உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g89 3/8 பக். 29-30
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1989
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • “முக்கியத்துவம் வாய்ந்த” அடிநாச் சதைகள் (டான்சில்கள்)
  • பாலகனின் கண்ணயர்வு
  • பாராட்டுக்குரிய கல்லீரல்
  • விவாகத்தின் ஸ்திரத்தன்மை கெடுக்கப்படுகிறது
  • போலிப் பிணி
  • வினோதமான ஒரு பிரச்னை
  • வெள்ளணுப் பெருக்க நோயின் அபாயநேர்வு
  • இரண்டாவது பேழை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
  • மிக நுட்பமான சுரங்கத் தொழிலாளிகள்
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1997
  • தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது
    உங்கள் உயிரை இரத்தம் எப்படிக் காப்பாற்ற முடியும்?
  • ஆரோக்கியமான தாய்மார்களுக்கு ஆரோக்கியமான குழந்தைகள்
    விழித்தெழு!—2010
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1988
மேலும் பார்க்க
விழித்தெழு!—1989
g89 3/8 பக். 29-30

உலகத்தைக் கவனித்தல்

“முக்கியத்துவம் வாய்ந்த” அடிநாச் சதைகள் (டான்சில்கள்)

பாஸ்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின், காது மற்றும் குரல்வளை சம்பந்தப்பட்ட விஞ்ஞான பேராசிரியர் ஒருவரின்படி, ‘அடிநாச் சதைகளின் முக்கியமான நோய் எதிர்ப்பு வேலையைப் பற்றிய கூடுதலான விழிப்புணர்வு’ அறுவை சிகிச்சையின் மூலம் அடிநாச் சதைகளை நீக்கிவிடுவதற்குப் மாற்றாக, ஒரு புதிய ‘குறைந்த தீவிர அணுகுமுறையை’ நியாயமென்றுக் காண்பிக்கிறது. நாள்பட்ட சதை வளர்ந்த 22 நோயாளிகளுக்கு கார்பன் டைஆக்சைட் லேசரைக் கொண்டு, சதையை நீக்கிவிடுவதற்குப் பதிலாக அதைப் பழுதுபார்த்து சிகிச்சையளிப்பதில் வெற்றிக் கண்டதாக டாக்டர் கெஸா ஜெபோ அறிவிப்பு செய்கிறார். “14 வயதுக்கும் 42 வயதுக்கும் இடைப்பட்ட வயதில் இந்த நோயாளிகள் இருந்தார்கள். இவர்கள் அனைவருமே அறுவைச் சிகிச்சைக்கு முன்பாக இரண்டிலிருந்து 11 வருடங்கள் வரையாக அடிக்கடி இச்சதை வளர்ச்சியினால் நோய்வாய்ப்பட்டிருந்ததாக தெரிவித்தார்கள்” என்பதாக கனடாவின் மெடிக்கல் போஸ்ட் குறிப்பிடுகிறது. மற்றொரு அதிமுக்கியமான நன்மை: “அறுவை சிகிச்சைக்குப் பின்பு ஏற்படும் இரத்தக் கசிவு இல்லாமையால், அடிக்கடி அலுவலகத்துக்கோ அல்லது அவசர சிகிச்சை அறைக்கோ சென்று வர வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது.”

பாலகனின் கண்ணயர்வு

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, ஜப்பானிய மருத்துவர் ஒருவர் சிறிய உருவ வடிகல ஒலிப் பெருக்கி ஒன்றை மனித கருப்பையில் வைத்தார். கருப்பையின் ஒலிகளின் டேப் பதிவுகளை அழுகின்ற 87 பாலகர்களுக்குப் போட்டுக் காட்டுவதன் மூலம் அவரால் அவர்களில் 84 சதவிகிதத்தினரை ஓயப்பண்ண முடிந்தது. இதே கருத்தின் அடிப்படையில் அதிக நவீனமான ஒரு முறையில் நச்சுக் கொடிக்குச் செல்லும் தாயினுடைய தமனியின் இரத்த ஓட்டத்தின் ஒலியைப் பதிவு செய்து, இங்கிலாந்திலுள்ள லண்டனின் குயின் சார்லெட்ஸ் மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வந்தது. குழந்தைப் பிறந்தபின் முதல் ஐந்து மாதங்களுக்குப் பின்பு தன்னுடைய குழந்தையை அமைதிப்படுத்துவதில் தூக்கத்தை உண்டுபண்ணும் அதன் பாதிப்புகள் பயனுள்ளதாக இருப்பதை தாய் கண்டாள். இப்படிப்பட்ட உத்திகளை திறம்பட்ட வகையில் உபயோகிப்பதற்கு முக்கியமாக இருப்பது, குழந்தைப் பிறந்த பின் கூடியவரை விரைவாக டேப்பைப் போட ஆரம்பித்துவிடுவதாகும் என்பதாக லண்டனின் தி டைம்ஸ் குறிப்பிடுகிறது.

