உலகத்தைக் கவனித்தல்
பேச்சுத் தொடர்பு பிரச்னைகள்
ஜப்பானில் பிள்ளைகளுக்கு அறிவுரை வழங்கும் தொலைபேசி தொடர்பு பொதுப்பணித் துறை, எந்த ஆலோசனையும் தேவைப்படாத, எந்த நெருக்கடியான பிரச்னைகளும் இல்லாத அநேக பிள்ளைகள் அண்மையில் வெறுமென தங்கள் நாளைக் குறித்து எவருடனாவது பேசுவதற்காகத் தொடர்பு கொள்வதாக சொல்லுகிறது. குடும்பத்தில் குறைவுபடுகின்ற சம்பாஷணையை ஈடுசெய்யவே அவர்கள் இந்த மாற்றுமுறையை தெரிந்து கொள்கின்றனர் என்பதாக பணித்துறை தெரிவிக்கிறது. என்றபோதிலும், ஆலோசகர்களுக்கும்கூட பேச்சுத் தொடர்பு பிரச்னைகள் இருக்கின்றன. “ஆலோசகரின் குரலில் பிரசங்கிக்கும் தொனியை கேட்டவுடன் பிள்ளைகள் தொலைபேசியின் செவிக்குழலை வைத்துவிடுகின்றனர்” என்பதாக இப்பணியிலுள்ள ஓர் உறுப்பினர் குறிப்பிட்டார். (g90 4/8)
ஏழ்மையிலும் ஏழ்மை
பிப்ரவரி 1990-ல், உலகிலுள்ள 42 மிக ஏழ்மையான தேசங்களிலிருந்து வந்த பிரதிநிதிகள், சுமார் 50 கோடி மக்களுக்கு அவசரமான உதவி தேவைப்படுவதை உலகின் பணக்கார தேசங்களை நம்பச் செய்வதற்கு புதிய வழிமுறகளை வெளிப்படுத்துவதற்கு ஒரு வார இறுதிநாட்களில் பங்ளா தேஷில் கூடிவந்தனர். இதுபோன்ற ஒரு மாநாடு 1981-ல் நடத்தப்பட்டது. ஆனால் அதன் முக்கிய இலக்குகளில் ஒன்றுகூட அடையப்பெறவில்லை. உண்மையில், “1980-கள் அதிகமான இழிவுபடுத்தும் வறுமை, கீழ்நோக்கிச் செல்லும் படிப்பு வாசனை, மோசமாகிக்கொண்டிருக்கும் உடல் ஆரோக்கியம் மற்றும் பொதுவாக கீழ்த்தரமான வாழ்க்கைத் தரங்களைக் கொண்டு வந்திருக்கின்றன” என்பதாக தி நியு யார்க் டைம்ஸ் அறிவிப்பு செய்கிறது. 42 தேசங்களில் சராசரி தலா நபர் வருமானம் ஆண்டுக்கு ரூ3,800 மட்டுமே. இந்தத் தேசங்களில் இருபத்து எட்டு ஆப்பிரிக்காவிலும், ஒன்பது ஆசியாவிலும் நான்கு பசிப்பிக்கிலும் இந்து மகா சமுத்திரத்திலுமுள்ள தீவு தேசங்களாகவும், ஒன்று அமெரிக்காவின் கரிபிய சமுத்திரத்திலும் இருக்கின்றன. (g90 6/8)
நடப்பது
உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது
நெஞ்சுப்பை குழாய் நாளஞ் சார்ந்த தொந்தரவுகளை தவிர்ப்பது தவிர, மிதமான உடற்பயிற்சி புற்றுநோயை தடுப்பதிலும்கூட மதிப்புவாய்ந்ததாக இருக்கக்கூடும் என்பதாக பிரேஸிலிலுள்ள சாவ் பாலோ பல்கலைக்கழக பேராசிரியர் ரூய் பெவிலக்குவா தெரிவிக்கிறார். ஒழுங்காக நடப்பது அல்லது மற்ற வகையான உடற்பயிற்சி தாமதமாக இயங்கும் குடல்களின் செயல்களை விரைவுபடுத்துவதாகத் தெரிகிறது. பெவிலக்குவா சொன்னார்: “நாம் உண்ணும் பெரும்பகுதி உணவு புற்றுநோய் வளரத் தூண்டுவிக்கும் தன்மையுள்ளதாய் இருக்கிறது, அது குடல்களில் கொஞ்ச நேரம் தங்கிவிடுமானால், அது பெருங்குடல் புற்றுநோயை உண்டுபண்ணக்கூடும்.” அதேவிதமாகவே சாவ் பாலோ பல்கலைக்கழகத்தின் நெஞ்சக இயல் பேராசிரியர் ஃபுல்வியோ பிலகி, விளையாட்டுகளில் ஈடுபடாதவர்களுக்கு நடப்பதே மிகச் சிறந்த உடற்பயிற்சி என்று நம்புகிறார். (g90 4/8)
உலகின் மிக நீளமான ரயில்
