அக்டோபர் 14-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
அக்டோபர் 14-ல் துவங்கும் வாரம்
பாட்டு 100; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 25 பாரா. 14-21 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: பிலிப்பியர் 1–கொலோசெயர் 4 (10 நிமி.)
எண் 1: பிலிப்பியர் 3:17–4:9 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: ஒருவர் தன் பெற்றோரின் மதத்தை விட்டுவிடுவது சரியா?—நியாயங்காட்டி பக். 324 பாரா. 1-3 (5 நிமி.)
எண் 3: கெட்ட ஆசைகளை விட்டொழிக்க ஜெபம் எப்படி நமக்கு உதவும்?—லூக். 11:9-13; யாக். 1:5 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
15 நிமி: நமது சர்வதேச ஐக்கியம் யெகோவாவுக்குக் கனம் சேர்க்கிறது. ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 165, பாரா 2 முதல் பக்கம் 168-ன் உபதலைப்பு வரை உள்ள தகவலின் அடிப்படையில் பேச்சு. நம் மத்தியில் நிலவும் ஐக்கியமும் அன்பும் எப்படி சாட்சிகொடுக்க உதவியிருக்கிறது என்பதைக் காட்டுகிற அனுபவங்கள் நம் பிரசுரங்களில் வெளிவந்துள்ளன; சபையாரில் சிலர் அவற்றிலிருந்து குறிப்புகள் சொல்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: “விவேகத்துடன் நற்செய்தியை அறிவியுங்கள்” கேள்வி-பதில். பாரா 3-ஐக் கலந்தாலோசித்த பிறகு, வீட்டுக்காரருடைய சூழ்நிலைக்கேற்ப தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்வது போல் இரண்டு சுருக்கமான நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். சூழ்நிலைக்கேற்ப அணுகுமுறையை மாற்றியவுடன் நடிப்பை நிறுத்திவிடலாம்.
பாட்டு 47; ஜெபம்