உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mrt கட்டுரை 15
  • தனிமையை சமாளிப்பது எப்படி?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தனிமையை சமாளிப்பது எப்படி?
  • வேறுசில தலைப்புகள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
  • பைபிளிலுள்ள ஆறுதலான வசனங்களைப் படியுங்கள்
  • உலகத்தில் ஏன் கெட்ட காரியங்கள் நடக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்
  • அநாவசியமாகக் கவலைப்படாதீர்கள்
  • மற்றவர்களை நண்பர்களாக்கிக்கொள்ளுங்கள்
  • சுறுசுறுப்பாக இருங்கள்
  • அன்பற்ற உலகில் நட்பைக் காத்துக்கொள்ளுதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • உங்கள் கவலைகளையெல்லாம் யெகோவாமேல் வைத்துவிடுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • நிலையான நட்புறவுகளை நீங்கள் அனுபவிக்கலாம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள்
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
மேலும் பார்க்க
வேறுசில தலைப்புகள்
mrt கட்டுரை 15
வீட்டுக்குள் இருக்கும் ஒரு பெண், ஜன்னல் வழியாகப் பார்க்கிறார்.

தனிமையை சமாளிப்பது எப்படி?

நீங்கள் தனிமையில் தவிக்கிறீர்களா? அப்படியென்றால், “கூரைமேல் தனியாக உட்கார்ந்திருக்கிற பறவை போல இருக்கிறேன்” என்று சொன்ன ஒருவரைப் போலவே நீங்களும் உணரலாம். (சங்கீதம் 102:7) தனிமையின் கொடுமையை சமாளிக்க பைபிள் அருமையான ஆலோசனைகளைத் தருகிறது.

  • கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

  • பைபிளிலுள்ள ஆறுதலான வசனங்களைப் படியுங்கள்

  • உலகத்தில் ஏன் கெட்ட காரியங்கள் நடக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்

  • அநாவசியமாகக் கவலைப்படாதீர்கள்

  • மற்றவர்களை நண்பர்களாக்கிக்கொள்ளுங்கள்

  • சுறுசுறுப்பாக இருங்கள்

கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

நீங்கள் தனியாக இருந்தாலும், உங்களால் சந்தோஷமாக இருக்க முடியும். எப்படி? கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்வது எவ்வளவு அவசியம் என்பதைப் புரிந்துகொண்டு உங்கள் ஆன்மீக ஆர்வப்பசியைத் தீர்த்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு சந்தோஷத்தை தரும். (மத்தேயு 5:3, 6) அதைச் செய்ய ஆரம்பிப்பதற்கு இந்த இலவச ஏற்பாடுகள் உங்களுக்கு உதவும்:

  • பிழையில்லாத, எளிமையான ஆன்லைன் பைபிள்

  • பைபிள் சொல்லும் முக்கியமான உண்மைகளைப் பற்றிய சின்னச் சின்ன வீடியோக்கள்

  • “பைபிள் கேள்விகளுக்கான பதில்கள்”—நிறைய பேர் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியான பதில்களைத் தரும் கட்டுரைகள்

  • “இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்”—கடவுளுக்கு உண்மையாக இருந்தவர்களைப் பற்றிய பைபிள் பதிவுகளை நம் கண்முன் நிறுத்தும் தொடர்கட்டுரைகள்

  • “யாருடைய கைவண்ணம்?”—இயற்கையின் அழகையும் அற்புத வடிவமைப்பையும் வர்ணிக்கும் தொடர்கட்டுரைகள்

பைபிளிலுள்ள ஆறுதலான வசனங்களைப் படியுங்கள்

இந்த வசனங்கள் நிறைய பேருக்கு ஆறுதல் தந்திருக்கின்றன. ஒரே சமயத்தில் இந்த எல்லா பகுதிகளையும் வாசிப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு பகுதியாக வாசித்து, அதைப் பற்றித் தியானித்து, ஜெபம் செய்யுங்கள். இப்படி, தனிமையில் இருக்கும் காலத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.—மாற்கு 1:35.

