பிப்ரவரி 3-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
பிப்ரவரி 3-ல் துவங்கும் வாரம்
பாட்டு 133; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
கண்ணோட்டம் பகுதி 7 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 21-24 (10 நிமி.)
எண் 1: ஆதியாகமம் 23:1-20 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: இயேசு ஏன் மனித உருவத்தில் காட்சியளித்தார்?—நியாயங்காட்டி பக். 334 பாரா 4–பக். 335 பாரா 3 (5 நிமி.)
எண் 3: ஆபேல்—கடவுளை பிரியப்படுத்தும் விதத்தில் விசுவாசம் காட்டுங்கள்—ஆதி. 4:2-8; எபி. 11:4 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
10 நிமி: பிப்ரவரியில் பத்திரிகைகளை அளியுங்கள். கலந்தாலோசிப்பு. இதே பக்கத்திலுள்ள அணுகுமுறையைப் பயன்படுத்தி ஜனவரி-மார்ச் விழித்தெழு!-வை அளிப்பதுபோல் முதலில் நடித்துக் காட்டுங்கள். பிறகு, அந்த அணுகுமுறையை ஒவ்வொரு வாக்கியமாக வாசித்து, அதை ஏன் கொடுத்திருக்கிறார்கள் என்று கலந்தாலோசியுங்கள். அதை ஊழியத்தில் பயன்படுத்தும்போது சொந்த வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றும், சில மாற்றங்களைச் செய்யலாம் அல்லது வேறொரு அணுகுமுறையைப் பயன்படுத்தலாம் என்றும் நினைவுபடுத்துங்கள். முடிவில், நம் பத்திரிகைகளை நன்றாகப் படிக்கவும், அதை ஊழியத்தில் ஆர்வத்தோடு பயன்படுத்தவும் உற்சாகப்படுத்துங்கள்.
10 நிமி: சபைத் தேவைகள்.
10 நிமி: நாம் என்ன சாதித்தோம்? ஊழியக் கண்காணி கலந்தாலோசிப்பார். பிராந்தியத்தில் ராஜ்ய செய்தி எண் 38 எந்தளவு விநியோகிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லுங்கள். இதில் கலந்துகொண்டதால் கிடைத்த நன்மைகளையும் நல்ல அனுபவங்களையும் கேளுங்கள்.
பாட்டு 25; ஜெபம்