பாராட்டுக்குரிய கல்லீரல்

எல் ஃபரால் என்ற ஸ்பனிய நகரில், அண்மையில் மேயர் உல்லா கல்லீரலுக்கு நினைவுச் சின்ன சிலை ஒன்றை திறந்து வைத்தார். ஒரு மருத்துவராகவும், நகரில் பிரேதப் பரிசோதனை நடத்துபவராகவும் அவர் வேலை செய்து வந்த காலம் முழுவதிலுமாக நூற்றுக்கணக்கான கல்லீரல்கள் “சாராயத்தினாலும், திராட்சரசத்தினாலும், நோவகற்றும் மருந்துகளினாலும் கடும் வேதனைக்குட்படுத்தப்பட்டிருப்பதை” அவர் பார்த்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் இத்தகைய நச்சுப் பொருட்களோடு கல்லீரல் போரட வேண்டியுள்ளது என்கிறார் அவர். நகர மன்றமும் ஒரு வங்கியும் சேர்ந்து அளித்த உதவியினால் அமைக்கப்பட்ட கருங்கல் சிற்பம், “போலிப் பெருமையும் தன்னலமுமற்ற உறுப்புக்கு” பாராட்டு தெரிவிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது.

விவாகத்தின் ஸ்திரத்தன்மை கெடுக்கப்படுகிறது

“விவாகத்துக்கு முன் கணவன் மனைவியாக இணைந்து வாழ்வதற்கும், அதைத் தொடர்ந்து விவாகத்தின் ஸ்திரத்தன்மைக்குமிடையேயுள்ள அனைத்தையும் உள்ளிட்ட தொடர்பு குறிப்பிடத்தக்கதாக உள்ளது” என்பதாக மஸாச்சூசட்ஸிலுள்ள கேம்பிரிட்ஜ் பொருளாதார ஆராய்ச்சியின் தேசீய புள்ளி விவர அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது. தங்கள் எதிர்காலத் துணையோடு விவாகத்துக்கு முன்பாகவே சேர்ந்து வாழும் பெண்களுடைய விவாகத்தின் முறிவு அவ்விதமாகச் செய்யாதவர்களின் விகிதத்தைவிட சராசரியாக 80 சதவிகிதம் உயர்வாக இருக்கிறது.” இந்த ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 4,996 பெண்கள். இவர்கள் 20-க்கும் 44-க்கும் இடைப்பட்ட வயதினராயிருந்தனர். இவர்களில் சிலர் விவாகத்துக்கு முன் தங்கள் துணைவரோடு சேர்ந்து வாழ்ந்தவர்களும் சிலர் அவ்விதமாக வாழாதவர்களுமாக இருந்தனர். ஸ்வீடனில் விவாகத்துக்கு முன் கணவன் மனைவியாக இணைந்து வாழ்தல் அமெரிக்காவிலிருப்பதைவிட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. “விவாகத்துக்கு முன் கணவன் மனைவியாக இணைந்து வாழ்பவர்கள் விவாக ஏற்பாட்டில் அவ்வளவாக பொறுப்பில்லாதவர்களாகவும் ஒன்றாகச் சேர்ந்து வாழாதவர்களைவிட விவாகரத்துச் செய்துகொள்ள மனமுள்ளவர்களாகவும் இருப்பதாகத் தோன்றுகிறது” என்பதாக அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான நீல் பெனட் குறிப்பிட்டார்.

