ஜனவரி 12-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
ஜனவரி 12-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 42; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 29 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யோசுவா 21-24 (8 நிமி.)
எண் 1: யோசுவா 24:14–21 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: ஆகாஸ்—தலைப்பு: சிலைகளை வணங்கினால் யெகோவாவுக்கு பிடிக்காது—2 இரா. 16:3-6, 10-16, 20; 2 நா. 28:5-15, 17-19 (5 நிமி.)
எண் 3: யெகோவாதான் எல்லாவற்றையும் படைத்தார்—அறிமுகம் பக். 2 பாரா 3—பக். 3 பாரா 1 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்திற்கான வசனம்: ‘மனத்தாழ்மையோடு எஜமானருக்கு ஊழியம் செய்யுங்கள்.’—அப். 20:19.
10 நிமி: மனத்தாழ்மையோடு எஜமானருக்கு ஊழியம் செய்யுங்கள். கலந்தாலோசிப்பு. அப்போஸ்தலர் 20:19-ஐ படியுங்கள். பிறகு சபையில் இருக்கிறவர்களிடம் இந்தக் கேள்விகளை கேளுங்கள்: (1) ‘எஜமானருக்கு ஊழியம் செய்வது’ என்றால் என்ன? (2) நாம் எப்படி எஜமானருக்கு ஊழியம் செய்ய முடியும்? (3) மனத்தாழ்மை என்றால் என்ன? (4) நன்றாக ஊழியம் செய்ய மனத்தாழ்மை எப்படி உதவும்?
20 நிமி: “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... கோபப்படுகிறவர்களிடம் பொறுமையாக பேசுங்கள்.” கலந்து பேசுங்கள். கட்டுரை முடிந்த பிறகு சுருக்கமான இரண்டு நடிப்பு இருக்கும். நடிப்பு எதார்த்தமாக இருக்க வேண்டும். முதல் நடிப்பில், ஊழியத்தில் கோபமாக பேசுகிற ஒருவரிடம் பிரஸ்தாபியும் கோபமாக பேசுகிறார். இரண்டாவது நடிப்பில் பிரஸ்தாபி பொறுமையாக பதில் சொல்கிறார். கடைசியாக, “இந்த மாதம் இதை செய்து பாருங்கள்” என்ற தலைப்பில் இருக்கிற விஷயங்களை செய்ய சொல்லுங்கள்.
பாட்டு 76; ஜெபம்