பைபிளில் இருக்கும் புதையல்கள் | அப்போஸ்தலர் 9-11
தீவிரமாகத் துன்புறுத்தியவர் தீவிரமாகச் சாட்சி கொடுக்கிறவராக ஆகிறார்
தான் கற்றுக்கொண்டதை சவுல் உடனடியாக நடைமுறைப்படுத்தினார். மற்றவர்கள் அப்படிச் செய்யத் தவறியபோதிலும் சவுல் அப்படிச் செய்ததற்கு என்ன காரணம்? ஏனென்றால், மனிதர்களை விட அவர் கடவுளுக்குத்தான் பயந்தார்; கிறிஸ்து காட்டிய இரக்கத்துக்கு ரொம்ப நன்றியோடு இருந்தார். நீங்கள் பைபிள் படிப்பு படிக்கிறீர்களா, இன்னும் ஞானஸ்நானம் எடுக்கவில்லையா? அப்படியென்றால், கற்றுக்கொண்டதன்படி நடப்பதற்கு உறுதியாக இருப்பதன் மூலம் நீங்கள் சவுலைப் பின்பற்றுவீர்களா?