  • சங்கீதம் 23:1-6

  • சங்கீதம் 34:1-22

  • சங்கீதம் 46:1-11

  • சங்கீதம் 63:6-8

  • சங்கீதம் 91:1-6

  • மத்தேயு 6:25-34

  • 2 கொரிந்தியர் 1:3, 4

  • பிலிப்பியர் 4:6, 7

  • 1 பேதுரு 5:6, 7

உலகத்தில் ஏன் கெட்ட காரியங்கள் நடக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்

கெட்ட காரியங்கள் ஏன் நடக்கின்றன, அதற்கெல்லாம் கடவுள் எப்படி முடிவுகட்டுவார் என்பதைத் தெரிந்துகொண்டால் எப்படிப்பட்ட பிரச்சினையையும் உங்களால் சமாளிக்க முடியும்.—ஏசாயா 65:17.

  • கடவுள் ஏன் இன்னும் கஷ்டத்தை தீர்க்காமல் இருக்கிறார்?

  • நான்கு குதிரைவீரர்கள்—இவர்கள் யார்?

  • கடவுளுடைய அரசாங்கம் என்னவெல்லாம் செய்யும்?

அநாவசியமாகக் கவலைப்படாதீர்கள்

தனிமையின் தவிப்பை சமாளிக்கவும், ‘கவலைப்படுவதை நிறுத்தவும்’ இந்தக் கட்டுரைகள் உங்களுக்கு உதவும்.—மத்தேயு 6:25.

  • மன அழுத்தத்தைச் சமாளிக்க டிப்ஸ்

  • வாழ்க்கையின் கவலைகளைச் சமாளிக்க பைபிள் உங்களுக்கு உதவுமா?

  • ஆபத்தை நினைத்து கவலையா?

  • பணம் இல்லை என்று கவலைப்படுகிறீர்களா?

  • இளைஞர்களுக்கு இருக்கும் கவலைகள்

மற்றவர்களை நண்பர்களாக்கிக்கொள்ளுங்கள்

தெளிவாக யோசிப்பதற்கும் சந்தோஷமாக இருப்பதற்கும் நண்பர்கள் நமக்கு உதவி செய்வார்கள். முக்கியமாக, மற்றவர்களை நேருக்கு நேர் பார்த்துப் பேச முடியாத சமயங்களில் நமக்கு நண்பர்கள் இருப்பது ரொம்ப முக்கியம். நீங்கள் வீட்டுக்குள் முடங்கியிருந்தாலும், வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் அல்லது ஃபோன் மூலம் உங்கள் நண்பர்களைத் தொடர்புகொள்ளலாம் அல்லது மற்றவர்களைப் புதிய நண்பர்களாக்கிக்கொள்ளலாம். உண்மையான நண்பர்களைக் கண்டுபிடிக்கவும், ‘உண்மையான நண்பராக’ இருக்கவும் இந்தக் கட்டுரைகள் உங்களுக்கு உதவும்.—நீதிமொழிகள் 17:17.

  • யார் உண்மையான ஃப்ரெண்டு?

  • இன்னும் நிறைய பேரை நான் நண்பர்களாக்கிக்கொள்ள வேண்டுமா?

  • தாராள குணத்தைக் காட்டுவதன் மூலம் நல்ல நண்பராக இருங்கள்

  • நன்றி காட்டுவதன் மூலம் நல்ல நண்பராக இருங்கள்

சுறுசுறுப்பாக இருங்கள்

“உடற்பயிற்சி . . . நன்மை தரும்” என்று பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 4:8) முக்கியமாக தனிமையில் வாடும்போது, தெளிவாக யோசிப்பதற்கும் சந்தோஷமாக இருப்பதற்கும் உடற்பயிற்சி உதவி செய்யும். நீங்கள் வீட்டுக்குள் முடங்கியிருந்தாலும், சுறுசுறுப்பாக இருப்பதற்கு நிறைய விஷயங்களைச் செய்யலாம்.

  • உடற்பயிற்சி செய்வதற்கான உத்வேகம் எனக்கு எப்படிக் கிடைக்கும்?

  • உடல் ஆரோக்கியமும் மன உறுதியும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்