மே 5-ல் துவங்கும் வாரத்தின் அட்டவணை
மே 5-ல் துவங்கும் வாரம்
பாட்டு 8; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
கண்ணோட்டம் பகுதி 20 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 23–26 (10 நிமி. )
எண் 1: யாத்திராகமம் 25:1-22 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: ஆதாம் ஓய்வுநாளைக் கடைப்பிடித்ததாக பைபிளில் எந்தப் பதிவும் இல்லை—நியாயங்காட்டி பக். 346 பாரா 4–பக். 347 பாரா 2 (5 நிமி.)
எண் 3: ஆபிரகாம்—ஆபிரகாமின் ஆரம்பகால சரித்திரம் விசுவாசத்திற்கு ஒரு நல்ல முன்மாதிரி—ஆதி 5:32; 11:10, 26, 32; 12:4; 14:22; 15:7; 24:3; 1நா 1:28; நெ 9:7; அப் 7:2-4 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
10 நிமி: மே மாதத்தில் பத்திரிகைகளை அளியுங்கள். கலந்தாலோசிப்பு. இதே பக்கத்திலுள்ள அணுகுமுறையைப் பயன்படுத்தி ஏப்ரல்–ஜூன் விழித்தெழு!-ஐ அளிப்பதுபோல் முதலில் நடித்துக் காட்டுங்கள். பிறகு, அந்த நடிப்பை ஆரம்பத்திலிருந்து முடிவுவரை கலந்தாலோசியுங்கள். கடைசியில், அந்தப் பத்திரிகையை நன்றாகப் படித்து ஊழியத்தில் ஆர்வத்தோடு அளிக்க உற்சாகப்படுத்துங்கள்.
10 நிமி: சபைத் தேவைகள்.
10 நிமி: எப்படிச் செய்தோம்? கலந்தாலோசிப்பு. “ஊழியத்தில் நம் திறமைகளை மெருகூட்ட... உங்களோடு ஊழியம் செய்பவருக்கு உதவுங்கள்” என்ற கட்டுரை சபையாருக்கு எப்படிப் பயனுள்ளதாக இருந்ததெனக் கேளுங்கள். நல்ல அனுபவங்கள் ஏதாவது இருந்தால் சொல்லச் சொல்லுங்கள்.
பாட்டு 103; ஜெபம்