தலைப்பு பக்கம்/ பிரசுரிப்போர் பக்கம்
யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 2008
2007 ஊழிய ஆண்டு அறிக்கை-உள்ளே
இது என்னுடைய புத்தகம். என் பெயர் ..........................
‘உறுதியாக நின்று யெகோவா அளிக்கும் இரட்சிப்பைப் பாருங்கள்’—யாத். 14:13, Nw.
சூழ்நிலை கைமீறிவிட்டதுபோல் தெரிந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 30 லட்சம் பேர், செங்கடலின் மேற்குக் கரையில் சிக்கிக்கொண்டு தவிப்புடன் நின்றார்கள்! எகிப்தியர்கள்மீது யெகோவா கொண்டுவந்த பத்து வாதைகளால் பார்வோனுக்கும் அவனுடைய படையினருக்கும் தலைகுனிவு ஏற்பட்டிருந்தது; எனவே, அவர்கள் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தார்கள். பசியுடன் இருக்கிற சிங்கங்கள் நிர்க்கதியாய் நிற்கும் விலங்கின்மீது பாய்வதைப் போல அவர்கள் பாய்ந்து வந்தார்கள். அதைக் கண்ட இஸ்ரவேலர் கதிகலங்கிப் போனார்கள். மோசே உரத்த சத்தமாய், “பயப்படாதிருங்கள். உறுதியாக நின்று, யெகோவா அளிக்கும் இரட்சிப்பைப் பாருங்கள். . . . யெகோவாதாமே உங்களுக்காகப் போரிடுவார்” என்று சொன்னார்.—யாத். 14:13, 14, NW.
அப்போது யெகோவா தம் பிரமிப்பூட்டும் வல்லமையைக் காட்டி, செங்கடலைப் பிளந்தார்; இவ்வாறு தம் மக்களைக் காப்பாற்றினார். கைமீறிவிட்டதுபோல் தெரிகிற எத்தனை எத்தனையோ சூழ்நிலைகளில் யெகோவா தம் மக்களைக் காப்பாற்றியிருக்கிறார், அல்லவா? இன்றும்கூட யெகோவா தம் ஊழியர்களுக்காகத் தொடர்ந்து போரிடுகிறார்; இந்த இயர்புக்கில் உள்ள பல அனுபவங்களிலிருந்து அதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். மேலே கொடுக்கப்பட்டுள்ள 2008-க்கான வருடாந்தர வசனம் யெகோவா அளித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தின்மீதும் உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துவதாக; அவருடைய அன்பான வழிநடத்துதலின் மீதுள்ள உங்கள் நம்பிக்கையைப் பலப்படுத்துவதாக.
[பக்கம் 2-ன் படங்களுக்கு நன்றி]
படங்களுக்கு நன்றி: பக்கம் 66: சுக்சீ: © B&C Alexander/Arcticphoto.com; பக்கம் 254: சூரிய அஸ்தமனம்: புகைப்படம்: www.comstock.com