உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 டிசம்பர் பக். 8
  • பத்திரிகைகளைத் தொடர்ந்து பயன்படுத்துங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பத்திரிகைகளைத் தொடர்ந்து பயன்படுத்துங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இதே தகவல்
  • ஊழியத்தில் பத்திரிகைகளைச் சிறப்பித்துக் காட்டுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2005
  • நம் பத்திரிகைகளை மிக நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1996
  • நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—பத்திரிகைகளைக் கொண்டு
    நம் ராஜ்ய ஊழியம்—1989
  • பத்திரிகை நடவடிக்கைக்காக நேரம் ஒதுக்குங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1993
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 டிசம்பர் பக். 8
ஒரு சகோதரி, ‘விழித்தெழு!’ பத்திரிகையில் இருக்கிற ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு பெண்ணிடம் பேசுகிறார்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பத்திரிகைகளைத் தொடர்ந்து பயன்படுத்துங்கள்

2018-லிருந்து வெளிவருகிற நம்முடைய பொது இதழ்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயத்தின் அடிப்படையில் விளக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பத்திரிகைகள் எல்லாமே ‘கற்பிப்பதற்கான கருவிகளின்’ பாகமானவைதான். அதனால், அவற்றை நாம் ஊழியத்தில் பயன்படுத்தலாம். பயணம் செய்யும்போதோ கடைக்குப் போகும்போதோ சில பத்திரிகைகளையும் எடுத்துக்கொண்டு போகலாம். பைபிள் படிப்பு எடுப்பதற்காக இந்தப் பத்திரிகைகளை நாம் பயன்படுத்துவதில்லை என்றாலும், ஒருவர் கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கான ஆர்வத்தை வளர்க்க இவை உதவும்.

ஒருவரிடம் பேச ஆரம்பித்த பிறகு, ஒரு வசனத்தைக் காட்டி, அந்த நபருக்கு ஏற்ற விஷயத்தை விளக்கும் ஒரு பத்திரிகையைப் பற்றி அவரிடம் சொல்லுங்கள். உதாரணத்துக்கு, அவர் ஒரு குடும்பத் தலைவராக இருந்தால் அல்லது வேதனையிலோ மன அழுத்தத்திலோ அவதிப்பட்டுக்கொண்டிருந்தால் அவரிடம் இப்படிச் சொல்லலாம்: “சமீபத்துல, இந்த விஷயத்த பத்துன ஒரு நல்ல கட்டுரைய படிச்சேன். அத உங்களுக்கு காட்டட்டுமா?” அவருக்கு ஆர்வம் இருப்பது தெரிய வந்தால், அப்போதே அந்தப் பத்திரிகையை அவருக்குக் கொடுக்கலாம், அல்லது அதன் எலக்ட்ரானிக் பிரதியை அவருக்கு அனுப்பலாம். பத்திரிகைகளைக் கொடுப்பது மட்டுமே நம்முடைய நோக்கம் கிடையாது. இருந்தாலும், இந்தப் பத்திரிகைகளைக் கொடுக்கும்போது, கற்றுக்கொண்ட விஷயங்களின்படி நடக்க விரும்புகிறவர்களை நம்மால் கண்டுபிடிக்க முடியும்.—அப் 13:48.

2018

படத்தொகுப்பு: 2018-ல் ‘காவற்கோபுரம்’ மற்றும் ‘விழித்தெழு!’ பத்திரிகைகளில் வெளிவந்த அட்டைப் படக் கட்டுரைகள். 1. ‘பைபிள் நம் காலத்துக்கு ஒத்துவருமா?’ 2. ‘எதிர்காலம் எப்படி இருக்கும்?’ 3. ‘கடவுளுக்கு உங்கள்மேல் அக்கறை இருக்கிறதா?’ 4. ‘சந்தோஷப் பாதையில் செல்ல...’ 5. ‘குடும்ப வாழ்க்கையின் வெற்றிக்கு 12 ரகசியங்கள்.’ 6. ‘உயிர் உதிரும்போது...’

2019

படத்தொகுப்பு: 2019-ல் ‘காவற்கோபுரம்’ மற்றும் ‘விழித்தெழு!’ பத்திரிகைகளில் வெளிவந்த அட்டைப் படக் கட்டுரைகள். 1. ‘கடவுள்​—⁠அவர் யார்?’ 2. ‘வாழத்தான் வேண்டுமா?’ 3. ‘வாழ்க்கை இவ்வளவுதானா?’ 4. ‘அமைதி தவழுமா உலகினிலே?’ 5. ‘அரும்புகளுக்கு ஆறு பாடங்கள்.’ 6. ‘வளமான வாழ்வுக்கு ஒரு வழிகாட்டி.’

2020

படத்தொகுப்பு: 2020-ல் ‘காவற்கோபுரம்’ மற்றும் ‘விழித்தெழு!’ பத்திரிகைகளில் வெளிவந்த அட்டைப் படக் கட்டுரைகள். 1. ‘உண்மைகளைத் தேடி...’ 2. ‘கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன?’ 3. ‘அன்பான இறைவனின் அழியாத ஆசிகள்.’ 4. ‘மன அழுத்தம் மறைந்திட...’ 5. ‘கண்ணீர் நிறைந்த வாழ்க்கை ஏன்?’ 6. ‘என்று ஒழியும் இந்தப் பாகுபாடு?’

நீங்கள் ஊழியம் செய்கிற பகுதியில் இருக்கிற மக்கள் எந்தெந்த விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்