ஜூலை 22-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூலை 22-ல் துவங்கும் வாரம்
பாட்டு 103; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 21 பாரா. 14-22 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: அப்போஸ்தலர் 22-25 (10 நிமி.)
எண் 1: அப்போஸ்தலர் 22:17-30 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: நாம் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் எந்த விதங்களில் அதன் பாகமாக இல்லாதிருக்கிறோம்?—யோவா. 17:15, 16 (5 நிமி.)
எண் 3: கிறிஸ்தவர்கள் தங்கள் மாம்ச உடல்களுடன் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவது சாத்தியமா?—நியாயங்காட்டி பக். 314 பாரா. 1-2 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: மாணாக்கரின் இதயத்தை எட்டுங்கள். (லூக். 24:32) பின்வரும் கேள்விகளின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. (1) பைபிள் படிப்பை நடத்தும்போது இவ்விஷயங்களை வலியுறுத்துவது ஏன் முக்கியம்: (அ) யெகோவாவின் அன்பு மற்றும் ஞானம்? (ஆ) பைபிள் நியமங்களைக் கடைப்பிடிப்பதன் அவசியம்? (இ) எந்தவொரு தீர்மானம் எடுப்பதற்கு முன்னும் யெகோவாவின் வழிநடத்துதலை நாடுவதன் அவசியம்? (2) மாணாக்கரின் இதயத்தை எட்டுகிறீர்களா என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் கேள்விகளை அவரிடம் கேட்பது எப்படி உதவும்: (அ) இது உங்களுக்கு நியாயமாகப் படுகிறதா? (ஆ) இது கடவுளுடைய அன்போடு முரண்படுவதாக நினைக்கிறீர்களா? (இ) இந்த அறிவுரையைப் பின்பற்றுவதால் என்ன நன்மை இருப்பதாக நினைக்கிறீர்கள்?
20 நிமி: “சகோதரர்களே, நீங்கள் தகுதிபெற முயற்சி செய்கிறீர்களா?” கேள்வி-பதில். இளவயதில் மூப்பராக அல்லது உதவி ஊழியராக நியமிக்கப்பட்ட ஒரு சகோதரரைச் சுருக்கமாகப் பேட்டி காணுங்கள். உதவி ஊழியராக நியமிக்கப்படுவதற்கு முன்பு என்ன நியமிப்புகளையும் பயிற்சியையும் அவர் பெற்றார்? ஆன்மீக முன்னேற்றம் செய்ய சபையிலிருந்த மற்றவர்கள் எப்படி உதவினார்கள்? தகுதிபெற முயற்சி எடுத்ததால் என்ன ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கிறார்?
பாட்டு 85; ஜெபம்