உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w26 பிப்ரவரி பக். 32
  • ஒபதியா போல் கடவுள்பயத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒபதியா போல் கடவுள்பயத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2026
  • இதே தகவல்
  • ஒபதியா புத்தகத்துக்கான அறிமுகம்
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • விசுவாசமும் தேவபயமும் தருகிற தைரியம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • நாம் ஏன் யெகோவாவுக்குப் பயப்பட வேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • பைபிள் புத்தக எண் 31—ஒபதியா
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2026
w26 பிப்ரவரி பக். 32

பைபிள் உதாரணம்

ஒபதியா போல் கடவுள்பயத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்

பொல்லாத ஆகாப் ராஜாவின் அரண்மனை அதிகாரியாக இருந்தவர் ஒபதியா. பாகால் வணக்கம் இஸ்ரவேல் தேசம் முழுக்க பரவுவதற்கு ஆகாப் ராஜா விட்டுவைத்திருந்தார். ஆனால் ஒபதியா, “சின்ன வயதிலிருந்தே” யெகோவாமேல் பயபக்தியை வளர்த்திருந்தார். (1 ரா. 18:1-13) அதனால், யெகோவாவின் தீர்க்கதரிசிகளைக் கொல்ல, யேசபேல் ராணி கட்டளை போட்டபோது, தைரியமாகச் செயலில் இறங்கினார். வெறும் ஒரு தீர்க்கதரிசியை ஒளித்து வைப்பதே நடக்காத காரியமாக இருந்த சூழ்நிலையில், ஒபதியா 100 தீர்க்கதரிசிகளை ஒளித்து வைத்தார். கடுமையான பஞ்சம் இருந்த சமயத்தில்கூட அவர்களுக்கு உணவு கொடுத்துவந்தார். ராஜாவும் ராணியும் ஆட்டிவைக்கும் பொம்மைகளாக இருந்த நூற்றுக்கணக்கான பொய்த் தீர்க்கதரிசிகளின் கண்ணில்படாமல் இப்படி ஒரு செயலைச் செய்ய ஒபதியாவுக்கு எவ்வளவு தைரியம் தேவைப்பட்டிருக்கும்!—1 ரா. 18:19.

நமக்கு என்ன பாடம்? ஆகாப் ராஜாவை நினைத்து ஒபதியா பயந்தார்தான். ஆனால், அந்தப் பயத்தைவிட கடவுள்பயம் அவருக்கு ரொம்ப அதிகமாக இருந்தது. சகோதரர்களுக்காக உயிரையே பணயம் வைக்க அதுதான் அவருக்குப் பலம் தந்தது. நாம் வாழ்கிற இடத்தில் உண்மை வணக்கத்துக்குத் தடை இருந்தால், நாமும் கடவுள்பயத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். சோதனைகளைச் சந்திக்கும் சகோதர சகோதரிகளுக்கு உதவுவதற்குத் தேவையான பலத்தை கடவுள்பயம் நமக்குத் தரும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்