உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 பிப்ரவரி பக். 5
  • தம்பதிகள் தங்கள் திருமண பந்தத்தை எப்படிப் பலப்படுத்தலாம்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தம்பதிகள் தங்கள் திருமண பந்தத்தை எப்படிப் பலப்படுத்தலாம்?
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இதே தகவல்
  • உங்கள் மண வாழ்க்கையைப் பாதுகாத்திடுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • திருமண நாளுக்குப் பின்
    கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள்
  • திருமணம்—கடவுளின் பரிசு
    கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள்
  • திருமணம்​—⁠அன்புக் கடவுளின் பரிசு
    ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 பிப்ரவரி பக். 5
ஆபிராமும் சாராயும் ஊர் நகரத்தைவிட்டு கிளம்புவதற்காக தயாராகிறார்கள். ஆபிராம் ஒரு பெரிய மூட்டையை தூக்கிக்கொண்டு, கூடையில் சில பொருள்களை எடுத்து வைக்கும் சாராயை உற்சாகப்படுத்துகிறார்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

தம்பதிகள் தங்கள் திருமண பந்தத்தை எப்படிப் பலப்படுத்தலாம்?

ஒருவருக்கொருவர் அன்பையும் மரியாதையையும் காட்டுவதில் ஆபிரகாமும் சாராளும் திருமணமானவர்களுக்கு ஒரு சிறந்த உதாரணம். (ஆதி 12:11-13; 1பே 3:6) அதற்காக, அவர்களுடைய திருமண வாழ்க்கை ரோஜா படுக்கையாக இருந்தது என்று சொல்ல முடியாது; அவர்களும் பிரச்சினைகளைச் சகிக்க வேண்டியிருந்தது. ஆபிரகாம்-சாராளிடமிருந்து தம்பதிகள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

ஒருவரோடு ஒருவர் பேசுங்கள். விரக்தியிலோ எரிச்சலிலோ உங்கள் துணை பேசும்போது மனத்தாழ்மையோடு பதிலளியுங்கள். (ஆதி 16:5, 6) ஒன்றாக நேரம் செலவு செய்ய ஏற்பாடு செய்யுங்கள். உங்கள் துணையை நேசிக்கிறீர்கள் என்பதை வாயால் சொல்லுங்கள், செயலால் காட்டுங்கள். இவை எல்லாவற்றையும் ஓரிரு தடவையல்ல, எப்போதும் செய்யுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, இருவரும் சேர்ந்து படிப்பதன் மூலமும், ஜெபம் செய்வதன் மூலமும், யெகோவாவை வணங்குவதன் மூலமும் யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் பந்தத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். (பிர 4:12) பலமாக இருக்கும் திருமண பந்தங்கள், அந்த புனிதமான ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்த யெகோவாவுக்கு மகிமையைச் சேர்க்கும்.

திருமண பந்தத்தைப் பலப்படுத்துவது எப்படி? என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • இந்த வீடியோவில், ஷானுக்கும் க்ளாராவுக்கும் இடையில் பிரச்சினை இருந்தது என்பதை எவையெல்லாம் காட்டின?

  • கணவனும் மனைவியும் வெளிப்படையாகப் பேசுவது ஏன் முக்கியம்?

  • ஆபிரகாம் சாராளின் உதாரணம் ஷான்-க்ளாராவுக்கு எப்படி உதவியது?

  • தங்களுடைய திருமண பந்தத்தைப் பலப்படுத்த ஷானும் க்ளாராவும் என்னென்ன செய்தார்கள்?

  • கல்யாண வாழ்க்கை பிரச்சினையே இல்லாமல் இருக்க வேண்டுமென்று கணவனும் சரி, மனைவியும் சரி, ஏன் எதிர்பார்க்கக்கூடாது?

படங்களின் தொகுப்பு: ‘திருமண பந்தத்தைப் பலப்படுத்துவது எப்படி?’ என்ற வீடியோவிலிருந்து சில காட்சிகள். ஷானும் க்ளாராவும் தங்கள் திருமண பந்தத்தைப் பலப்படுத்த முயற்சி செய்கிறார்கள். 1. ஒவ்வொருவரும் சோஃபாவில் ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்திருக்கிறார்கள். 2. இருவரும் கைப்பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். 3. இருவரும் சந்தோஷமாக ஊழியம் செய்கிறார்கள்.

திருமண பந்தத்தை உங்களால் பலப்படுத்த முடியும்!

திருமண பந்தத்தை எப்படிப் பலப்படுத்தலாம் என்பதைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள, விழித்தெழு! பத்திரிகையிலும் jw.org®-லும் இருக்கிற இந்தக் கட்டுரைகளைப் பாருங்கள்:

  • “பிள்ளைகளைப் பிரிந்த பிறகு...”​—g17.4 பக். 10-11

  • “பிரச்சினைகளைப் பற்றி பேசுவது எப்படி?”​—g16.3 பக். 10-11

  • “மணவாழ்வில் மனக்கசப்பு ஏற்படும்போது...”​—g 4/14 பக். 14-15

  • “காதுகொடுத்துக் கேளுங்கள்”​—g 1/14 பக். 12-13

  • “வாக்குவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி?”​—g 4⁄13 பக். 8-9

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்