உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g92 5/8 பக். 30
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1992
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மலையேறுவதில் சாதனை
  • கைவிடப்பட்ட கார்கள்
  • இந்தியாவில் இரத்த-வங்கி நெருக்கடி
  • நுகர்வோர் ஜாக்கிரதை
  • நியாயமான பயமா?
  • வாழ்வின் வெகுமதியா அல்லது சாவின் முத்தமா?
    விழித்தெழு!—1991
  • இரத்தம் விற்பனை பெரிய வியாபாரம்
    விழித்தெழு!—1991
  • இரத்தமேற்றுதல்—எந்தளவு பாதுகாப்பானது?
    உங்கள் உயிரை இரத்தம் எப்படிக் காப்பாற்ற முடியும்?
  • சிலியாக்-வயிற்று கோளாறை சமாளித்தல்
    விழித்தெழு!—1999
மேலும் பார்க்க
விழித்தெழு!—1992
g92 5/8 பக். 30

உலகத்தைக் கவனித்தல்

மலையேறுவதில் சாதனை

அக்டோபர் 24, 1990-ல் 52 வயது ஹெலன் ஸ்டமடாகி துக்குத்சே கொடுமுடி என்றழைக்கப்படும் இமய மலையின் 7 கிலோமீட்டர் உயர மலையுச்சியில் அடியெடுத்துவைத்ததில் வெற்றிகண்டாள். இப்படியாக மலையேறும் தீரச்செயலில் கிரேக்கர்களுக்கு ஒரு சாதனையைப் படைத்தாள் என்று அத்தேனிய செய்தித்தாள் “டா நியே” அறிக்கை செய்தது. இதை “ஆக்ஸிஜன் உதவியின்றி” செய்ததில் இவள்தான் முதல் பெண்மணி என்றும், இது “ஆல்ப் மலையேறிகளில் பெரும்பான்மையினரால் வெகுவாக ஒரு தீரச்செயலாகக் கருதப்படுகிறது, ஏனென்றால் ஆல்ப் மலை ஏறுகிறவர்களுக்கு இருதய வீக்கம் ஏற்பட்டு ஒருசில மணிநேரங்களில் மரித்துவிடக்கூடும்,” என்றும் அறிக்கை செய்தது.

கைவிடப்பட்ட கார்கள்

“கைவிடப்பட்ட சைக்கிள்கள் எங்களுக்குக் தொல்லையாக இருக்கும், ஆனால் இப்பொழுதோ கைவிடப்பட்ட கார்கள் எங்களுக்கு அதிக கஷ்டத்தைக் கொடுக்கிறது,” என்று ஜப்பானின் தேசிய காவல்துறைப் பிரிவின் ஓர் அதிகாரி முறையிட்டார். ஓர் அரசு புள்ளிவிவர அறிக்கையின்படி ஜப்பான் முழுவதும் ஆண்டு தோறும் ஏறத்தாழ 40 லட்சம் கார்கள் கைவிடப்படுகின்றன. கடந்த நாட்களில், காருக்குச் சொந்தக்காரர்கள் தங்கள் பழைய கார்களை பழைய இரும்பு வாங்கும் வியாபாரிகளிடம் விற்றார்கள், ஆனால் இப்பொழுதோ அவற்றை அப்புறப்படுத்துவதற்கு அவர்கள் அந்த வியாபாரிகளுக்குப் பணம் கொடுக்க வேண்டும். பழைய கார்கள் ஏன் இப்படியாகக் குவிக்கப்படுகிறது என்பதை விளக்குபவராக, தி டெய்லி யொமியூரி சொன்னதாவது, சமீபத்தில் ஏற்பட்ட திடீர் விலைவாசிக் குறைவைத் தொடர்ந்து பழைய பொருட்களை அப்புறப்படுத்தும் நிறுவனங்கள் கார்களைப் பழைய இரும்பு சாமான் விலைக்கு வாங்குவதை இலாபமுள்ள வியாபாரமாகக் காண்பதில்லை. என்றபோதிலும், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கின்றனர். கார்களை இப்படியாகக் கைவிடுகிறவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

இந்தியாவில் இரத்த-வங்கி நெருக்கடி

தேசத்தின் தனியார் இரத்த வங்கிகளின் மோசமான நிலையைப்பற்றி கொடுத்த அறிக்கையில் “இரத்தம்: அது உயிர் கொடுக்கிறதா, அல்லது உயிரை எடுத்துப்போடுகிறதா?” என்று இந்தியா டுடே கேட்டது. இந்தியாவின் சுகாதார துறை ஓர் ஆய்வை நடத்தும்படி ஒரு கமிஷனை ஏற்பாடு செய்தது. இந்த நாட்டில் பழக்கமாக இரத்த தானம் கொடுக்கும் 70 சதவீத ஆட்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இரத்தம் எய்ட்ஸ் நோய் உண்டாக்கும் கொடிய HIV வைரஸ் பரிசோதனை சரியாக செய்யப்படுகிறதில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. நோயாளிகளிடமிருந்தும் ஏழைகளிடமிருந்தும் இரத்தம் வாங்கும் அநேக தனியார் இரத்த வங்கிகளில் இருக்கும் சுகாதாரமற்ற சூழலையும் அந்த அறிக்கை குறிப்பிட்டது. இரத்த தானம் செய்கிற அநேகர் “குடிவெறியர்களாகவும், போதை மருந்து உட்கொள்ளுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்,” அல்லது அவர்களுக்குள் “கெட்ட பாலுறவு பழக்கங்கள் இருக்கின்றன.” எனவே “கல்லீரல் அழற்சி, மலேரியா, சிஃபிலிஸ் என்ற மேக நோய் மற்றும் தற்போதைய எய்ட்ஸ் நோயை” தானமாகக் கொடுக்கப்பட்ட இரத்தம் கடத்தக்கூடும் என்றும் “வெளிநாட்டிலிருந்து இரத்தத்தை வாங்குவது ரஷ்யன் ரூலட் விளையாடுவதுபோன்றது என்றும் இந்தியா டுடே வருத்தம் தெரிவித்தது.

