உபசரிப்பது நம் கடமை
நம்மிடம் இருக்கும் “நல்ல விஷயங்களை” மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். அதற்கு, ‘உபசரிக்கும் பழக்கத்தை’ வளர்த்துக்கொள்ள வேண்டும். (மத். 12:35; ரோ. 12:13) இந்த விஷயத்தில் மூப்பர்கள் நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்கள்; மற்ற சபையில் இருந்து பேச்சு கொடுக்க வருபவர்களை அவர்கள் கவனித்துக்கொள்கிறார்கள்; சபைக்கு வந்து போவதற்கு ஆகும் செலவை மூப்பர்கள் கொடுக்கிறார்கள், அவர்கள் வீட்டிற்கு சாப்பிட அழைக்கிறார்கள். நாமும் மூப்பர்களை போலவே மற்றவர்களை உபசரிக்க வேண்டும். சில நேரங்களில் மற்றவர்களை வீட்டிற்கு அழைக்க நாம் தயங்கலாம். ‘அந்த அளவுக்கு என்கிட்ட பணம் இல்லையே’ என்று யோசிக்கலாம். அல்லது, ‘நம்ம வீட்டுக்கெல்லாம் அவங்க வருவாங்களா?’ என்று நினைக்கலாம். மார்த்தாளிடம் இயேசு என்ன சொன்னார் என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள். (லூக். 10:39-42) வகைவகையாக சமைத்து போடுவதைவிட, வீட்டிற்கு வருபவர்களோடு உட்கார்ந்து சந்தோஷமாக பேசுவதுதான் ‘மிகச் சிறந்தது’ என்று இயேசு சொன்னார். அவர் சொன்ன மாதிரி செய்தால் சகோதர சகோதரிகளை நன்றாக உபசரிக்க முடியும்.—3 யோ. 5-8.