உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 ஏப்ரல் பக். 2
  • அவர்களை அன்போடு வரவேற்றிடுங்கள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அவர்களை அன்போடு வரவேற்றிடுங்கள்!
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இதே தகவல்
  • நினைவு ஆசரிப்பில் வரவேற்கப்படுகிறவர்களாய் அவர்களை உணரச்செய்யுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1994
  • வலிமையான சாட்சி கொடுக்கப்படும்
    நம் ராஜ்ய ஊழியம்—2011
  • ஆர்வங்காட்டியிருக்கிற அனைவருக்கும் உதவுதல்
    நம் ராஜ்ய ஊழியம்—1993
  • எல்லாரையும் வரவேற்க நீங்கள் தயாரா?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 ஏப்ரல் பக். 2

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

அவர்களை அன்போடு வரவேற்றிடுங்கள்!

யாரை? நம் கூட்டங்களுக்கு வரும் எல்லாரையும் அன்போடு வரவேற்றிடுங்கள். (ரோ 15:7; எபி 13:2) ஒருவேளை, வேறு நாட்டில் இருந்து வந்திருக்கும் ஒரு சாட்சியோ ரொம்ப காலம் கூட்டங்களுக்கே வராத ஒரு செயலற்ற பிரஸ்தாபியோ கூட்டத்துக்கு வந்திருந்தால் அவர்களையும் நீங்கள் அன்பாக வரவேற்க வேண்டும். அவர்களுடைய சூழ்நிலையில் நீங்கள் இருந்தால், நீங்களும் அதைத்தானே எதிர்பார்ப்பீர்கள்? (மத் 7:12) கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பும் கூட்டம் முடிந்த பிறகும் ராஜ்ய மன்றத்துக்கு வந்திருப்பவர்களுக்கு வாழ்த்து சொல்ல நீங்கள் ஏன் முயற்சி செய்யக்கூடாது? இப்படி செய்வது, சபையில் ஒரு அன்பான சூழலை ஏற்படுத்தும். அது யெகோவாவுக்கு மகிமை சேர்க்கும். (மத் 5:16) ஒவ்வொரு நபரையும் பார்த்து பேசுவது என்பது கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும், நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களை வரவேற்க முயற்சி செய்யும்போது எல்லாரும் சந்தோஷமாக உணருவார்கள்.a

சில விசேஷ நிகழ்ச்சிகளில், அதாவது நினைவு நாள் போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல, எல்லா சமயங்களிலும் புதியவர்களை அன்பாக வரவேற்க வேண்டும். நம் மத்தியில் கிறிஸ்தவ அன்பு இருப்பதை பார்க்கும்போது புதியவர்களும் யெகோவாவை புகழ்வார்கள். நம்மோடு சேர்ந்து அவரை வணங்குவார்கள்.—யோவா 13:35.

a சபை நீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லது சபையிலிருந்து தொடர்பறுத்துக் கொண்டவர்கள் நம் கூட்டங்களுக்கு வரும்போது நாம் அவர்களுக்கு வாழ்த்து சொல்லக்கூடாது என்று பைபிள் நியமங்கள் சொல்கிறது. —1கொ 5:11; 2யோ 10.

ஒரு சகோதரர் ராஜ்ய மன்றத்துக்கு புதிதாக வந்திருக்கும் நபர்களை அன்பாக வரவேற்கிறார்

புதியவர்களுக்கு உதவி செய்ய சில டிப்ஸ்

  • உங்களையே அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள். அவர்களுடைய பெயரை கேளுங்கள்

  • உங்கள் பக்கத்தில் உட்கார சொல்லுங்கள்

  • உங்களிடம் இருக்கும் பைபிளையும் பாட்டு புத்தகத்தையும் அவர்களுக்கு காட்டுங்கள்

  • அவர்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கூட்டம் முடிந்த பிறகு அதை விளக்குங்கள்

  • சரியான சந்தர்ப்பத்தில் பைபிள் படிப்பைப் பற்றி சொல்லுங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்