போலிப் பிணி

அண்மையில் இங்கிலாந்திலுள்ள லண்டனின் ஒரு மருத்துவமனைக்கு ஒரு மனிதன் வந்தபோது அவனுடைய மாரடைப்பு, அவன் தன்னைப்பற்றி கொடுத்த விவரங்களைப் போலவே அத்தனை ஆதாரமற்றதாக இருந்தது. என்றபோதிலும், ராயல் சொஸட்டி ஆப் மெடிசன் பத்திரிகை குறிப்பிட்டபடி, அவனில் காணப்பட்ட அறுவை சிகிச்சையின் எண்ணற்ற வடுக்கள் அவன் மருத்துவப் பணியிலுள்ள அநேகரை வெற்றிகரமாக ஏமாற்றியிருக்கிறான் என்பதைக் காண்பித்தது. காரணம்? அவன் கற்பனைப் பிணி என்ற நோயினால் அவதியுறுகிறான். இதற்கு மருத்துவப் பெயர் மன்சாஸன்ஸ் சின்றோம் (Munchausen’s syndrome) என்பதாகும். ஆண்டுதோறும் பிரிட்டனில் இவ்விதமாக அவதியுறும் 1,500 ஆட்கள் மருத்துவமனைகளைத் தங்கள் மீது அறுவை சிகிச்சை செய்யும்படியாகச் செய்ய முயற்சி செய்கிறார்கள். லண்டனின், தி டைம்ஸ் பத்திரிகையின்படி இவ்விதமாக அவதிப்படுகிறவர்கள் தங்களுடைய சொந்த பிணியைக் குறித்து அவ்வளவு உறுதியாக இருப்பதால், போலி மருத்துவப் பதிவுகளை உருவாக்கவும், கவனத்தைக் கவர்ந்திழுக்க நோய் நிருணயஞ்செய்யும் சாதனங்களை இரகசியமாக திருப்பிவிடவும்கூடச் செய்வது தெரிய வந்திருக்கிறது.

வினோதமான ஒரு பிரச்னை

“குருமார் அமைப்பு முறையிலிருந்து கத்தோலிக்கச் சர்ச் பெண்களை விலக்கி வைத்தபோதிலும், ஒரு குரு ஒரு முறை நியமிக்கப்பட்டுவிட்டால் அவர் என்ன பாவங்களைச் செய்தாலும் என்றென்றுமாக அவ்விதமாகவே இருக்கிறார்,” என்பதாக பொருளியலர் (The Economist) குறிப்பிடுகிறது. இப்பொழுது பிரச்னை என்னவென்றால், தென் இத்தாலியிலுள்ள ஒரு நகரில் 25 ஆண்டுகளாக பணி புரிந்து வந்த பாலோ என்ற பெயருள்ள ஒரு குரு, அண்மையில் ஒரு பெண்ணாக மாறுவதற்கு ஒரு பாலுறுப்பு மாற்ற அறுவை சிகிச்சையை செய்துகொண்டார். பின்னர் “அவள்” குறித்த காலத்துக்கு முன்பாகவே ஓய்வுப் பெறவும், குருமாரின் ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொள்ளவும் விண்ணப்பித்து அதைப் பெற்றுக் கொண்டாள். பாலோவை வைத்து என்ன செய்வது என்பதை வத்திக்கன் இப்பொழுது தீர்மானிக்க வேண்டும். “மதகுருமார் அமைப்பு முறையில் நடந்திருக்கும் இந்த விநோதமானச் சம்பவம் எவருக்கும் தெரியாமலிருப்பதை வத்திக்கன் பெரிதும் விரும்பியிருக்கும்” என்பதாக பொருளியலர் குறிப்பிடுகிறது.

வெள்ளணுப் பெருக்க நோயின் அபாயநேர்வு

கர்ப்பமாயிருக்கையில் ஆரம்பக் கட்டத்தில் எக்ஸ்ரே எடுப்பதற்கும், குழந்தைப்பருவத்திலேற்படும் வெள்ளணுப் பெருக்க நோய்க்குமிடையே சம்பந்தமிருப்பதாக ஆஸ்திரேலிய மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. முதல் மூன்று மாதங்களின் போது பல் எக்ஸ்ரேவும்கூட ஆபத்தாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆராய்ச்சியின் தலைமை ஆய்வாளரான டாக்டர் பில் மெக்வெர்டரின் முடிவு வருமாறு: “இந்தக் கண்டுபிடிப்புகளின் விளைவாக கர்ப்பமாயிருக்கையில் எக்ஸ்ரே எடுப்பது, பிள்ளைகளில் வெள்ளணுப் பெருக்க நோயை ஏற்படுத்தக்கூடும் என்பதாகவும் இதுகூடிய வரை தவிர்க்கப் படவேண்டும் என்றும் நாம் நிச்சயமாகச் சொல்லலாம் என்று நான் நினைக்கிறேன்.” வேளாண்மையில் பயன்படுத்தப்படும் தாவரக் கொல்லிகளும் பூச்சுக் கொல்லிகளும் இன்னும் இதற்குக் காரணமாகவே கருதப்பட்டாலும் வீட்டிலுள்ள பூச்சிக் கொல்லிகளுக்கும் வெள்ளணுப் பெருக்க நோய்க்குமிடையேயுள்ள தொடர்பை ஆய்வுக் குழு கண்டுபிடிக்கவில்லை. பச்சை இலைகளிலிருக்கும் ஃபோலிக் அசிட்டை உணவில் சேர்த்துக் கொள்ளும் கருவுற்றப் பெண்களுக்கு “வெள்ளணுப் பெருக்க நோயுள்ள பிள்ளைகளிலிருப்பதற்கு வாய்ப்புக் குறைவே” என்பதாகவும்கூட மெடிக்கல் போஸ்ட் அறிக்கை குறிப்பிட்டிருந்தது.

