இராணுவ கருவிகள்: Anton Petrus/Moment via Getty Images; பணம்: Wara1982/iStock via Getty Images Plus
விழிப்புடன் இருங்கள்!
போருக்கு கோடிக்கணக்கில் செலவு—இழந்தது பணம் மட்டும்தானா?
போருக்காக கோடிக்கணக்கில் செலவு ஆகிறது.
“உலகம் முழுவதும் அரசாங்கங்கள் போன வருஷம் மட்டுமே, போருக்காக 1 கோடியே 82 லட்சம் கோடிக்கும் அதிகமான ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். இதற்கு முன்பு எந்த வருஷத்திலும் போருக்காக இவ்வளவு பணம் செலவு செய்ததில்லை.”—த வாஷிங்டன் போஸ்ட், பிப்ரவரி 13, 2024.
போரில் இழந்தது பணம் மட்டுமல்ல. உதாரணமாக, உக்ரைன் போரின் புள்ளி விவரம்.
போர்வீரர்கள். ஒரு கணக்குப்படி இரண்டு வருஷங்களாக நடக்கும் இந்தப் போரில் இறந்துபோன அல்லது காயப்பட்ட போர்வீரர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5,00,000.
பொதுமக்கள். ஐக்கிய நாட்டு சங்கம் சொல்கிறபடி இந்தப் போரில் இறந்துபோன அல்லது காயப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 28,000-க்கும் அதிகம். ஆனால், ஐநா-வின் மூத்த அதிகாரி ஒருவர் இப்படி சொன்னார்: “இந்த கொடூரமான போரில் பலியான உயிர்களின் எண்ணிக்கைக்கு கணக்கே இல்லை.”a
உலகம் முழுவதும் போராலும் கலவரத்தாலும் எக்கச்சக்கமான மக்கள் படாதபாடுபடுகிறார்கள்.
11 கோடி 40 லட்சம். செப்டம்பர் 2023 கணக்குப்படி, உலகம் முழுவதும் போராலும் சண்டைகளாலும் சொந்த நாட்டைவிட்டு வெளியே போனவர்களின் எண்ணிக்கை.
78 கோடி 30 லட்சம். பல வருஷங்களாக சாப்பாடு கிடைக்காமல் பட்டினியாக இருப்பவர்களின் எண்ணிக்கை. “பட்டினிக்கு முக்கியமான காரணமே போர்தான். உலகம் முழுவதும் பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் போராலும் கலவரத்தாலும் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழ்பவர்கள்தான்.”—உலக உணவு திட்டம்.
போருக்கு ஒரு முடிவு வருமா? சமாதானம் பிறக்குமா? பூமியில் விளைவதெல்லாம் எல்லாருக்கும் கிடைக்கும் காலம் வருமா? யாருமே பட்டினியிலும் வறுமையிலும் வாடாத காலம் வருமா? பைபிள் என்ன சொல்கிறது?
போர் நடக்கும்
பூமி முழுவதும் போர்கள் நடக்கும் என்று பைபிளில் முன்பே சொல்லியிருக்கிறது. குதிரை மேல் சவாரி செய்யும் ஒருவனை அதற்கு அடையாளமாக சொல்கிறது.
“அப்போது வேறொரு குதிரை வந்தது. அது சிவப்புக் குதிரை; அதன்மேல் உட்கார்ந்திருந்தவனுக்கு, பூமியிலிருந்து சமாதானத்தை எடுத்துப்போடும் அதிகாரம் கொடுக்கப்பட்டது; பூமியில் இருக்கிற மக்கள் ஒருவரை ஒருவர் வெட்டிப்போடுவதற்காக அந்த அதிகாரம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது; அவனுக்கு ஒரு பெரிய வாளும் கொடுக்கப்பட்டது.”—வெளிப்படுத்துதல் 6:4.
இவனுக்குப் பின்னால் இன்னும் இரண்டு பேர் குதிரைகளில் வந்தார்கள். அதில் ஒருவன் பூமி முழுவதும் வரப்போகும் பஞ்சத்துக்கு அடையாளமாக இருந்தான். இன்னொருவன், கொள்ளைநோயாலும் வேறு காரணங்களாலும் வரப்போகும் மரணத்துக்கு அடையாளமாக இருந்தான். (வெளிப்படுத்துதல் 6:5-8) இந்த பைபிள் தீர்க்கதரிசனத்தை பற்றியும், இப்போது அது நடந்துகொண்டிருக்கிறது என்பதை நம்புவதற்கான காரணத்தை பற்றியும் இன்னும் தெரிந்துகொள்ள “நான்கு குதிரைவீரர்கள்—இவர்கள் யார்?” என்ற கட்டுரையைப் படித்துப்பாருங்கள்.
சமாதானம் சீக்கிரத்தில்
பூமியின் வளங்கள் இனியும் போருக்காக செலவாகாத காலம் சீக்கிரத்தில் வரும். ஆனால் இது மனிதர்களின் முயற்சியால் நடக்காது. பைபிள் இப்படி சொல்கிறது:
கடவுள் “பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்டுகிறார்.”—சங்கீதம் 46:9.
போரினால் உண்டான பாதிப்புகளையும் கடவுள் சரிசெய்வார். “அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது. முன்பு இருந்தவை ஒழிந்துபோய்விட்டன.”—வெளிப்படுத்துதல் 21:4.
கடவுள் எல்லாருக்கும் எப்போதும் சமாதானத்தை கொடுப்பார். “என் ஜனங்கள் சமாதானமான சூழலில் வாழ்வார்கள். பாதுகாப்பான வீடுகளிலும் நிம்மதியான இடங்களிலும் குடியிருப்பார்கள்.”—ஏசாயா 32:18.
பைபிள் சொல்வதை வைத்து பார்க்கும்போது இன்று நடக்கும் போர்களும் மற்ற சம்பவங்களும் சீக்கிரத்தில் சமாதானம் வரப்போகிறது என்பதற்கு அடையாளம்தான்.
கடவுள் எப்படி சீக்கிரத்தில் சமாதானத்தை கொண்டுவருவார்? அவருடைய பரலோக அரசாங்கத்தால் கொண்டுவருவார். (மத்தேயு 6:10) கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன, அதனால் உங்களுக்கு என்ன கிடைக்கும் என்று தெரிந்துகொள்ள, கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன? என்ற இந்த சின்ன வீடியோவை பாருங்கள்.
a மிரொஸ்லவ் ஜென்கா, ஐக்கிய நாடுகளில் ஐரோப்பாவுக்கான உதவி பொதுச் செயலாளர், டிசம்பர் 6, 2023.