உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ijwyp கட்டுரை 45
  • சோக சம்பவங்களைச் சமாளிப்பது எப்படி?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சோக சம்பவங்களைச் சமாளிப்பது எப்படி?
  • இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ரெபெக்கா
  • கோர்டெல்
  • விவாகரத்து—நீங்கள் அறிந்திருக்க வேண்டிய நான்கு விஷயங்கள்
    விழித்தெழு!—2010
  • என் அப்பா அம்மா விவாகரத்து செய்ய நினைத்தால் என்ன செய்வது?
    இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
  • பிள்ளைகள் வேதனையில் வாடும்போது
    விழித்தெழு!—2017
  • அப்பாவும் அம்மாவும் ஏன் பிரிந்தார்கள்?
    இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள்
மேலும் பார்க்க
இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
ijwyp கட்டுரை 45
ஒரு பையன் தன் குடும்பத்தாரின் ஃபோட்டோ பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறான், பைபிளைக் கையில் வைத்திருக்கிற ஒரு ஆளிடம் பேசுகிறான்

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

சோக சம்பவங்களைச் சமாளிப்பது எப்படி?

சோக சம்பவங்கள் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். “வேகமாக ஓடுகிறவர்கள் எல்லா சமயத்திலும் முதலில் வருவதில்லை, . . . எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சம்பவங்கள் எல்லாருக்கும் நடக்கின்றன” என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 9:11) அப்படித்தான் சில இளைஞர்களுடைய வாழ்க்கையிலும் சோக சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அவற்றை அவர்கள் எப்படிச் சமாளித்தார்கள்? இரண்டு பேருடைய உதாரணத்தை இப்போது பார்க்கலாம்.

  • ரெபெக்கா

  • கோர்டெல்

ரெபெக்கா

ரெபெக்கா

எனக்கு 14 வயசா இருந்தப்போ என் அப்பா அம்மா விவாகரத்து செஞ்சுகிட்டாங்க

என் அப்பா அம்மா விவாகரத்தெல்லாம் செய்ய மாட்டாங்க... கொஞ்ச நாள் போச்சுன்னா அப்பா மனசை மாத்திப்பாருனு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். அம்மாமேல அவர் உயிரையே வெச்சிருந்ததால, அவர் ஏன் அம்மாவவிட்டுப் பிரியப்போறாரு? அவர் ஏன் என்னைவிட்டுப் பிரியப்போறாரு?-ன்னு நெனச்சேன்.

வீட்டில நடக்கற விஷயங்கள மத்தவங்கிட்ட சொல்றதுக்கு எனக்குக் கஷ்டமா இருந்துச்சு. அத பத்தி யோசிக்கவே கூடாதுன்னு நெனைச்சேன். எனக்கே தெரியாம எரிஞ்சு எரிஞ்சு விழுந்தேன். மனக்கவலைனால பிரச்சனைகள் அதிகமாயிட்டே போச்சு. சரியா தூங்கக்கூட முடியல.

எனக்கு 19 வயசா இருந்தப்போ என் பெஸ்ட் ஃப்ரெண்டா இருந்த அம்மா புற்றுநோயினால இறந்துபோயிட்டாங்க.

என் அப்பா அம்மாவுக்கு விவாகரத்து ஆகிடுச்சுங்கறதே எனக்கு பெரிய அதிர்ச்சியா இருந்துச்சு. ஆனா அதவிட பயங்கரமான அதிர்ச்சி என் அம்மாவோட மரணம்! இன்னும்கூட அதிலிருந்து நான் மீளவே இல்ல. தூங்க முடியாம முன்னவிட அதிகமா கஷ்டப்படறேன், இன்னும்கூட மனக்கவலை என்னை ஆட்டிப்படைக்குது.

ஆனாலும், மனசை தேத்திக்க நிறைய விஷயங்கள் எனக்கு உதவி செய்யுது. உதாரணத்துக்கு, நம்மள தனிமைப்படுத்திக்கக் கூடாதுன்னு நீதிமொழிகள் 18:1 சொல்லுது. அந்த அறிவுரைய கடைப்பிடிக்க முயற்சி செய்யறேன். அதோடகூட, ஒரு யெகோவாவின் சாட்சியா, மனசுக்கு தெம்பு கொடுக்கற பைபிள் பிரசுரங்கள வாசிக்க முயற்சி செய்யறேன். என் அப்பா அம்மாவுக்கு விவாகரத்தான சமயத்தில இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்-பலன்தரும் விடைகள்-ங்கற புத்தகம் எனக்கு உதவுச்சு. முக்கியமா, தொகுப்பு 2-ல இருக்கற “ஒற்றை பெற்றோர் குடும்பத்தில் நான் சந்தோஷமாக இருக்க முடியுமா?”-ங்கற கட்டுரைய வாசிச்சத என்னால மறக்கவே முடியாது.