இரண்டாவது பேழை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

கிஸாவின் மாபெரும் பிரமிடுக்கு அருகே இரண்டாவது அடிநில அறை இப்பொழுது ஆராயப்பட்டு ஒரு சிறிய நிழற்படக் கருவியின் மூலமாக கண்காணிக்கப்பட்டுவருகிறது. எதிர்பார்த்தப்படியே அதில் எகிப்து அரசனாகிய பார்வோனின் “ஆன்மா”வுக்காக மற்றொரு ஈமச் சடங்கு பேழை இருந்தது. அதிகமாக கரிகளை எரிப்பதற்கு முன்பாக, காற்று எப்படி இருந்தது என்பதைக் கண்டுபிடிப்பதற்காக அதில் அடைந்துகிடந்த பண்டைய காலத்துக் காற்றை வெளியில் எடுப்பதே ஆய்வாளர்களின் இலக்காக இருந்தது. ஆனால் அதில் பெருத்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. “4,600 ஆண்டுகளாக குழியிலிருந்த காற்று மாறாதிருப்பது சாத்தியமற்றதாகும்” என்கிறார் அந்தக் காற்றை முகர்ந்து பார்த்த ஆராய்ச்சி விஞ்ஞானி பயட்டர் டேன்ஸ். “சுண்ணாம்புக்கல் வெகுவாக மென்மையாகவும் சிறிய துளைகளையும் கொண்டதாக இருந்ததால் குழியில் அவ்வளவாக பண்டைய காலத்துக் காற்று இல்லை என்பது தெரிகிறது.” இந்த இரண்டாவது பேழையை தோண்டியெடுக்கும் எண்ணமேதுமில்லை. பிரித்தெடுத்த முதல் பேழையின் துண்டுகளை மீண்டும் ஒன்று சேர்த்து இணைக்க பத்தாண்டுகள் எடுத்திருக்கின்றன.

மிக நுட்பமான சுரங்கத் தொழிலாளிகள்

பொன் உலோகக் கலவையைப் பதப்படுத்தும் புதிய ஒரு முறை தென் ஆப்பிரிக்காவில் முயற்சி செய்யப்பட்டு வருகிறது. பிஸ்னஸ் டே என்ற தென் ஆப்பிரிக்க செய்தித் தாளின்படி, பொன்னைப் பிரித்தெடுக்க பயன்படுத்தப்படும் சாதாரணமுறக்கு அசையாத எளிதில் உருகாத வண்டல்கள், தியோபாஸிலஸ் ஃபெரோஆக்ஸிடன்ஸ் என்றழைக்கப்படும் பாக்டீரியாவின் செயலுக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த நுட்பமான சுரங்கத் தொழிலாளிகள் அதைச் சுற்றியுள்ள கந்தகக்கல்லை சிதைத்து ஆக்கக்கூறுகளாக பிரித்துவிடுவதால், பொன்னைப் பிரித்தெடுப்பது எளிதாகிவிடுகிறது. பையோலீச்சிங் என்றழைக்கப்படும் புதிய முறை தூய்மைக் கேட்டை தவிர்ப்பதற்காக உலோகக் கலவையை நெருப்பில் வாட்டும் பெருஞ் செலவுபிடிக்கும் பழைய முறையைவிட சிக்கனமாக உள்ளது. திறமை மற்றொரு அனுகூலமாகத் தெரிகிறது. “எங்கள் ஃபேர் வியூ பையோலீச்சிங் தொழிற்சாலையில் நெருப்பில் வாட்டும் முறையில் எடுக்கப்பட்ட 90 சதவிகிதத்தோடு ஒப்பிட 95 சதவிகிதத்தையும் அதற்கு அதிகத்தையும் எங்களால் எடுக்க முடிகிறது,” என்கிறார் பையட்டர் வான் அஸ்விஜென் என்ற உலோகத் தொழில் கலைஞர். (g88 3⁄8)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்