கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
யோசேப்பைப் போல் இருங்கள்—பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுங்கள்
பாலியல் முறைகேட்டில் ஈடுபடுவதற்கான தூண்டுதல் வரும்போது என்ன செய்ய வேண்டும்? யோசேப்பு அதற்கு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறார். எஜமானின் மனைவி தன்னோடு படுக்கச் சொல்லிக் கூப்பிட்ட ஒவ்வொரு சமயத்திலும் யோசேப்பு அதை மறுத்துவிட்டார். (ஆதி 39:7-10) “நான் எப்படி இவ்வளவு பெரிய தவறு செய்து, கடவுளுக்கு விரோதமாகப் பாவம் பண்ணுவேன்?” என்று அவளிடம் அவர் சொன்னார். அவர் சொன்ன பதிலிலிருந்து அவரைப் பற்றி என்ன தெரிகிறது? மணத்துணைக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று யெகோவா விரும்புவதைப் பற்றி யோசேப்பு யோசித்திருந்தது தெரிகிறது. இப்படி யோசித்து வைத்திருந்தது, பாலியல் முறைகேட்டில் ஈடுபடுவதற்கான தூண்டுதல் வந்த சமயத்தில் அவருக்கு உதவி செய்தது. அங்கேயே இருந்து அந்தப் பெண் வீசிய வலையில் மாட்டிக்கொள்வதற்குப் பதிலாக, யோசேப்பு அங்கிருந்து ஓடிவிட்டார்.—ஆதி 39:12; 1கொ 6:18.
பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுங்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
என்ன சூழ்நிலையை ஜின் எதிர்ப்பட்டார்?
கணக்கு சம்பந்தமான வீட்டுப்பாடத்தில் தனக்கு உதவி செய்யும்படி மீ-கியாங் கேட்டபோது ஜின் தனக்குத்தானே என்ன கேட்டுக்கொண்டார்?
தனக்குக் கணக்கு சொல்லித்தர சொல்லி மீ-கியாங் கேட்டது ஜின்னை எப்படிப் பாதித்தது?
ஜின் எப்படி உதவி பெற்றுக்கொண்டார்?
பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுவதற்கு ஜின் என்ன செய்தார்?
இந்த வீடியோவிலிருந்து நீங்கள் என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டீர்கள்?