பிப்ரவரி 16-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
பிப்ரவரி 16-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 69; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 35 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: நியாயாதிபதிகள் 15-18 (8 நிமி.)
எண் 1: நியாயாதிபதிகள் 16:13-24 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: பைபிளில் என்ன முக்கியமான விஷயம் இருக்கிறது?—அறிமுகம் பக். 8 பாரா. 1-4 (5 நிமி.)
எண் 3: அப்பொல்லோ—தலைப்பு: மனத்தாழ்மையானவர், பேச்சு திறமை உள்ளவர், சுறுசுறுப்பாக ஊழியம் செய்தவர்—அப். 18:24-28; 1 கொ. 1:10-12; 16:12 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாசத்துக்கான வசனம்: ‘நற்காரியங்கள் செய்வதில் வைராக்கியமுள்ளவர்களாக’ இருங்கள்!—தீத்து 2:14.
15 நிமி: சுறுசுறுப்பாக ஊழியம் செய்வதற்கு நன்றாக தயாரியுங்கள். கலந்தாலோசிப்பு. ஊழியத்துக்காக தயாரிப்பதற்கு முன் ஏன் ஜெபம் செய்ய வேண்டும்? (சங். 143:10; அப். 4:31) ஜெபம் செய்வது மட்டுமில்லாமல் வேறு என்ன செய்ய வேண்டும்? (எஸ்றா 7:10) ஊழியத்துக்கு கொண்டுபோகும் பையை தயாராக வைக்க நாம் என்னவெல்லாம் செய்யலாம்? நன்றாக தயாரித்துவிட்டு போகும்போது என்ன பலன்கள் கிடைக்கும்? (ஜூலை 15, 2008 காவற்கோபுரம், பக். 9-10 பாரா 9-ஐ பாருங்கள்.) நீங்கள் ஊழியத்துக்கு எப்படி தயாரிக்கிறீர்கள்? ஒரு நடிப்பு இருக்கும், நடிப்பில் ஒரு பிரஸ்தாபி ஊழியத்துக்கு போவதற்கு முன்பு தயாரிக்கிறார். அவரோட பையில் என்ன பிரசுரங்கள் இருக்கிறது, அந்த பிரசுரங்களில் என்ன தகவல்கள் இருக்கிறது என்று எடுத்துப் பார்க்கிறார். பிறகு பிரசுரங்களை பையில் சரியாக அடுக்குகிறார். வீடியோக்களை காட்ட அவருடைய செல்போன் (அல்லது டேப்லெட்) தயாராக இருக்கிறதா என்று பார்க்கிறார். ஊழியத்துக்கு போவதற்கு முன் நன்றாக தயாரிப்பது ரொம்ப முக்கியம் என்று சபையாரிடம் சொல்லுங்கள். (2 தீ. 3:17)
15 நிமி: “யெகோவாவையும் இயேசுவையும் வைராக்கியமாக பின்பற்றுங்கள்—நினைவுநாள் சமயத்தில்.” கேள்வி-பதில். எல்லாருக்கும் நினைவுநாள் அழைப்பிதழை கொடுங்கள். அதில் இருக்கிற தகவல்களை கலந்து பேசுங்கள். அழைப்பிதழை எப்படி கொடுக்கலாம் என்று 4-வது பக்கத்தில் இருக்கிறது. அதை நடித்து காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 30; ஜெபம்