செப்டம்பர் 22-ல் துவங்கும் வாரத்தின் அட்டவணை
செப்டம்பர் 22-ல் துவங்கும் வாரம்
பாட்டு 135; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதைகள் கதை 7 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 30-32 (10 நிமி.)
எண் 1: எண்ணாகமம் 32:16–30 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: சாத்தான் கலகம் செய்ததுமே கடவுள் ஏன் அவனை உடனடியாக அழிக்கவில்லை?—நியாயங்காட்டி பக். 363 பாரா 3-பக். 364 பாரா 1 (5 நிமி.)
எண் 3: ஒரு பெரிய கோபுரத்தை மனிதர் கட்டுகின்றனர்-பைபிள் கதைகள் கதை 12 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
15 நிமி: உங்களிடையே கடினமாக உழைக்கிறவர்களுக்கு மரியாதை காட்டுங்கள். (1 தெ. 5:12, 13) பின்வரும் கேள்விகளைக் கலந்தாலோசியுங்கள்: (1) சபையில் மூப்பர்கள் எப்படிக் கடினமாக உழைக்கிறார்கள்? (2) அவர்களை மிக உயர்வாகக் கருதுவதை எப்படிக் காட்டலாம்? (3) அவர்களுக்கு ஏன் உற்சாகம் தேவை? (4) மூப்பர்களையும் அவர்களுடைய குடும்பத்தாரையும் எப்படி உற்சாகப்படுத்தலாம்? (5) மூப்பர்களுக்குக் கீழ்ப்படிவதால் சபைக்கும் மூப்பர்களுக்கும் என்ன நன்மை?
15 நிமி: “jw.org வெப் சைட்டை ஊழியத்தில் பயன்படுத்துங்கள்.” கலந்தாலோசிப்பு. பாரா 2-ல் உள்ள அணுகுமுறையை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள். பிறகு, சபையாரிடம் இப்படிக் கேளுங்கள்: நம்முடைய ஃபோன், டாப்லெட் போன்ற எலக்ட்ரானிக் கருவிகளில் வீடியோவை டவுன்லோட் செய்வதால் என்ன நன்மை? நீண்ட முன்னுரையை சொல்லாமல் அல்லது வீட்டுக்காரரிடம் அனுமதி கேட்காமல் அந்த வீடியோவை போட்டுக் காட்டுவது ஏன் நல்லது? இந்த வீடியோவை ஊழியத்தில் காட்டியதால் என்ன அனுபவங்கள் உங்களுக்குக் கிடைத்திருக்கின்றன? jw.org வெப் சைட்டின் பல அம்சங்களைப் பற்றி தெரிந்துகொள்ளவும் அதை ஊழியத்தில் பயன்படுத்தவும் சபையாரை உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 84; ஜெபம்