பத்துக் கட்டளைகள் என்பது என்ன?
பைபிள் தரும் பதில்
பத்துக் கட்டளைகள் என்பது பூர்வ இஸ்ரவேல் தேசத்துக்கு கடவுள் கொடுத்த சட்டங்கள். ʽஅசʹரேத் ஹத்-தேவா-ரிம்ʹ என்ற எபிரெய வார்த்தையை நேரடியாக மொழிபெயர்க்கும்போது பத்து வார்த்தைகள் என்று அர்த்தம் வருவதால் இது பத்து வார்த்தைகள் என்றும் அழைக்கப்படுகிறது. பைபிளின் முதல் ஐந்து புத்தகமான பென்டக் அதாவது தோராவில், இந்த வார்த்தைகள் மூன்று தடவை வருகிறது. (யாத்திராகமம் 34:28; உபாகமம் 4:13; 10:4) இதே மாதிரி வார்த்தை கிரேக்க மொழியிலும் இருக்கிறது. “டெக்காலாக்” என்ற வார்த்தை இதிலிருந்துதான் வந்திருக்கிறது. அதில் டெʹக்கா என்றால் பத்து லோʹகோஸ் என்றால் வார்த்தைகள்.
சீனாய் மலையில், கடவுள் தன்னுடைய தீர்க்கதரிசியான மோசேயிடம் பத்துக் கட்டளைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி கொடுத்தார். (யாத்திராகமம் 24:12-18) அந்தப் பத்துக் கட்டளைகள் யாத்திராகமம் 20:1-17 மற்றும் உபாகமம் 5:6-21-ல் இருக்கிறது.
பத்துக் கட்டளைகள்
கடவுளாகிய யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும்.—யாத்திராகமம் 20:3.
சிலைகளை வணங்கக் கூடாது.—யாத்திராகமம் 20:4-6.
கடவுளுடைய பெயரை வீணாகப் பயன்படுத்தக் கூடாது.—யாத்திராகமம் 20:7.
ஓய்வுநாளை அனுசரிக்க வேண்டும்.—யாத்திராகமம் 20:8-11.
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும். —யாத்திராகமம் 20:12.
கொலை செய்யக் கூடாது.—யாத்திராகமம் 20:13.
மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது.—யாத்திராகமம் 20:14.
திருடக் கூடாது.—யாத்திராகமம் 20:15.
பொய் சாட்சி சொல்லக் கூடாது.—யாத்திராகமம் 20:16.
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது.—யாத்திராகமம் 20:17.
சில பைபிள்களில் பத்துக் கட்டளைகளின் பட்டியல் ஏன் வேறுபடுகிறது?
பத்துக் கட்டளைகளை பைபிள் வரிசைப்படுத்துவது கிடையாது. அதனால், இந்த கட்டளைகளை எப்படி பட்டியலிட வேண்டும் என்பதைப் பற்றி வித்தியாசமான கருத்துக்கள் இருக்கின்றன. மேலே கொடுக்கப்பட்டிருக்கிற பட்டியல்தான் பொதுவான பட்டியல். இருந்தாலும், சிலர் இந்த பத்துக் கட்டளைகளை வேறு விதமாக வரிசைப்படுத்துகிறார்கள். அதுவும் குறிப்பாக முதல் இரண்டு கட்டளையையும் கடைசி கட்டளையையும் வரிசைப்படுத்துவதில் வித்தியாசங்கள் இருக்கின்றன.a
பத்துக் கட்டளைகள் எதற்காக கொடுக்கப்பட்டது?
பத்துக் கட்டளைகள் மோசேயின் திருச்சட்டத்தின் ஒரு பாகமாக இருக்கிறது. அந்த சட்டங்களில் 600-க்கும் மேற்பட்ட கட்டளைகள் கொடுக்கப்பட்டன. இதுதான் பூர்வ இஸ்ரவேல் தேசத்தோடு கடவுள் செய்த ஒப்பந்தம். (யாத்திராகமம் 34:27) இஸ்ரவேல் ஜனங்கள் மோசேயின் திருச்சட்டத்துக்கு கீழ்ப்படிந்தால் அவர்களை ஆசீர்வதிப்பதாக கடவுள் வாக்கு கொடுத்தார். (உபாகமம் 28:1-14) இருந்தாலும், திருச்சட்டம் கொடுக்கப்பட்டதற்கான முக்கிய நோக்கமே, வாக்கு கொடுக்கப்பட்ட மேசியாவுக்காக அல்லது கிறிஸ்துவுக்காக இஸ்ரவேலர்களை தயார்படுத்துவது.—கலாத்தியர் 3:24.
கிறிஸ்தவர்கள் பத்துக் கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டுமா?
