நவம்பர் 10-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
நவம்பர் 10-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 67; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதைகள் கதை 16 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: உபாகமம் 19-22 (10 நிமி.)
எண் 1: உபாகமம் 22:20–30 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: கடவுளோடு நமக்கிருக்கும் பந்தத்தைப் பாவம் எப்படிப் பாதிக்கும்?—நியாயங்காட்டி பக். 374 பாரா 3-பக். 375 பாரா 2 (5 நிமி.)
எண் 3: லோத்துவின் மனைவி திரும்பிப் பார்த்தாள்—பைபிள் கதைகள் கதை 15 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
10 நிமி: ஊழியக் கண்காணியை பேட்டி எடுங்கள். நீங்கள் சபையில் என்னென்ன வேலை செய்கிறீர்கள்? நீங்கள் ஏன் ஒவ்வொரு ஊழிய தொகுதியையும் சந்திக்கிறீர்கள்? அப்படி சந்திப்பதால் ஊழிய தொகுதியில் இருக்கிறவர்களுக்கு என்ன பலன் கிடைக்கிறது? ஊழியத்தில், மறுசந்திப்பில், பைபிள் படிப்பில் திறமையாக பேச உதவி கேட்கிறவர்களுக்கு எப்படி உதவி செய்கிறீர்கள்? ஊழியத்தில் வரும் பிரச்சினைகளைத் தவிர்க்க, பிரஸ்தாபிகளுக்கு எப்படி உதவி செய்கிறீர்கள்?
20 நிமி: “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... அக்கறை காட்டுங்கள்.” கலந்தாலோசிப்பு. இந்த மாதத்திற்கான பிரசுரத்தை ஊழியத்தில் கொடுப்பதுபோல் இரண்டு நடிப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள் (அறிவிப்புகளில் பாருங்கள்). முதல் நடிப்பில், பிரஸ்தாபி அக்கறையே இல்லாமல் ஊழியத்தில் பேசுகிறார். இரண்டாவது நடிப்பில், அக்கறையாக பேசுகிறார்.
பாட்டு 84; ஜெபம்