உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 மார்ச் பக். 5
  • யெகோவாவை நம்பியிருக்க மூன்று வழிகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவை நம்பியிருக்க மூன்று வழிகள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • ஜெபம்—நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு பாக்கியம்
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • ஜெபம்​—கடவுளிடம் நெருங்க வழி
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • யெகோவாவுக்கு பிடித்த மாதிரி தீர்மானம் எடுக்கிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • நம் தீர்மானங்கள் கடவுளுக்குப் புகழ் சேர்க்க...
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 மார்ச் பக். 5

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

யெகோவாவை நம்பியிருக்க மூன்று வழிகள்

யெகோவாவை நம்பியதால்தான் தாவீதால் கோலியாத்தை வெட்டி வீழ்த்த முடிந்தது. (1சா 17:45) தன்னை நம்புகிறவர்களுக்கு உதவ யெகோவா ஆசைப்படுகிறார். (2நா 16:9) அதனால், நம்முடைய அனுபவத்தையும் திறமையையும் நம்பியிருக்காமல் யெகோவாவை நம்பியிருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? இதோ மூன்று வழிகள்!

  • அடிக்கடி ஜெபம் செய்யுங்கள். தவறு செய்துவிட்டு யெகோவாவிடம் மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக தவறு செய்வதற்கான எண்ணம் வரும்போதே அவரிடம் உதவி கேளுங்கள். (மத் 6:12, 13) ஏற்கெனவே ஒரு முடிவு எடுத்துவிட்டு அதை ஆசீர்வதிக்கும்படி கேட்காமல் முடிவு எடுப்பதற்கு முன்பே வழிநடத்துதலுக்காகவும் ஞானத்துக்காகவும் ஜெபம் செய்யுங்கள்.—யாக் 1:5.

  • தவறாமல் பைபிளை ஆராய்ச்சி செய்து படியுங்கள். தினமும் பைபிளைப் படியுங்கள். (சங் 1:2) பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற கடவுளுடைய ஊழியர்களைப் பற்றி ஆழமாக யோசியுங்கள். அவர்களைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்களோ அதன்படி செய்யுங்கள். (யாக் 1:23-25) ஊழியத்துக்குப் போகும்போது இவ்வளவு நாட்களாக உங்களுக்குக் கிடைத்த அனுபவத்தை நம்பியிருக்காமல், ஒவ்வொரு தடவையும் பிரசுரங்களிலிருந்து நன்றாகத் தயாரித்துவிட்டுப் போங்கள். கூட்டங்களுக்கும் அதேபோல் தயாரித்துவிட்டுப் போனால் பிரயோஜனமாக இருக்கும்.

  • யெகோவாவின் அமைப்போடு ஒத்துழையுங்கள். அமைப்பு கொடுக்கிற வழிநடத்துதல்களை நன்றாகத் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். உடனடியாக அதன்படி நடங்கள். (எண் 9:17) மூப்பர்கள் கொடுக்கிற ஆலோசனையையும் அறிவுரையையும் கவனமாகக் கேளுங்கள்.—எபி 13:17.

ஒரு சகோதரரை போலீஸ் கைதுசெய்து கொண்டுபோகிறார்கள். செய்தியாளர்களும் மற்ற சகோதரர்களும் அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

துன்புறுத்தலை நினைத்து பயப்படவே வேண்டாம் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

• சகோதர சகோதரிகள் எதையெல்லாம் நினைத்து பயந்தார்கள்?

• பயத்தைச் சமாளிக்க அவர்களுக்கு எது உதவியது?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்