ஆகஸ்ட் 11-ல் துவங்கும் வாரத்தின் அட்டவணை
ஆகஸ்ட் 11-ல் துவங்கும் வாரம்
பாட்டு 116; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
சித்தம் பாடங்கள் 20-22 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 7-9 (10 நிமி.)
எண் 1: எண்ணாகமம் 9:9-23 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: ஒருமுறை இரட்சிக்கப்பட்டவர் எப்போதும் இரட்சிக்கப்பட்டவர் என்று சொல்ல முடியாது—நியாயங்காட்டி பக். 358 பாரா 4-பக். 359 பாரா 1 (5 நிமி.)
எண் 3: ஆகான்—கடவுளுக்குச் சொந்தமானதைத் திருடினால் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டும்—யோசு 7:4-26 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
5 நிமி: “1914-2014: கடவுளுடைய அரசாங்கத்தின் நூறு வருட ஆட்சி!” கலந்தாலோசிப்பு. இதே பக்கத்திலுள்ள பாராவை வாசியுங்கள். ஊழிய கூட்டத்தில் இந்த மாதம் சிந்திக்கப்படும் விஷயங்கள் கடவுளுடைய அரசாங்கத்தைச் சிறப்பித்துக் காட்டும். ஊழியத்திற்காகச் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளைப் பற்றி சொல்லுங்கள்.
10 நிமி: “நம்முடைய வெப் சைட் துண்டுப்பிரதியைப் பயன்படுத்துங்கள்” துண்டுப்பிரதியிலுள்ள விஷயங்களைச் சபையாரோடு கலந்துபேசுங்கள். ஊழியத்தில் ஒரு பிரஸ்தாபி, இந்தத் துண்டுப்பிரதியைக் கொடுப்பது போல் ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். பின்பு தன்னிடம் இருக்கும் எலக்ட்ரானிக் கருவியைப் பயன்படுத்தி jw.org வெப் சைட்டை வீட்டுக்காரருக்குக் காட்டுகிறார்.
15 நிமி: “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி தைரியமாகப் பேசுங்கள்.” கலந்தாலோசிப்பு. இரண்டு பிரஸ்தாபிகள் இந்தச் சூழ்நிலையை நடித்துக் காட்டுகிறார்கள்: ஒரு கடையில் பிரஸ்தாபி, பொருள்கள் வாங்குவதற்காக வரிசையில் நின்றுகொண்டிருக்கிறார். அவர் பக்கத்தில் இருக்கும் ஒருவர் செய்தித்தாளைப் பார்த்து இப்படிச் சொல்கிறார்: “இந்த உலகம் போற போக்க பாத்தா பயமா இருக்கு. எல்லாம் சரியாயிடும்னு சொல்றாங்க. ஆனா நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிட்டேதான் போகுது!” பிரஸ்தாபி தனக்குத் தானே பேசிக்கொள்கிறார், ‘இவர்கிட்ட நான் எப்படியாவது சத்தியத்த சொல்லணும். கடவுளுடைய அரசாங்கத்த பத்தி பேசியே ஆகணும்.’ பிரஸ்தாபி அந்த நபரிடம் இப்படிச் சொல்கிறார்: “உண்மைதான் இன்னிக்கு நிலைமை ரொம்ப மோசமாயிட்டே போகுது. ஆனா என்கிட்ட ஒரு துண்டுப்பிரதி இருக்கு, அதை படிச்சு பார்க்கிறீங்களா? வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் தெரிஞ்சிக்க இதுல இருக்கிற வெப் சைட் எனக்கு ரொம்ப பிரயோஜனமா இருந்துச்சு.” துண்டுப்பிரதியிலுள்ள ஒரு குறிப்பை பிரஸ்தாபி சிறப்பித்து காட்டும்போது அதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள அந்த நபர் ஆர்வம் காட்டுகிறார்.
பாட்டு 92; ஜெபம்