1989, ஆகஸ்ட் 26-ம் தேதி, 660 முழுமையாக பளுவேற்றப்பட்ட சரக்கு பெட்டிகள், 3 மற்ற பெட்டிகள், 16 தொடர் வண்டிகள் கொண்ட ஒரு ரயில் வண்டி இருப்புப் பாதையில் 4.3 மைல்கள் நீளமுடையதாய் இருந்தது. ஒரு முழு கப்பலையும் நிரப்புவதற்கு போதுமான இரும்பு உலோகம் சரக்கோடு அது தென் ஆப்பிரிக்க சுரங்க பட்டணத்திலிருந்து கரையோர துறைமுகத்துக்கு 535 மைல் தூர விசேஷ பயணத்திலிருந்தது. அது 70,000 டன்கள் எடையுள்ளதாயிருந்தது. இந்தப் பயணத்துக்கு ஆயத்தஞ்செய்வது ஏழு ஆண்டுகளை எடுத்திருந்தது. பொதுவாக இந்தளவான சரக்குக்கு மூன்று ரயில் வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே ஏன் இந்த நீளமான ரயில்? எக்காலத்திலும் ஓடியிருக்கும் ரயில்களில் மிக நீளமான மற்றும் பாரமான ரயில் வண்டி என்பதாக கின்னிஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ்-ல் பதிவை ஏற்படுத்துவதற்காக. (g90 4/8)
ஆபத்தான வேலை
பத்திரிகை ஆசிரியராக இருப்பது எப்போதும் கடினமான மற்றும் நீண்ட நேர வேலையை தவிர்க்கமுடியாதபடியாக்கியிருக்கிறது. இப்பொழுது அது உயிருக்கு ஆபத்தாகவும்கூட ஆகிவிட்டிருக்கிறது. 1989-ல் உலகம் முழுவதிலும் 53 பத்திரிகை ஆசிரியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்—1988-ஐவிட இரண்டு மடங்கு அதிகம். எப்பத்திரிகையையும் சாராத, ஆபத்தான முயற்சிகளை மேற்கொள்ளும் பொது எழுத்தாளர்களும் புகைப்பட கலைஞர்களுமே அதிக ஆபத்திலிருக்கிறார்கள். பெரும்பாலும் போத மருந்து தொழில் முதல்வர்களும் இராணுவத் தலைவர்களுமே இவ்வகையான “மரணத்தின் மூலம் தணிக்கைச்” செய்யக்கூடியவர்கள் என்பதாக தி நியு யார்க் டைம்ஸ்-ன் தலையங்க கட்டுரை குறிப்பிட்டது. “பத்திரிகை ஆசிரியர்கள் வாயடைக்கப்பட்டு, காவலில் வைக்கப்பட்டு அல்லது தணிக்கைச் செய்யப்படுகையில், புரிந்து கொள்ளுதல் மங்கலாகி, தகவல் இழக்கப்படுகிறது.” (g90 7/22)
கொழுப்பு சத்துள்ள விரைவு உணவு
விரைவு உணவு வாழ்க்கை முறையாகிவிட்டிருக்கும் ஒருசில தொழில்துறையில் முன்னேறியுள்ள நாடுகளில், கோழியிறைச்சி அல்லது மீன் சான்ட்விட்சுகளும் கோழியிறைச்சி பதார்த்தங்களும் பிரபலமாக இருப்பதற்குக் காரணம், அநேகர் வழக்கமாக உட்கொள்ளும் மாட்டியிறைச்சி உணவுக்கு பதிலாக குறைந்த அளவு கொழுப்புச் சத்து மாற்றீடாக இவைகளைக் கருதுவதே ஆகும். ஆனால் இப்படிப்பட்ட பதார்த்தங்கள் சில சமயங்களில், பூரிதக் கொழுப்பு அதிகமாயுள்ள எண்ணெயில் சமைக்கப்படுகின்றன. தவிர, விரைவு–உணவு கோழியிறைச்சி தோலை கொண்டிருக்க, அது “ஒன்றரை பையின்ட் ஐஸ் கிரீமிலுள்ள கொழுப்புச் சத்தைக் கொண்டிருக்கக்கூடும், அரை டஜன் கோழியிறைச்சி பதார்த்தம், மாட்டிறைச்சி உணவைக்காட்டிலும் அதிகமான கொழுப்பு சத்தைக் கொண்டிருக்கக்கூடும்” என்பதாக இன்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூன், மாஸச்சூட்ஸ் மருத்துவ சங்கத்தின் அண்மைக் கால ஆராய்ச்சியின் அடிப்படையில் அறிவிப்பு செய்கிறது. உணவில் அதிகமான கொழுப்பு சத்து நீரிழிவு நோய், நெஞ்சுப்பை இருதய நோய், உயர் இரத்தக் கொதிப்பு, பாரிச வாயு மற்றும் உடற் பருமன் அதிகமாக ஏற்படும் வாய்ப்போடு சம்பந்தப்படுத்தப்படுகிறது. (g90 7/22)