செப்டம்பர் 23-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
செப்டம்பர் 23-ல் துவங்கும் வாரம்
பாட்டு 60; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 24 பாரா. 16-21 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 கொரிந்தியர் 8-13 (10 நிமி.)
எண் 1: 2 கொரிந்தியர் 10:1-18 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: ஒருவர் இவ்வாறு சொன்னால், ‘மறுபிறப்பில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது’—நியாயங்காட்டி பக். 321 பாரா. 1-3 (5 நிமி.)
எண் 3: 1 கொரிந்தியர் 10:13-ஐ நாம் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்? (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: “இதை வாங்கிக்கொண்டால்தான் அதை வாங்கிக்கொள்வேன்.” கலந்தாலோசிப்பு. வீட்டுக்காரர் இப்படிச் சொல்லும்போது எப்படிப் பதிலளித்தார்கள் எனச் சொல்லும்படி சபையாரைக் கேளுங்கள்.
10 நிமி: கடந்த வருடத்தில் நாம் எப்படி ஊழியம் செய்தோம்? ஊழியக் கண்காணி கொடுக்கும் பேச்சு. கடந்த ஊழிய ஆண்டில் சபையார் எந்தளவு ஊழியத்தில் ஈடுபட்டார்கள் என்பதைச் சொல்லும்போது அவர்கள் சாதித்த காரியங்களைச் சிறப்பித்துக் காட்டுங்கள். பொருத்தமான விஷயங்களுக்குப் பாராட்டு தெரிவியுங்கள். இந்த ஊழிய ஆண்டில் சபையாக எதில் முன்னேற்றம் செய்யலாம் என்பதைப் பற்றி ஓரிரு குறிப்புகள் சொல்லுங்கள். அதற்கு உதவும் நடைமுறையான ஆலோசனைகளையும் அளியுங்கள்.
15 நிமி: நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? கலந்தாலோசிப்பு. அப்போஸ்தலர் 16:19-40-ஐ வாசிக்கும்படி சொல்லுங்கள். இந்த வசனங்கள் ஊழியத்தில் நமக்கு எப்படி உதவும் எனச் சிந்தியுங்கள்.
பாட்டு 44; ஜெபம்