வேண்டாம். திருச்சட்டத்தையும் அதன் பாகமாக இருக்கிற பத்துக் கட்டளைகளையும் கடவுள், பூர்வ இஸ்ரவேல் தேசத்துக்குத்தான் கொடுத்தார். (உபாகமம் 5:2, 3; சங்கீதம் 147:19, 20) கிறிஸ்தவர்கள் இன்றைக்கு மோசேயின் திருச்சட்டத்தின் கீழ் இல்லை. யூத கிறிஸ்தவர்கள் கூட ‘அதிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.’ (ரோமர் 7:6)b இன்றைக்கு நமக்கு மோசேயின் திருச்சட்டத்துக்கு பதிலாக ‘கிறிஸ்துவின் சட்டம்’ கொடுக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்து தன்னை பின்பற்றுபவர்களுக்கு சொன்ன எல்லா விஷயங்களுமே அந்த சட்டத்தில் அடங்கும். —கலாத்தியர் 6:2; மத்தேயு 28:19, 20.
பத்துக் கட்டளைகள் நம் காலத்துக்கு ஒத்துவருமா?
கண்டிப்பாக ஒத்துவரும்! இந்த பத்துக் கட்டளைகள் கடவுள் எப்படி யோசிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. அதனால் இதைப் படிப்பது நமக்கு பிரயோஜனமாக இருக்கும். (2 தீமோத்தேயு 3:16, 17) காலா காலத்துக்கும் நிலைத்திருக்கிற பைபிள் உண்மைகளின் அடிப்படையில்தான் இந்த பத்துக் கட்டளைகள் கொடுக்கப்பட்டன. (சங்கீதம் 111:7, 8) புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படுகிற பைபிள் பாகாத்தில் இருக்கிற போதனைகளுக்கு இந்த உண்மைகள்தான் அடிப்படை.— “புதிய ஏற்பாட்டில் பளிச்சிடும் பத்துக் கட்டளைகளின் சாராம்சம்” என்ற பகுதியைப் பாருங்கள்.
பத்துக் கட்டளைகள் உட்பட மோசேயின் திருச்சட்டத்தில் இருக்கிற எல்லா கட்டளைகளின் சாராம்சத்தையும் சுருக்கி, இரண்டு முக்கிய அடிப்படை கட்டளைகளாக இயேசு கொடுத்தார். அவர் இப்படிச் சொன்னார்: “‘உன் கடவுளாகிய யெகோவாமேல் உன் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்.’ இதுதான் மிக முக்கியமான கட்டளை, முதலாம் கட்டளை. இதோடு சம்பந்தப்பட்ட இரண்டாம் கட்டளை இதுதான்: ‘உன்மேல் நீ அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்.’ இந்த இரண்டு கட்டளைகள்தான் திருச்சட்டம் முழுவதுக்கும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களுக்கும் அடிப்படையாக இருக்கின்றன.” (மத்தேயு 22:34-40) அதனால், மோசேயின் திருச்சட்டத்தை கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், கடவுள் மேலும் சக மனிதர் மேலும் அன்பு காட்ட வேண்டும் என்ற கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும்.—யோவான் 13:34; 1 யோவான் 4:20, 21.
புதிய ஏற்பாட்டில் பளிச்சிடும் பத்துக் கட்டளைகளின் சாராம்சம்
உண்மை |
புதிய ஏற்பாட்டில் மேற்கோள்கள் |
|---|---|
கடவுளான யெகோவாவை மட்டும் வணங்க வேண்டும் |
|
சிலைகளை வணங்கக் கூடாது |
|
கடவுளுடைய பெயருக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் |
|
தவறாமல் கடவுளை வணங்க வேண்டும் |
|
அப்பா அம்மாவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் |
|
கொலை செய்யக் கூடாது |
|
மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது |
|
திருடக் கூடாது |
|
பொய் சாட்சி சொல்லக் கூடாது |
|
பேராசைப் படக் கூடாது |
a யூதர்களுடைய பாரம்பரியப்படி, “யாத்திராகமம் 20-வது அதிகாரத்தில் இருக்கிற 2-ம் வசனத்தை முதல் கட்டளையாகவும் 3-6 வசனங்களை ஒட்டுமொத்தமாக இரண்டாவது கட்டளையாகவும் கருதப்படுகிறது.” (த ஜூவிஷ் என்சைக்ளோபீடியா) ஆனால், கத்தோலிக்கர்கள் யாத்திராகமம் 20-வது அதிகாரத்தில் இருக்கிற முதல் ஆறு வசனங்களை ஒரே கட்டளையாக கருதுகிறார்கள். அதனால் கடவுளுடைய பெயரை வீணாக பயன்படுத்தக்கூடாது என்பதை இரண்டாவது கட்டளையாக ஆக்கிவிட்டார்கள். பத்து என்ற எண்ணிக்கை வேண்டும் என்பதற்காக, அடுத்தவனுடைய மனைவிமேல் ஆசைப்படாதே... அடுத்தவனுடைய பொருள்மேல் ஆசைப்படாதே... என்ற கடைசி கட்டளையை இரண்டு கட்டளைகளாக பிரித்துவிட்டார்கள்.