“நான் எதுக்கு வந்திருக்கேன்னா . . .”
வீட்டுக்குவீடு ஊழியத்தில் நாம் மக்களைச் சந்திக்கும்போது நாம் யார், எதற்காக வந்திருக்கிறோம் போன்ற கேள்விகள்தான் அவர்கள் மனதில் வரும். அவர்களுடைய குழப்பத்தைப் போக்க நாம் என்ன செய்யலாம்? சில பிரஸ்தாபிகள் வாழ்த்து சொல்லி தங்களை அறிமுகப்படுத்தியதும் தாங்கள் வந்ததற்கான காரணத்தைச் சொல்கிறார்கள். உதாரணத்திற்கு, “நாங்க இங்க எதுக்கு வந்திருக்கோம்னா, நிறைய பேர் வன்முறை இல்லாத காலம் வரணும்னு ஆசைப்படறாங்க, அது வரும்னு நினைக்கிறீங்களா?” அல்லது வீட்டுக்காரரின் மதப் பின்னணியைப் பொறுத்து அவர்களிடம், “பைபிள பத்தி எல்லாருக்கும் இலவசமா கற்றுக்கொடுக்கத்தான் நான் வந்திருக்கேன்” என்று சொல்கிறார்கள். நாம் வந்ததற்கான காரணத்தை ஆரம்பத்திலேயே சொன்னால் என்ன சொல்ல வந்திருக்கிறோம் என்பதைக் காதுகொடுத்துக் கேட்பார்கள். நம்முடைய முன்னுரை கனிவாகவும் சாதுரியமாகவும் இருந்தால் வீட்டுக்காரரின் கவனத்தை ஈர்ப்பதோடு அவர்களுடைய சந்தேகத்தையும் போக்கலாம்.