்பு நடத்துபவர் அறிமுகமாகிக்கொள்வதற்கு அவரைப் பைபிள் படிப்புகளுக்கு அழைத்துச் செல்லலாம். (km 4/81 பக். 4) இந்தப் பைபிள் மாணாக்கர்களில் சிலர் இப்போது கூட்டங்களுக்கு ஆஜராகலாம், மேலும் வீட்டுக்கு-வீடு ஊழியத்தில் பங்குகொள்வதற்குத் தகுதிபெறலாம். புதியவர்கள் ஓரளவு ஒழுங்காக சந்தர்ப்பம் கிடைக்கும்போது சாட்சிபகருகிறார்களா? அவர்கள், முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக ஆகக்கூடியவர்களுக்கு நம் ஊழியம், பக்கங்கள் 97-9-ல் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்திசெய்கிறார்களா? அவ்வாறெனில், முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக அங்கீகரிக்கப்பட்ட பிற்பாடு எவ்வாறு அவர்கள் வீட்டுக்கு-வீடு ஊழியத்தில் பங்குபெற துவங்கலாம் என்பதை விளக்கிக் காட்டுங்கள்.
5 நம்முடைய கிறிஸ்தவ கூட்டுறவில் ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்துவதை நாம் கவனியாது விட்டுவிடக்கூடாது. (எபி. 10:24, 25) யாராவது தங்களுடைய ஊழியத்தில் குறைவாக ஈடுபட்டவர்களாயிருந்தால், புத்தகப் படிப்பு நடத்துபவர்கள் உதவி கொடுப்பதற்கும் உற்சாகமளிப்பதற்கும் திட்டவட்டமான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். சில நேரங்களில் நம்மோடுகூட வெளி ஊழியத்தில் வரும்படி அழைப்பதுதானே தேவையானதாயிருக்கும்.
6 ஏப்ரல், வெளி ஊழிய நடவடிக்கைக்கான விசேஷ மாதமாக ஆவதற்கு நம்மெல்லாருடைய ஒத்துழைப்பும் தேவைப்படும். புத்தகப் படிப்பு நடத்துபவர் தன்னுடைய தொகுதியிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினரும் ஊழியத்தில் முழுப் பங்குகொள்ள உதவுவதற்கு ஆர்வத்தோடு முன்நின்று நடத்துவதுதானே வித்தியாசத்தை உண்டுபண்ணும். கூடுதலான ஊழியக் கூட்டங்களை ஏற்பாடு செய்யலாம். முதிர்வயதான ஆட்களிடம் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்தலாம். மேலும் இளைஞருக்கு நடைமுறையான வழிகளில் உதவி அளிக்கலாம். ஏப்ரலின்போது ஊழியத்தில் முழுக் குடும்பமும் பங்குபெறும்படி பெற்றோர் பார்த்துக்கொள்ளவேண்டும். இந்த அறுவடை காலத்திலே நாம் எல்லாரும் நம்முடைய சிறந்ததை யெகோவாவுக்குக் கொடுப்போமேயானால், அவருடைய நிறைவான ஆசீர்வாதம் நம்முடையதாயிருக்கும்.