ஆகஸ்ட் 12-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஆகஸ்ட் 12-ல் துவங்கும் வாரம்
பாட்டு 63; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 22 பாரா. 15-21 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ரோமர் 5-8 (10 நிமி.)
எண் 1: ரோமர் 6:21–7:12 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: சில கிறிஸ்தவர்கள் ஏன் கிறிஸ்துவுடன் இருக்கும்படி பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள்?—நியாயங்காட்டி பக். 316 பாரா. 3-6 (5 நிமி.)
எண் 3: ஆன்மீகக் காரியங்களைவிட பொருளாதார காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன் ஆபத்தானது?— மத். 6:33; 1 தீ. 6:10 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: “கடவுளுடைய வார்த்தை கற்பிக்கப் பிரயோஜனமுள்ளது.” கேள்வி-பதில். வட்டார மாநாடு நடைபெறும் தேதி தெரிந்தால் அதை அறிவிக்கவும்.
10 நிமி: ஊழியத்திற்குக் குறிப்புத்தாள் எப்படி உதவும். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 167, பாரா 1 முதல் பக்கம் 168, பாரா 1 வரை கலந்தாலோசிப்பு. ஒரு பிரஸ்தாபி தனக்குத்தானே பேசிப் பார்ப்பதுபோல் ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். அவர் ஊழியத்திற்குச் செல்லும் முன்பு சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டு இந்த மாதத்திற்குரிய பிரசுர அளிப்பை எப்படிக் கொடுக்கலாம் என்று தன் மனதில் சொல்லிப் பார்க்கிறார்.
10 நிமி: நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? கலந்தாலோசிப்பு. அப்போஸ்தலர் 8:26-31-ஐ யாராவது வாசிக்கச் சொல்லுங்கள். நம் ஊழியத்திற்கு இந்த விவரப்பதிவு எப்படி உதவும் என்பதைச் சிந்தியுங்கள்.
பாட்டு 61; ஜெபம்