அக்டோபர் 21-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
அக்டோபர் 21-ல் துவங்கும் வாரம்
பாட்டு 6; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘‘சாட்சி கொடுங்கள்’ அதி. 26 பாரா. 1-8, பெட்டி பக். 204 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 தெசலோனிக்கேயர் 1–2 தெசலோனிக்கேயர் 3 (10 நிமி.)
எண் 1: 1 தெசலோனிக்கேயர் 2:9–20 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: சாலொமோன் செய்த நல்ல காரியங்களிலிருந்தும் கெட்ட காரியங்களிலிருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?—ரோ. 15:4 (5 நிமி.)
எண் 3: கலப்பு விசுவாசத்தைப் பற்றி பைபிளின் கருத்து என்ன?—நியாயங்காட்டி பக். 325 பாரா 1–பக். 326 பாரா 2 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
15 நிமி: நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? கலந்தாலோசிப்பு. மாற்கு 1:40-42; 7:32-35 மற்றும் லூக்கா 8:43-48-ஐ வாசிக்கச் சொல்லுங்கள். ஊழியம் செய்ய இந்தப் பதிவுகள் நமக்கு எப்படி உதவுமெனச் சிந்தியுங்கள்.
15 நிமி: “நம் வெப்சைட்டை பயன்படுத்தி பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்.” கேள்வி-பதில். பாரா 3-ஐ சிந்திக்கும்போது, “பேரன்ட்ஸ் கைடு”-ஐ எங்கே பார்க்கலாம் என்பதை விளக்குங்கள். அதில் இருக்கும் வழிமுறைகளை ஓர் உதாரணத்துடன் விளக்குங்கள். பாரா 4-ஐ சிந்திக்கும்போது, நம் வெப்சைட்டை குடும்ப வழிபாட்டில் எப்படிச் சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதைக் கேளுங்கள்.
பாட்டு 88; ஜெபம்