கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
வெளி ஊழியக் கூட்டம் எல்லாருக்கும் உதவியாக இருக்க சில டிப்ஸ்
வெளி ஊழியக் கூட்டமும் மற்ற கூட்டங்கள் மாதிரிதான்! அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவதற்கும் யெகோவா இந்தக் கூட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார். (எபி 10:24, 25) ஊழியத்துக்குப் பிரித்து விடுவது... எங்கே ஊழியம் செய்ய வேண்டும் என்று சொல்வது... ஜெபம் பண்ணுவது... இப்படி எல்லாவற்றையுமே ஐந்திலிருந்து ஏழு நிமிஷத்துக்குள் முடிக்க வேண்டும். (ஒருவேளை, ஏதாவதொரு கூட்டத்துக்குப் பிறகு ஊழியக் கூட்டம் நடந்தால் இன்னும் சீக்கிரமாக முடிக்க வேண்டும்.) அந்தந்த நாளுக்குப் பிரயோஜனமாக இருக்கிற விஷயங்களை ஊழியக் கூட்டத்தில் சொல்ல வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு வாரம் முழுவதும் ஊழியம் செய்யாதவர்கள், சனிக்கிழமை நடக்கிற வெளி ஊழியக் கூட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. அதனால், ஊழியத்தில் சந்திப்பவர்களிடம் என்ன பேசலாம் என்பதைப் பற்றிச் சொன்னால் அவர்களுக்குப் பிரயோஜனமாக இருக்கும். வெளி ஊழியக் கூட்டத்தில் வேறெந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் பேசலாம்?
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகத்தில், இப்படிப் பேசலாம் பகுதியில் இருப்பதைக் கலந்துபேசலாம்
உள்ளூரில் நடக்கிற ஒரு விஷயத்தை வைத்து அல்லது செய்திகளில் வந்த ஒரு விஷயத்தை வைத்து எப்படிப் பேச ஆரம்பிக்கலாம் என்று சொல்லலாம்
பொதுவாக வருகிற ஆட்சேபணையை எப்படிச் சமாளிக்கலாம் என்று சொல்லலாம்
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களிடம், பரிணாமத்தை நம்புகிறவர்களிடம், வேறு மொழியை பேசுபவர்களிடம் எப்படிப் பேசலாம் என்று சொல்லலாம். அதோடு, உங்கள் பகுதியில் ரொம்ப பிரபலமாக இல்லாத மதத்தைச் சேர்ந்தவர்களிடம் எப்படிப் பேசலாம் என்று சொல்லலாம்
நம்முடைய வெப்சைட்டிலோ JW லைப்ரரி அப்ளிகேஷனிலோ இருக்கிற விஷயத்தை அல்லது பைபிளில் இருக்கிற ஒரு அம்சத்தைப் பயன்படுத்தி எப்படிப் பேசலாம் என்று சொல்லலாம்
கற்பிப்பதற்கான கருவிகளில் இருக்கிற ஏதாவது ஒரு கருவியை எப்படிப் பயன்படுத்தலாம் என்று சொல்லலாம்
ஃபோன் வழியாக சாட்சி கொடுப்பது... கடிதங்கள் எழுதுவது... பொது ஊழியம் செய்வது... மறு சந்திப்புகள் செய்வது... பைபிள் படிப்பு நடத்துவது... இதைப் பற்றியெல்லாம் பேசலாம்
பாதுகாப்பாக இருப்பது... வளைந்துகொடுப்பது... நல்ல பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பது... நம்பிக்கையான மனநிலையை வளர்த்துக்கொள்வது... போன்ற விஷயங்களைப் பேசலாம்
கற்றுக்கொடுப்பது சிற்றேட்டில் இருக்கும் ஏதாவதொரு பாடத்திலிருந்து குறிப்புகளைச் சொல்லலாம் அல்லது வீடியோவைக் காட்டலாம்
கூடசேர்ந்து ஊழியம் செய்பவருக்கு எப்படி உதவலாம்... உற்சாகப்படுத்தலாம்... என்று சொல்லலாம்
ஊழியம் சம்பந்தப்பட்ட வசனத்தை அல்லது அருமையான ஓர் அனுபவத்தைச் சொல்லலாம்