ஜூலை 27-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
ஜூலை 27-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 58; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 61 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 இராஜாக்கள் 15-17 (8 நிமி.)
எண் 1: 1 இராஜாக்கள் 15:16-24 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: நல்ல மனைவியா இருக்க பைபிள் எப்படி உதவுது?—அறிமுகம் பக். 27 பாரா. 1-2 (5 நிமி.)
எண் 3: தாவீது—தலைப்பு: தைரியமா இருங்க, இளமையில இருந்தே யெகோவாவுக்கு சேவை செய்யுங்க—1 சா. 13:14; 16:1-13, 18; 17:26-54; 2 சா. 7:8; 2 நா. 7:6; 29:26, 27 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்திற்கான வசனம்: ‘புறப்படுங்கள், எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்குங்கள்.’—மத். 28:19, 20.
10 நிமி: ஊழியத்தில் திறமைகளை மெருகூட்டுகிறீர்களா? கலந்து பேசுங்கள். பிப்ரவரி 2014 நம் ராஜ்ய ஊழியத்தில் “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...” கட்டுரையின் முதல் பாராவை மறுபார்வை செய்யுங்கள். இதுவரை வந்துள்ள சில கட்டுரைகளைப் பற்றி சுருக்கமாக சொல்லுங்கள். அந்தக் கட்டுரைகளால் எப்படி பயனடைந்தார்கள் என்று கேளுங்கள். ஒவ்வொரு மாதமும் இந்த பகுதிகளில் வருகிற விஷயத்தை ஊழியத்தில் பயன்படுத்தி திறமையை வளர்க்க முயற்சி எடுக்க சொல்லுங்கள். முக்கியமாக, “இந்த மாதம் இதை செய்து பாருங்கள்” பகுதியில் இருக்கும் விஷயத்தை கண்டிப்பாக செய்து பார்க்க சொல்லுங்கள்.
10 நிமி: உங்களுடன் பைபிள் படிப்பவர்களுக்கு “கடவுளுடைய புத்தகத்திற்கு ஓர் அறிமுகம்” புத்தகத்தை கொடுங்கள். கலந்து பேசுங்கள். பைபிளை நன்றாக பயன்படுத்த நம்மோடு பைபிள் படிப்பவர்களுக்கு உதவ வேண்டும்; அதற்கு இந்த புத்தகத்திலிருக்கும் பின்வரும் விஷயங்களை எப்படி பயன்படுத்தலாம் என்று கேளுங்கள்: (1) “பைபிள் வசனங்களைக் கண்டுபிடிக்க...” (2) கேள்வி 19: பைபிள் புத்தகங்களில் என்ன தகவல் இருக்கிறது? (3) கேள்வி 20: பைபிளை எப்படிப் படித்தால் பயனடையலாம்? கடைசியில், ஒரு நடிப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள். இப்போது பார்த்த ஏதாவது ஒரு விஷயத்தை பயன்படுத்தி பிரஸ்தாபி ஒருவர் நடித்து காட்டுவார். தன்னுடன் பைபிள் படிப்பவருக்கு, பைபிள் படிப்பு எடுத்து முடித்தவுடன் இந்த விஷயத்தை பற்றி பேசுவதுபோல் அந்த நடிப்பு இருக்க வேண்டும்.
10 நிமி: “ஊழியத்தில் பயன்படுத்தும் கருவிகள்.” கேள்வி-பதில்.
பாட்டு 125; ஜெபம்