மனக்கவலைய சமாளிக்க உதவுற வசனங்கள்ல எனக்கு ரொம்பப் பிடிச்ச வசனம் மத்தேயு 6:25-34. வசனம் 27-ல, “கவலைப்படுவதால் உங்களில் யாராவது தன்னுடைய வாழ்நாளில் ஒரு நொடியை கூட்ட முடியுமா”-ன்னு இயேசு கேட்கறார்.

கெட்ட காரியங்கள் எல்லாருக்குமே நடக்கும். ஆனா, அந்தச் சோதனைகள நாம எப்படிச் சமாளிக்கிறோம்-ங்கறதுதான் முக்கியம்னு என் அம்மாவ பார்த்து கத்துக்கிட்டேன். வாழ்க்கையில அவங்க நிறைய பிரச்சினைகள சந்திச்சாங்க—விவாகரத்து, தீராத வியாதி—ஆனாலும், அந்த எல்லா சோதனைகள்லயும் நம்பிக்கைய மட்டும் அவங்க விடவே இல்ல. அவங்களுக்கு கடவுள்மேல இருந்த விசுவாசம் கடைசிவரைக்கும் உறுதியா இருந்துச்சு. யெகோவாவ பத்தி அவங்க எனக்குச் சொல்லிக்கொடுத்த விஷயங்கள என்னால மறக்கவே முடியாது.

சிந்திப்பதற்கு: பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் வாசிப்பது சோக சம்பவங்களைச் சமாளிக்க உங்களுக்கு எப்படி உதவும்?​—சங்கீதம் 94:19.

கோர்டெல்

கோர்டெல்

எனக்கு 17 வயசா இருந்தப்போ என் அப்பா இறந்துபோயிட்டார். அவரோட இழப்புதான் என் வாழ்க்கையில நடந்த படுமோசமான சம்பவம். அப்படியே இடிஞ்சுபோயிட்டேன்.

அவர் இறந்துட்டாருன்னு என்னால நம்பவே முடியல. அவரோட உடல் போர்வையால போர்த்தப்பட்டப்போ, அது என் அப்பா கிடையாது வேற யாரோனு தோனுச்சு. அப்பா நாளைக்கு எழுந்திருச்சிருவாருன்னு சொல்லிக்கிட்டேன். மனசுக்குள்ள ரொம்ப வெறுமையா இருந்துச்சு. எனக்குன்னு யாருமே இல்லங்கற மாதிரி தோனுச்சு.

நானும் என் குடும்பத்தில இருக்கறவங்களும் யெகோவாவின் சாட்சிகள்; என் அப்பா இறந்த சமயத்தில எங்க சபையில இருக்கறவங்க எங்களுக்குப் பக்க பலமா இருந்தாங்க. எங்களுக்கு சாப்பாடு சமைச்சுக் கொடுத்தாங்க, எங்களோட தங்கறதுக்கு முன்வந்தாங்க, எங்ககூடவே இருந்தாங்க; இதயெல்லாம் ஏதோ கொஞ்ச நாளைக்கு இல்ல ரொம்ப நாளைக்குச் செஞ்சாங்க. அவங்க அப்படி பக்க பலமா இருந்தது, யெகோவாவின் சாட்சிகள்தான் உண்மையான கிறிஸ்தவங்க-ன்னு எனக்கு தெளிவான அத்தாட்சிய கொடுத்துச்சு.​—யோவான் 13:35.

என்னை ரொம்பவே உற்சாகப்படுத்தன வசனம் 2 கொரிந்தியர் 4:7. அது என்ன சொல்லுதுனா: “நமக்கு வரும் உபத்திரவம் லேசானது, அது நொடிப்பொழுதுதான் இருக்கும். அந்த உபத்திரவத்தால் நமக்கு வரும் மகிமையோ மகத்தானது, அது என்றென்றும் நிலைத்திருக்கும். அதனால், பார்க்க முடிந்த காரியங்கள்மீது அல்ல, பார்க்க முடியாத காரியங்கள் மீதே நம்முடைய கண்களைப் பதிய வைத்திருக்கிறோம். பார்க்க முடிந்த காரியங்கள் தற்காலிகமானவை, பார்க்க முடியாத காரியங்களோ என்றென்றும் நிலைத்திருப்பவை.”

இந்தக் கடைசி வாக்கியம் எனக்கு தைரியத்த கொடுத்துச்சு. என் அப்பா அனுபவிச்ச கஷ்டமெல்லாம் தற்காலிகமானது, ஆனா கடவுள் எதிர்கால நம்பிக்கைய பத்தி வாக்கு கொடுத்திருக்கற விஷயங்கள் என்னென்னைக்கும் நிலைச்சிருக்கும். அப்பாவோட மரணத்துக்கு அப்பறம்தான், நான் வாழ்ந்திட்டிருந்த வாழ்க்கைய பத்தியும், என் லட்சியங்கள மாத்தி அமைக்கறத பத்தியும் யோசிக்க ஆரம்பிச்சேன்.

சிந்திப்பதற்கு: சோக சம்பவம் ஒன்று உங்களுடைய லட்சியங்களைச் சீர்தூக்கிப் பார்க்க உங்களுக்கு எப்படி உதவலாம்?​—1 யோவான் 2:17.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்