தலைப்பு பக்கம்/ பிரசுரிப்போர் பக்கம்
யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 2009
2008 ஊழிய ஆண்டு அறிக்கை-உள்ளே
இது என்னுடைய புத்தகம். என் பெயர் ......................
‘நற்செய்தியைக் குறித்து முழுமையாய்ச் சாட்சி கொடுங்கள்.’—அப்போஸ்தலர் 20:24, NW.
அப்போஸ்தலன் பவுல் மூன்று மிஷனரிப் பயணங்களை முடித்திருந்த சமயம் அது. இதற்கிடையே அவருடைய வாழ்க்கையில் பல சோதனைகள், பல ஆசீர்வாதங்கள். அதன்பின், அவர் எருசலேமை நோக்கிச் சென்றார்; ஆனால், அங்கு நல்ல வரவேற்பு கிடைக்காதென்று அவர் அறிந்திருந்தார், ஏனென்றால் “கட்டுகளும் உபத்திரவங்களும்” அவருக்குக் காத்திருந்தன. (அப். 20:23) என்றாலும், அவர் மனந்தளரவில்லை. மிலேத்துவில் இருந்தபோது எபேசு சபையின் மூப்பர்களிடம் இப்படிச் சொன்னார்: “என் உயிர் எனக்கு முக்கியமல்ல, எஜமானராகிய இயேசுவிடமிருந்து நான் பெற்ற ஊழியத்தைச் செய்து முடிப்பதே எனக்கு முக்கியம்; கடவுளுடைய அளவற்ற கருணையைப் பற்றிய நற்செய்திக்கு முழுமையாகச் சாட்சி கொடுத்து என் ஓட்டத்தை முடிப்பதே எனக்கு முக்கியம்.”—அப். 20:24, NW.
பவுல் தன் உயிரை உயர்வாய்க் கருதினார். என்றாலும், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதே அவருக்கு மிகமிக முக்கியமானதாய் இருந்தது. உலகெங்கிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகளும் அவ்வாறே கருதுகிறார்கள். “சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்” என்று இயேசு முன்னரே சொல்லியிருந்தபோதிலும், நற்செய்தியை உலகின் கடைக்கோடிவரை அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். சொல்லப்போனால், எல்லாத் தேசத்தாருக்கும் தைரியமாகச் சாட்சி கொடுத்து வருகிறார்கள். (மத். 24:9) ஆகவே, கடவுளுடைய அளவற்ற கருணையை மதித்து, இடைவிடாமல் நற்செய்தியை அறிவிப்பீர்களாக. அதற்கு, 2009-ஆம் ஆண்டின் வருடாந்தர வசனம் உங்களை உந்துவிப்பதாக.
[பக்கம் 235-ன் படத்திற்கான நன்றி]
நன்றி: பக்கம் 168: Franc Drozg, கடிதம்; Photo Archive-Museum of National Liberation Maribor, Slovenia