நுகர்வோர் ஜாக்கிரதை

“கடந்த பத்தாண்டுகளில், 15,000 கோடி டாலர் மருந்து உற்பத்தியாளர் சந்தையில் பெற்றுக்கொள்ளப்படும் இலாபங்கள் புதியதோர் வகை ஏமாற்றுதலை ஏவியிருக்கிறது: மருந்துகள் பார்ப்பதற்கு இருப்பது போன்று இல்லை,” என்று நியுஸ்வீக் அறிக்கை செய்கிறது. “பெயர்கள் பழக்கப்பட்டவை,” அவை உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் மருந்துகளை உட்படுத்துகிறது. “போலி மருந்துகள் உண்மையானவை போன்று காணப்படுகிறது, அது அச்சிடப்பட்டிருக்கும் பெயர்கள், தயாரிப்பாளரின் கைப்பிரதிகள், மற்றும் தரத்தை நிச்சயப்படுத்தும் சீல்கள் வரை செல்கிறது.” ஆனால் உள்ளே தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் வேதியல் பொருட்கள், மரத்தூள், அழுக்கு, முகத்துக்குப் போடும் பவுடர், மற்றும் அசுத்தமான நீர் போன்ற கேடுண்டாக்கும் பொருட்கள் இருக்கக்கூடும். அநேக சமயங்களில், அவற்றில் இருக்கும் மருந்து சாரமற்றதும், கலப்படம் செய்யப்பட்டதும் அல்லது முற்றிலும் பயனற்றதுமாய் இருக்கின்றன. விளைவு? “நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கானவர்கள் மரித்திருக்கிறார்கள்,” என்று சுத்தம் மற்றும் வெப்பமண்டல மருந்துகளின் லண்டன் பள்ளி சுகாதார பொருளியலர் சூசன் ஃபாஸ்டர் கூறுகிறார். மருத்துவர்கள், மருத்துவமனைகள்தாமேயுங்கூட கவனக்குறைவாக இந்த மருந்துகளை அளிக்கக்கூடும். உண்மையிலேயே தரமுள்ள மருந்துகளின் உற்பத்தியாளர்கள் இதற்குப் பரிகாரம் காணமுடியாத நிலையில் இருக்கிறார்கள். இந்த மருந்துகள் பெரும்பாலும் சர்வதேச மருந்து தரத்தை அங்கீகரிக்காத நாடுகளில்தானே உற்பத்தியாகின்றன. பொதுவாக, தரமுள்ள மருந்துகளின் உற்பத்தியாளர்கள், மக்கள் பயந்து தங்கள் மருந்துகளை வாங்காமல் போகக்கூடும் என்பதால், அவர்கள் இந்தப் பிரச்னையை விளம்பரப்படுத்தாமல் அமைதலாக விட்டுவிடுகின்றனர்.

நியாயமான பயமா?

விமானப் பயணமே இன்னும் அதிக பாதுகாப்பான பயணமாக இருப்பதாய்க் கணக்கிடப்பட்டிருக்கிறது. என்றபோதிலும், விமானத்தில் செல்வதற்குப் பயப்படுகிறவர்களுக்கு, குடித்தலும் விமானம் ஓட்டுதலும் சம்பந்தமாக நியுஸ்வீக் பத்திரிகையில் வெளிவந்த பின்வரும் புள்ளிவிவரம் ஆச்சரியமாய் இராது: “அனுமதி வழங்கப்பட்ட 6,75,500 ஐ.மா. விமான ஓட்டிகளில் 10,000-ற்கும் அதிகமானவர்கள் குடிவெறியில் ஓட்டினதாக பதிவுகள் காண்பிக்கின்றன. கடந்த 15 ஆண்டுகளில் 1,200 விமான ஓட்டுனர் மதுபானத்துக்கு அடிமையானதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு திரும்ப வேலைக்கு சேர்க்கப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் விமான விபத்துகளில் மரித்த 5 முதல் 10 சதவீத விமான ஓட்டுனர்கள் தங்கள் இரத்தத்தில் மதுபானம் கலந்திருந்ததாக அறிக்கைகள் காட்டுகின்றன. 1980 மற்றும் 1988-க்கு இடையே ஏற்பட்ட ஆறு சிறிய-விமான விபத்துகளும் விமான-டாக்ஸி விபத்துகளும் அடிப்படையாக அல்லது பகுதியாக விமான ஓட்டுனர் குடித்து ஓட்டியதால் ஏற்பட்டது என்பதாக சொல்லப்படுகிறது.” (g91 4/8)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்