அக்டோபர் 2-8
தானியேல் 7–9
பாட்டு 116; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“மேசியா தோன்றுவதைப் பற்றி தானியேலின் தீர்க்கதரிசனம் முன்கூட்டியே சொன்னது”: (10 நிமி.)
தானி 9:24—பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு மேசியாவின் பலி வழிசெய்தது (it-2-E பக். 902 பாரா 2)
தானி 9:25—மேசியா, 69 வார வருஷங்களின் முடிவில் தோன்றினார் (it-2-E பக். 900 பாரா 7)
தானி 9:26, 27அ—மேசியா, 70 வார வருஷங்களின் பாதியில் கொல்லப்பட்டார் (it-2-E பக். 901 பாரா. 2, 5)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
தானி 9:24—‘பரிசுத்தத்திலும் பரிசுத்தமானது’ எப்போது அபிஷேகம் செய்யப்பட்டது? (w01 5/15 பக். 27)
தானி 9:27—70 வார வருஷங்களின் கடைசி வரையில், அதாவது கி.பி. 36 வரையில், ‘பலருக்காக நீட்டிக்கப்பட்ட ஒப்பந்தம்’ எது? (w07 9/1 பக். 20 பாரா 4)
தானியேல் 7 முதல் 9 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) தானி 7:1-10
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
இந்த மாதம் ஊழியத்தில் எப்படிப் பேசலாம்?: (15 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. முதலில் ஒரு வீடியோவைக் காட்டுங்கள், பிறகு அதில் இருக்கும் முக்கியக் குறிப்புகளைக் கலந்துபேசுங்கள். மற்ற வீடியோக்களுக்கும் அப்படியே செய்யுங்கள். ஆர்வம் காட்டியவர்களை உடனடியாகப் போய்ப் பார்ப்பதற்குப் பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“பைபிளை இன்னும் ஆழமாக எப்படிப் படிக்கலாம்?”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். ஆராய்ச்சி செய்வது எப்படி? என்ற வீடியோவைக் காட்டுங்கள் (வீடியோக்கள் > நம் கூட்டங்களும் ஊழியமும் என்ற தலைப்பில் பாருங்கள்).
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 8 பாரா. 1-10
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 6; ஜெபம்